Thursday, 17 November 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -50

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -50
-- 
சுவாமிஜியிடம் கேட்கப்பட்ட கேள்வி!
பிப்ரவரி 7ல் நடைபெற்ற கேள்வி-பதில், காலையில் சுமார் 200 பேர் கேஸில் கெர்னனுக்கு முன்னால் போடப்பட்டிருந்த பந்தலில் கூடினார்கள். அன்று கேள்ளி-பதில் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. மனத்திற்கும் ஜடப்பொருகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. சுவாமிஜி அனைத்திற்கும் பொறுமையாக, தெளிவாகப் பதில் அளித்தார். காலை ஒன்பது மணியளவில் நிகழ்ச்சி நிறுப்பத்தூரிலிருந்து சைவர்கள் சிலர் வந்திருந்தனர். அத்வைத நெறி சம்பந்தமாக ஒரு கேள்வித்தாளுடன் வந்தனர். சுவாமிஜி அவர்களுக்குப் பதில் அளிக்கத் தயாரானார்.
கேள்வி: 'வெளிப்படாமல் இருக்கின்ற பரம்பொருளிலிருந்து, வெளிப்பட்டுத் தோன்றுகின்றன இந்த உலகம் எப்படித் தோன்றியது?'
பளிச்சென்று வந்தது சுவாமிஜியின் பதில்.
சுவாமிஜி: 'எப்படி, ஏன், எங்கிருந்து போன்ற கேள்விகள் உலகத்தைச் சார்ந்தவை. பரம்பொருளோ உலகத்தைக் கடந்தவர். மாற்றங்கள், காரிய - காரண நியதி போன்றவற்றைக் கடந்தவர். எனவே உங்கள் கேள்வி சரியானதல்ல. சரியான கேள்வியைக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.'
இவ்வாறு அவர்கள் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தகுந்த பதில் தாமதமின்றி வந்தது. கேள்விகள் கேட்டு இவரைத் திணறடித்துவிடலாம், மடக்கிவிடலாம் என்றெல்லாம் யாராவது நினைத்திருந்தார் அது தவறென்று அப்போது நிரூபணமாயிற்று. கேள்வி கேட்டவர்கள் அமைதியாயினர்.
-
பிப்ரவரி 9ம் தேதியன்று சுவாமிஜி இரண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். அளசிங்கர் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்திற்கு சுவாமிஜியை அழைத்திருந்தார். அங்கே சுவாமிஜி 'நம் முன் உள்ள பணி' என்ற தலைப்பில் பேசினார். அன்று மாலையில் விக்டோரியா ஹாலில் சுவாமிஜியின் முதல் பொதுச் சொற்பொழிவு நடைபெற்றது. இதன் தலைப்பு 'எனது போர் முறை' சுவாமிஜியின் வெற்றிக்குச் சிலர் தாங்களே காரணம் என்பது போல் பிரச்சாரம் செய்திருந்தனர். அவற்றை மறுத்து உண்மை நிலை என்ன என்பதை இந்தச் சொற்பொழிவின் மூலம் எடுத்துக் கூறினார் சுவாமிஜி.
அந்தச் சொற்பொழிவில் பலருடைய உண்மை நிலையை அவர் வெளிக்கொணர வேண்டியதாயிற்று. தியாசபிக் சொசைட்டியினர், பிரம்ம சமாஜத்தினர், பாதிரிகள் ஆகியோர் உண்மையில் அவருக்கு உதவவில்லை. மாறாக, அவருக்கு எவ்வளவு தடைகளை உண்டாக்க வேண்டுமோ அதையே செய்தனர் என்பதைத் துறவியான அவர் எந்தத் தயக்கமுமின்றி, துணிச்சலாகப் பேசினார். சுவாமிஜியின் நேரடியான தாக்குதல் பலருக்கும் பிடிக்கவில்லை.
சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், சென்னை வரவேற்பு கமிட்டியின் தலைவராக இருந்தவருமாக நீதிபதி சுப்பிரமணிய ஐயர் சுவாமிஜியிடம் தமது நெருக்கமான தொடர்பை விட்டுவிட்டார். ஏஎனனில் அவர் தியாபிகல் சொசைட்டியில் முக்கிய அங்கத்தினர். ஆனால் இதுபோன்ற எந்தப் பிரிச்சினைகளும் சுவாமிஜியைப் பாதிக்கவில்லை. தமது நிலைபற்றி அவர் சுவாமிஜியைப் பாதிக்கவில்லை. தமது நிலை பற்றி அவர் பிரம்மானந்தருக்கு எழுதினார். 'தியாசபிக் சொசைட்டியினரும் பிறரும் என்னைப் பயமுறுத்த விரும்பினர். ஆதலால் நான் என் மனத்தில் உள்ளதைச் சிறிது அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. நான் அவர்களுடன் சேராததால் அவர்கள் என்னை எப்போதும் அமெரிக்காவில் நெருக்கிக் கொண்டே இருந்தனர் என்பது உனக்குத் தெரியும்...நீ பயப்பட வேண்டாம். நான் தனியாக வேலை செய்யவில்லை. இறைவன் எப்போதும் என்னுடன் உள்ளார்.
-
சுவாமிஜியின் பணி என்பது சாதாரண மானிட உடம்பு தாக்குப் பிடிக்கத்தக்க பணியா? உடல் ரீதியாக மட்டும் சிந்தித்தால் கூட திகைப்பாக இருக்கிறது! சாதாரணமாகப் பேசுவதிலேயே அதிக ஆற்றல் வீணாகிறது. அதிலும், ஒலி பெருக்கி இல்லாத காலத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒலி பெருக்கி இல்லாத காலத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்ற கூட்டத்தில் அனைவரும் கேட்கும்படிப் பேசுவது, எத்தனை ஆற்றலைச் செலவிட வேண்டிய ஒரு செயல்! இப்படி சொற்பொழிவுகள் எத்தனை? ஒன்றா, இரண்டா? இத்தனையையும் ஏற்றுக்கொண்டு அவர் வாழ்ந்தாரே அதுதான் ஆச்சரியம், நாம் செய்த பாக்கியம்! சுவாமிஜியை 'பிரேம மூர்த்தி' அதாவது அன்பின் வடிவம் என்று போற்றுகிறது துதிப் பாடல் ஒன்று. நமக்காக, நாட்டிற்காக, தமது உடல்நிலை உட்பட அனைத்தையும் தியாகம் செய்த அன்பு வடிவம் அவர்!
சுவாமிஜி சில நாட்கள் தங்களுடன் இருப்பார், பிறகு போய்விடுவார் என்பது சென்னை அன்பர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் உண்மை அதுதான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அவரது செய்தியைத் தக்க வைத்துக் கொள்வது அவரையே தங்களுடன் வைத்துக் கொள்வது போல்தான். இன்றும் சொல்லப்போனால், சுவாமிஜிக்கும் அதுவே விருப்பமானதாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்த சென்னை அன்பர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். சென்னையிலிருந்து சுவாமிஜி புறப்படுவதற்கு முந்தின நாள் அவரிடம் சென்னையில் நிரந்தர அமைப்பு ஒன்று ஏற்படுத்துவது பற்றி பேசினார்கள். சுவாமிஜி வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து அதனை உரிய வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நிரந்தர அமைப்பு ஒன்று வேண்டும் என்ற வரையில் சுவாமிஜி அவர்களது விருப்பத்திற்கு இசைந்தார். ஆனால் தாம் வருவதுபற்றி அவர் எதுவும் கூறவில்லை. மாறாக, 'நான் உங்களுக்காக என் சகோதரத் துறவி ஒரு வரை அனுப்புகிறேன். இஙஙகே உள்ள வைதீகர்களுக்கெல்லாம் வைதீகராக இருக்கின்ற ஒருவர் அவர்' என்று தெரிவித்தார்.
-

--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment