சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-35
----
----
'ஆற்றலை இறைவன் அளிப்பார்'
--
திருவனந்தபுரத்தில் பேராசியர் சுந்தரராம ஜயரின் இல்லத்தில் தங்கினார் சுவாமிஜி. சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அறிஞர்களும் மேதைகளும் சாதாரண மனிதர்ககளும் அவரைச் சந்திக்க வந்தனர். அவர் பேசிய ஒவ்வொன்றிலும் ஒரு தனி ஒளி இருந்ததைக் கண்டார் ஜயர். எனவே அவரிடம் ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு சுவாமிஜி தாம் இதுவரை மேடையில் பேசியதில்லை என்றும், அதற்கு முற்பட்டால் பிறரது கேலியும் தோல்வியுமே பலனாக இருக்கும் என்று கூறி மறுத்தார். ஐயர் விடவில்லை. அமெரிக்காவில் நடைபெறப் போகின்ற சர்வமத மகாசபையில் இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி கலந்து கொள்ள வேண்டும் என்று மைசூர் மன்னர் கேட்டுக் கொண்ட விஷயம் ஐயருக்குத் தெரிந்திருந்தது. எனவே அதனைக் கூறி, 'இந்த மேடைக்குத் தயங்குகின்ற நீங்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நேரடியாகப் பதில் கூறாத சுவாமிஜி, 'என்னைத் தமது கருவியாக்கிக் கொள்ள வேண்டும், நான் சில பணிகள் செய்ய வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொண்டார் அதற்கான ஆற்றலையும் அவரே தந்தருள்வார்' என்றார்.

'அப்படி ஒருவனுக்குத் திடீரென்று அவர் ஆற்றலைக் கொடுப்பாரா, கொடுக்க முடியுமா?' என்று சந்தேகத்தை எழுப்பினார் ஐயர். அவ்வளதான், பொங்கி எழுந்தார் சுவாமிஜி. நீங்கள் பெயரளவிற்குத்தான் வைதீகர். உங்கள் தினசரி பூஜை, பாராயணம் அனைத்தும் உள்ளீடற்றவை. இதயத்தில் நம்பிக்கையே இன்றி இதையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள், இல்லாவிட்டார், வாழ்க்கையில் தேவையானவற்றை இறைவனால் கொடுக்க முடியும் என்பதைச் சந்தேகிப்பீர்களா?' என்று இடிபோல் முழங்கினார். 'சம்மட்டிபோல் இறங்கின அவரது சொற்கள்' என்று எழுதுகிறார் ஐயர்.
ஐயரின் வீட்டில் உள்ளவர்களும் சரி, வெளியிலிருந்து வருபவர்களும் சரி சுவாமிஜியைச் சந்திப்பதை ஒரு பேறாகவே கருதினர். ஒவ்வொருவரிடமும் அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து பேசுவது சுவாமிஜிக்குக் கைவந்த கலையாக இருந்தது. இதனால் அவரிடம் பழகுகின்ற ஒவ்வொருவரும் நிறைவு பெற்றனர். ஸ்பென்சர், ஷேக்ஸ்பியர், காளிதாசர், டார்பிவின் பரிணாம வாதம், யூதர் வரலாறு, ஆரிய நாகரீகம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று அவர் பேசிய துறைகள் ஏராளம். இங்கு தங்கிய சில நாட்களில் சுவாமிஜி சில தமிழ் வார்த்தகளையும் கற்றுக் கொண்டார்.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment