Sunday, 20 November 2016

சுவாமி விவேகானந்தர்

நல்லவை அனைத்தின் ஆற்றல்களையும் திரட்டு.நீ கடவுளாகும் வழியில் எந்த சமூக இயக்கம் குறுக்கிட்டாலும் ஆன்மீக சக்திக்கு முன்னால் அது விலகிப்போகும்
-சுவாமி விவேகானந்தர்
--
இந்த உலகைப் படைக்கத் தன்னையே தியாகம் செய்தான் இறைவன்.தியாகம் இன்றி பெரிய செயல்கள் எதையும் செய்ய முடியாது.
-சுவாமி விவேகானந்தர்
--
ஆன்ம சக்தியை எழுப்பு, அதை இந்தியாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையில் எங்கும் பரவச செய். மற்றவை அனைத்தும் தானாக வந்து சேரும்.
-சுவாமி விவேகானந்தர்
--
பெயரும் உருவமும் உள்ளவை அனைத்தும் பெயரும் உருவமும் இல்லாதவையின் ஆதிக்கத்தில் இருக்கின்றன.வேதங்களின் நிலைத்த உண்மை இதுவே.வேதாந்த சிங்கம் கர்ஜிக்கட்டும்,நரிகள் வளைகளில் ஒளிந்துகொள்ளும்
-சுவாமி விவேகானந்தர்
--
முதலில் நாம் தெய்வங்கள் ஆவோம், பிறகு பிறர் தெய்வங்களாக மாற உதவுவோம்.இது நமது லட்சியமாக இருக்கட்டும்.மனிதனை பாவி என்று சொல்லாதே. நீ தெய்வம் என்று அவனிடம் சொல்--சுவாமி விவேகானந்தர்
--
உலகிலுள்ள மற்ற எல்லா மதங்களும் எல்லையற்ற பெயரற்ற,என்றுமுள்ளதான வேத மதத்தில் அடங்கியுள்ளன.ஏனெனில் கடவுளைப்பற்றிய உண்மையான அறுதிக்கருத்துக்களை வேதங்கள் மட்டுமே கூறுகின்றன.நூற்றுக்கணக்கான பிறவிகளில் நீ முயற்சி செய்யலாம்,கற்பகோடி காலம் உன் மனத்தின் ஆழ்பகுதிகள் ஒவ்வொன்றையும் துருவி ஆராயலாம்,ஆனால் எல்லையற்ற ஆன்மீகச்சுரங்கமாகனிய வேதங்களில் இல்லாத சிறந்த மதக்கருத்து எதையும் நீ காண முடியாது.
-
—சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment