Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-33

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-33
----
முதலில் நமக்கென்று ஓர் இலட்சியம் இருந்தாக வேண்டும். ஒழுக்கமாக இருப்பதே நம்முடைய இலட்சியத்தின் முடிவல்ல. மாறாக, அது ஓர் இலட்சியத்தை அடையச் செய்யும் பாதையாக மட்டும் தான் இருக்கிறது.
முடிவான இலட்சியம் என்ற ஒன்று இல்லாமற்போனால் நாம் ஏன் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்? நான் எதற்காக மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்?நான் ஏன் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யக்கூடாது? இன்பமாக இருப்பதுதான் மக்களுடைடைய இலட்சியம் என்றால், நான் என்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டு மற்றவர்களை. ஏன் துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாது? அப்படிச்செய்வதிலிருந்து என்னை எது தடுத்து நிறுத்துகிறது?
-----
பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்.
----
தெய்விகத் தன்மை இல்லாமல் பெறப்படுகின்ற மித மிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தன்களாக்கி விடுக்கின்றன.
----
வேதங்கள் பைபிள், குரான் ஆகிய இவற்றுக்கும் அப்பால் மக்களை நாம் அழைத்துப் போக விரும்புகிறோம். என்றாலும் இந்தச் செயலை வேதங்கள், பைபிள், குரான் ஆகியவற்றைச் சமரசப்படுத்தி வைப்பதன் மூலமாகத்தான் சாதிக்க முடியும். எல்லா மதங்களும், ஒரு பரம்பொருளான அந்த ஒரே ஒரு மதத்தின் புறத்தோற்றங்களே ஆகும்.
-----
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்தபோதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம். அவனுக்கு உலகில் செல்வம் எதுவுமே இல்லாமலிருக்கலாம். அப்படி இருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால்அவன் இலௌகிகத்தில் ஒரேயடியாக மூழ்கியவனே ஆவான்.
----
ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் இலட்சியமே; மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது என்பதுதான் மேலும் கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபடமுடியும்?- இதுவே வேதாந்தம் அறிவுரையாக வழங்கும் செய்தியாகும்.

No comments:

Post a Comment