விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -52
--
சுவாமிஜி சென்னையிலிருந்து கல்கத்தா சென்று சேர்ந்தார். சென்னையைப்போலவே அங்கேயும் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
-
சுவாமிஜி வாழ்ந்த காலத்தில் பிராமணர்கள் மட்டுமே ஆச்சார்யர்களாக இருந்து மக்களுக்கு போதிக்க வேண்டும்,இந்துக்கள் கடல் தாண்டி வெளிநாடு சென்று இந்து மதத்தை போதிக்க கூடாது என்ற நியதி இருந்தது. சுவாமிஜி பிறப்பால் பிராமணர் அல்ல,அதேபோல் இந்து மதத்தை வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தார்.இது பலரை வெறுப்புக்குள்ளாக்கியது. இது தொடர்பாக பல அறிக்கைகளும் பத்திரிக்கைகளில் வெளிவந்தன.
-
கல்கத்தாவை சேர்ந்த உயர் பதவி வகித்தவர்கள், கல்கத்தா மன்னர் போன்றவர்கள் இந்த காரணத்தினால் சுவாமிஜியை வரவேற்க வரவில்லை.அது மட்டுமல்ல அப்போதைய கல்கத்தா நீதிபதியும் சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் அவரது குரு கொடுத்தது அல்ல,அவர் தாமாகவே வைத்துக்கொண்டது,அது மட்டுமல்ல அவர் ஒரு சூத்திரர் என்று கூறி அவரை வரவேற்க வரவில்லை.
-
ஆனால் சாதாரண பொது மக்கள் சுவாமிஜியை வரவேற்க திரண்டிருந்தார்கள்.சுமார் 20,000பேர் சுவாமிஜியை வரவேற்க திரண்டிருந்தனர்.அவர்கள் சுவாமிஜியை ஊர்வலமாக அழைத்து சென்றார்கள். வீதிகளில் கொடிகள் தோரணங்கள்,மலர் மாலைகள் வைக்கப்பட்டன.
-
ஒருநாள் சுவாமிஜி தனது தாயை சந்திக்க சென்றார்.சுவாமிஜியின் பிரிவால் அவர்களது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.அவரது தங்கை தற்கொலை செய்துகொண்டாள். சுவாமிஜி தாயின் மடியில் சிறிது நேரம் தலை வைத்து படுத்திருந்தார்.தாயின் கையால் உணவை உண்டு மகிழ்ந்தார்.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள் வழக்கம்போல் அவர் வாழ்ந்த தட்சிணேசுவரக்காளி கோவிலில் கொண்டாடுவது வழக்கம். அந்த ஆண்டும் அதேபோல கொண்டாட முடிவு செய்யப்பட்டது.காலை 9 மணி அளவில் சுவாமிஜி வெளிநாட்டு சீடர்களுடன் காளிகோவிலுக்கு சென்று அங்கு வழிபட்டார்.அப்போது அங்கு 60,000பேர் கூடியிருந்தார்கள். சுவாமிஜி இந்து மதத்தை வெளிநாட்டில் பிரச்சாரம் செய்தது அங்குள்ள கோவில் நிர்வாகத்தினருக்கு பிடிக்கவில்லை. ஆகவே சுவாமிஜியை அடுத்த முறை கோவிலுக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதை கேள்வியுற்ற சுவாமிஜி மிகவும் மனம் வேதனையுற்றார். ஸ்ரீராமகிருஷ்ணரை சந்தித்து,பேசி,மகிழ்ந்து விளையாடிய இடம் தட்சிணேஷ்வரம் காளிகோவிலும் அதை சுற்றியுள்ள இடங்களும். அங்கு சுவாமிஜிக்கு நுளைய தடை.
-
சுவாமிஜி மனம் கலங்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கென்று ஒரு கோவில் கட்டுவதற்கு இதுவே சரியான நேரம் என்பதை புரிந்துகொண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் அனைவருடனும் கலந்துபேசி ராமகிருஷ்ணருக்கு ஒரு கோவில் கட்ட முடிவு செய்ப்பட்டது. அதேபோல் துறவிகள் மற்றும் இல்லற பக்தர்களை ஒன்றிணைத்து ராமகிருஷண மிஷன் உருவாக்கப்பட்டது.
-
தொடரும்...
---
---விவேகானந்தர் விஜயம்---

No comments:
Post a Comment