சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-55
--
.இந்தியாவிலுள்ள எல்லாத் தீமை களுக்கும் அடிப்படை வேராக அமைந்துள்ளது இந்த நாட்டு ஏழை மக்களின் இழிந்த நிலையே ஆகும். மேலை நாட்டு ஏழை மக்களைப் பேய்கள் என்று தான் சொல்ல வேண்டும் அவர்களோடு ஒப்பிட்டால் நம் நாட்டு மக்களைத் தேவ தூதர்கள் என்றே சொல்ல வேண்டும் ஆகவே இவர்களின் நிலையைச் சுலபமாக உயர்த்திவிடலாம். இவர்கள் இழந்துவிட்ட தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளும் படி செய்வதே இப்போது நாம் இவர்களுக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்.
-
. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவில் சீர்திருத்தமன்றங்களும்,சீர்திருத்தகாரர்களும் நீர்க்குமிழிகளைப் போலத் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தோ! அவர்களின் ஒவ்வொருவரும் தோல்வியே அடைந்திருக்கின்றனர். சீர்திருத்தத்தின் இரகசியம் எங்கே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நமது சமுதாயத்திலுள்ள எல்லாத் தீமைகளையும் மதத்தின் மேலேயே அவர்கள் சுமத்தி விட்டார்கள். தன் நண்பனின் நெற்றியிலே உட்கார்ந்த கொசுவைக் கொல்வதற்காக ஒருவன் முயற்சி செய்தான். அவன் கொடுத்த பலமான அடிகள் மனிதனையும் கொசுவையும் சேர்த்தே கொன்று விட்ட கதையைப் போல இந்தச் சீர் திருத்த முறைகளும் அமைந்துவிட்டன. ஆனால் இந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக அசைக்க முடியாத ஒரு பெரிய பாறையின் மீதே மோதிக் கொண்டார்கள். மோதலினால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியே அவர்களை நசுக்கி அழித்துவிட்டது சுயநலம் இல்லாத உயர்ந்த ஆனால் அதே சமயத்தில் தவறான வழியில் சென்ற அந்தச் சீர்திருத்தக்காரர்களின் புகழ் வாழட்டும். உறங்குகிற கும்பகர்ணனை எழுப்புவதற்கு அந்தப் பெரிய அதிர்ச்சிகளெல்லாம் தேவைப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் அழிவு வேலைகளைச் சேர்ந்தவையே ஆகும்; ஆக்கப்பணிகள் ஆகிவிடா.இந்தக் காரணத்தால் தான் அந்த முயற்சிகள் எல்லாம் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. எனவே தான் அவையாவும் அழிந்து போயிருக்கின்றன. நாம் அவர்களை வாழ்த்துவோமாக அவர்களின் அனுபவத்தின் மூலமாக நாம் பயனடைவோம்.
--
நீ கிழக்கு மேற்குத் திசைகள் எல்லாவற்றிலும் முயற்சி செய்து பார் இந்து என்னும் இனம் முற்றிலும் அழிந்து மறைந்து அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய இனம் அந்த இடத்துக்கு வரும் வரையிலும் இந்தியா அழிந்து மறையும் வரையிலும் இந்தியா ஒரு போதும் ஐரோப்பாவாக ஆகிவிடாது.
-
.எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர் கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. இந்தியத் தாய் தயாராகக் காத்திருக்கிறாள். அவள் உறங்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறாள். எழுமின் ! விழிமின் இந்த நமது தாயகமாகிய தேவி தனது அழிவற்ற அரியணையின் மீது புத்திளமை பெற்றவளாக. முன்பு எப்போதும் இருந்ததை விடவும் அதிகமான மகிமை கொண்ட வளாக அமர்ந்திருப்பதைக் காணுங்கள்.
--
. கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம்.உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் நாட்டின் சுமை முழுவதும் உங்களின் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும் உலகத்தின் கதிமோட்சத்திற் காகவும் பணியாற்றுங்கள் வேதாந்தத்தின் ஒளியையும் வாழ்க்கை முறைகளையும் வீட்டுக்கு வீடு எடுத்துச் செல்லுங்கள், ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் தெய்விகத் தன்மையை அதன் மூலமாக வெளிப்படுத்துங்கள்.
--
.உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம். காலமெல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும் இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
--
. இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், நவீனத்தலை முறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய உங்களிடம்தான் என் நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக் கருத்துக்கள் பரவும் வரை யிலும் அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக் களைப் பரப்பிப்கொண்டே செல்வார்கள்.
--
. தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும் அதன் பிறகு தான்ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
--
. மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துக் சிறிதளவு நினைப்பதுங்கூடத் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது. நான் உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும். நீங்கள் அனைவரும் பிறருக்காக உழைத்து உழைத்து அந்தப் பணியில் இறந்து போவதையே நான் விரும்புகிறேன், நீங்கள் அவ்விதம் இறந்தபோனால் நான் மிகவும் மகிழ்வேன். எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கும் உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள் அப்படி இல்லாவிட்டால் இந்த மரம் கல் முதலியவற்றுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment