பொன்மொழிகள் .பகுதி-34

சுவாமி விவேகானந்தரின்
பொன்மொழிகள் .பகுதி-34
-----
ஒழுக்கம் உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலைபெற்றிரு மத சம்பந்தமான தத்துவ உண்மைகளைப் போட்டு உனது மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
-----
கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் செய்வதில்லை. மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை.
----
சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.
-----
நெடுங்காலமாக இந்தியாவில் மதம் தேக்க நிலையில் உள்ளது.அதை செயல் நிலைக்கு கொண்டுவருவதே நாம் செய்ய வேண்டியது.
-----
நமது முதல் வேலை அத்வைத நெறியை அனைவருக்கும் பரப்புங்கள்.அதன் மூலம் தற்கால விஞ்ஞானத்தின் எதிர்ப்புகளை தாங்கும் சக்தியை நம் மதம் பெறும்.
----
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்.ஆகவே எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
----
வேதத்தின் மீது அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தான் வேதம் படிக்க வேண்டும் என்று எந்த வேதங்களிலும் இல்லை.
----
நாம் இனத்தால், மொழியால், ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நமது மதமாகும். அது தான் நமது பொதுவான அடித்தளம்.
----
கடவுளை கண்டிருக்கிறாயா? நீ ஆன்மாவை கண்டிருக்கிறாயா? இல்லையென்றால் இறைவனின் திருநாமத்தை பிரச்சாரம் செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
----
நமது சொந்த ஆன்மாவை நாம் அறிவும் வரை நமக்கு முக்தியே கிடையாது
----
ஒருவன் தன்னிடம் நம்பிக்கை இழக்கிறான் என்றால், கடவுளிடம் நம்பிக்கை இழக்கிறான் என்றே பொருள்
----
மேலை நாகரீகங்கள் அஸ்திவாரம் வரை ஆட்டம் கண்டுவிட்டது. விரைவிலேயே இந்த நாகரீகங்கள் மறைந்துவிடப்போகிறது. பொறுமையாக காத்திருங்கள். எதிர்காலம் நம்முடையது தான்.

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6