Sunday, 20 November 2016

நான் கடவுளுடன் ஒன்றுபட்டிருப்பதாக உண்மையிலே உணர்ந்திருந்தால் தீய வழியில் செல்ல மாட்டேன்

சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜியிடம் சில இளைஞர்கள் கேள்விகளை எழுப்பினர்.
சுவாமிஜி, இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள் எவை?' என்று கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கேட்டார். 'கடவுள் நம்பிக்கை, வேதங்களில் நம்பிக்கை, கர்ம நியதி, மறுபிறவிக் கொள்கை. இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா? மனிதன் தவறிலிருந்து உண்மைக்குப் பயணம் செய்கிறான் என்று மற்ற மதங்கள் கூறுகின்றன. அவன் உண்மையிலிருந்து உண்மைக்கு, தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்குப் போகிறான் என்கிறது இந்துமதம். வேதங்களை ஆழ்ந்து படித்தால் அங்கே சமரக் கருத்துதான் காணப்படுகிறது. பரிணாமக் கருத்தின் கோணத்தில் பேதங்களைப் படிக்க வேண்டும்.'
ஒரு நாள் மொத்தப் படித்தவர்கள் சிலர் அவரைக் காண வந்தனர். சுவாமிஜி தம்மை அத்வைதி என்று கருதுபவர். அத்வைதம் அறுதி உண்மைபற்றி பேசுகிறது. 'உயிர், உலகம், அறுதி உண்மை என்று பிரிவுகள் கிடையாது. இருப்பது ஒன்றே, அதுவே நான்' என்பது அதன் கருத்து. வந்தவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஒரு சவால் விடுவது போலவே சுவாமி4யிடம், 'நீங்களும் கடவுளும் ஒன்றே என்று கூறுகிறீர்கள். இதன்மூலம் உங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டீர்கள். நீங்கள் தவறு செய்தால் தடுப்பது யார்? சரியான பாதையிலிருந்து விலகினால் திருத்துவது யார்?' என்று கேட்டனர். அதே அழுத்தத்துடன் சுவாமிஜி கூறினார். 'நான் கடவுளுடன் ஒன்றுபட்டிருப்பதாக உண்மையிலே உணர்ந்திருந்தால் தீய வழியில் செல்ல மாட்டேன். என்னைத் திருத்தவோ, தடுக்கவோ யாரும் தேவையிருக்காது.'
சுவாமிஜி ராமராதபுரம் அரண்மனையில் இருந்த போதும் இத்தகைய விவாதம் ஒன்று எழுந்தது. அறிய முடியாததாகிய அறுதி உண்மையைக் காண இயலாது என்று ஒருவர் ஏளனமே செய்யத் தொடங்கினார். சிறிது நேரம் பொறுமையாக இருந்த சுவாமிஜி தீர்க்கமான குரலில், 'அறிய முடியாததை நான் கண்டிருக்கிறேன்' என்று கூறினார்.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment