சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-37
-----
🌿 பழங்கால மதங்கள் எல்லாவற்றிலுமே ஒரு பொதுவான கருத்தைக் காணலாம். இந்த வாழ்க்கையின் துன்பங்கள் எல்லாமே மறைந்து, இன்பங்களே மிஞ்சும் ஒரு காலம் வரும், அப்போது இந்தப் பூமியே சொர்க்கமாக மாறி விடும் என்பதே அந்தக் கருத்து.
🌿 எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
---
🌿 இந்த உலகம் எப்போதும் இப்படியேதான் இருக்கும். நான் சொல்வது பயங்கரமான விஷயம்தான். ஆனால் சொல்லாமல் வழியில்லை.
🌿 உலகின் துன்பம், குணப்படுத்த முடியாத மூட்டுவாதம் போன்றது. உடம்பில் ஓர் இடத்தில் இதைக் குணப்படுத்தினால் வேறிடத்திற்குச் செல்லும். அங்கிருந்து துரத்துங்கள், வேறு ஓர் இடத்தில் அதை உணர்வீர்கள். என்ன செய்தாலும், அது இடத்திற்கு இடம் தாவிக்கொண்டே இருக்குமே தவிர உடம்பை விட்டுப் போகாது.
----

🌿 இந்த உலகில் முன்னேற்றம் என்று நீங்கள் சொல்வதெல்லாம், ஆசைகளைப்பெருக்கிக் கொள்வதே தவிர வேறெதுவுமாக எனக்குத் தெரியவில்லை.
🌿 எனக்குத் தெளிவாகத் தெரிவதெல்லாம் ஆசைகளே துன்பம் அனைத்தையும் கொண்டு வருகின்றன என்பதுதான். இந்த நிலை, எப்பொழுதும் எதையாவது யாசித்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் நிலைதான்.
🌿 பார்ப்பதையெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ள மனிதன் விரும்புகிறான். அந்த விருப்பம் இல்லாமல் அவனால் எதையும் பார்க்க முடியாது. இன்னும் அதிகம் வேண்டும் என்று ஏங்குகிறான். அதை பெறுவதற்காக வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுகிறான்.
---
🌿 நம் ஆசைகளைத் திருப்திப்படுத்தும் சக்தி கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால், ஆசைகளின் சக்தி பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது.
---
🌿 உலகிலுள்ள இன்ப துன்பங்களின் மொத்த அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்யாமல் எப்போதும் அப்படியேதான் இருக்கிறது.
🌿 கடலில் ஓர் இடத்தில் அலை எழுந்தால் அது மற்றோரிடத்தில் பள்ளத்தை உண்டாக்குகிறது.
--
🌿 ஒருவனுக்கு இன்பம் வந்தால், மற்றொருவனுக்கோ, ஒருவேளை மற்றொரு பிராணிக்கோ துன்பம் வருகிறது. மனிதர்களின் தொகை பெருகிறது, ஆனால் சில மிருகங்களின் தொகை குறைகிறது. நாம் அந்த மிருகங்களைக்கொன்று, அவை வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறோம். நாம் வாழ்வதற்கான வழிகளை அவற்றிடமிருந்தே பெறுகிறோம்.
---
🌿 உலகில் இன்பம் அதிகரிக்கிறதென்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? வலிமைமிக்க இனங்கள் எளிய இனங்களை அழித்தே வாழ்கின்றன. ஆனால் இந்த வலிமைமிக்க இனம் சந்தோஷமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment