Sunday, 20 November 2016

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-7

வேதாந்த விளக்கம் –சுவாமி விவேகானந்தர்-பகுதி-7
-
ஸதேவ ஸோம்யேதர.....ஏகம் ஏவாத் விதீயம்.....( சாந்தோக்கிய உபநிடதம் 6.2.1)
”சிருஷ்டிக்கு முன் இது இரண்டற்ற ஒன்றேயாக இருந்தது”
-
ஒரு மனிதன் சூரியனை நோக்கி செல்வதாக வைத்துக்கொள்வோம் அவன் யாத்திரையின் ஒவ்வொரு பகுதியிலும் சூரியனை வெவ்வேறு விதமாக காண்பான்.முதலில் சூரியனை பெரிய பந்துபோல கண்டான்,அருகில் செல்ல செல்ல வேறு விதமாக காண்கிறான்.ஆனால் அவன் பார்த்தது ஒரே சூரியனைத்தான்.அதுபோல இந்த பல மதப்பிரிவுகளும் உண்மையானவை.அவைகள் இந்த இரண்டற்ற உண்மையையே வெவ்வேறு விதமாக கூறுகின்றன.உலகிலுள்ள எல்லா மதங்களும் எல்லையற்ற,பெரற்ற,என்றுமுள்ள வேத மதத்தில் அடங்கியுள்ளன.ஏனெனில் கடவுளைப்பற்றிய உண்மையான அறுதிக்கருத்துக்களை வேதங்கள் மட்டுமே கூறுகின்றன.
நூற்றுக்கணக்கான பிறவிகளில் நீ முயற்சிசெய்யலாம்.கற்பகோடி காலம் உன் மனத்தின் ஆழ்பகுதியில் துருவி ஆராயலாம்.ஆனால் எல்லையற்ற சுரங்கமாகிய வேதங்களில் இல்லாத சிறந்த மதக்கருத்து எதையும் நீ காணமுடியாது
-
complete works of swami vivekananda(தமிழ்)புத்தகம்1.பக்கம்74)
-
விவேகானந்தர் விஜயம்-

No comments:

Post a Comment