Thursday, 17 November 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -46

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -46
--
சுவாமிஜி விவேகானந்தர் சிகாகோ உலக சமயப் பாரளுமன்றத்தில் 1893ல் கலந்துகொண்டு மூன்று வருடங்களின் பின்னரே இலங்கைக்கூடாக நாடு திரும்பினார். அப்போது எமது இந்துசமயத்தை உலகுக்கு நன்கு அறியச்செய்தார். சிக்காகோ பிரசங்கங்கள் பற்றிய குறிப்புக்கள் 1893ல் வெளியிட்ட “The world’s parliament of religion’s” என்னும் நூற்றாண்டு பழமைவாய்ந்த நூலின் தொகுப்பில் அறியலாம்.

சுவாமிஜி விவேகனந்தர் 1897 ஜனவரி 17ம் திகதி மாலை கொழும்பு துறைமுகத்தில் வீரக்கழல்களைப் பதித்தபோது இந்துக்கள் ஆயிரக்கணக்கில் திரண் டனர். மக்கள் உணர்ச்சி ஒலியும், கரவொலியும் துறைமுகத்தை அடுத்த கடலலை ஓசையை அடக்கிவிட்டது. சுவாமிஜி அவர்கள் கொழும்பு, கண்டி, வவுனியா, அநுராத புரம், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்தபோது வீரவரவேற்பு அளிக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் சுவாமிஜி சொற்பொழிவு தமிழுடன் சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. மதவெறி பிடித்த பௌத்தர்கள் (சிங்களவர்கள்) சொற்பொழிவின் இடையே இடையூறு விழைவிக்கும் வகையில் சொற்பொழிவாற்ற விடாமல் தடுக்க பல வித பறை ஒலிகளை பரப்பினர். அன்று தமிழர் சிங்களவரிடையே கலவரம் உண்டாகும் நிலை தோன்றியது. பின்னர் அங்கிருந்த பௌத்தர்களே வெட்கமுறும் வண்ணம் பகவான் புத்தரைப்பற்றி மிக உயர்வாக உரையாற்றினார். அநுராதபுரத்திலி ருந்து யாழ்ப்பாணம் சென்றார். அக்காலத்தில் ரயில் பயணத்திற்கு வர்யப்பில்லாததால் அநுராதபுரத்திலிருந்து 120மைல் தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு குதிரை பூட்டிய கோ ச்வண்டியிலே படுமோசமான பாதையில் மிகச்சிரமத்துடன் சுவாமிஜி பயணித்தார்.
-
யாழ்பாணத்தில் சுவாமி விவேகானந்தரை வரவேற்கும் விதமாக எல்லா வீடுகளின் முன்னாலும் அழகிய கோலங்கள் இடப்பட்டன,நிறைகுடம் வைக்கப்பட்டது 15,000 பேர் கலந்துகொண்ட மிக பிரம்மாண்டமான ஊர்வலம் சுவாமிஜியை தொடர்ந்து வந்தது.அவர்கள் யாரும் செருப்பு அணியவில்லை.யாள்பாணம் முழுவதும் வரவேற்பு தொரணங்கள்,மலர் மாலைகள் தூவப்பட்டன. சுவாமிஜியை ஒரு தெய்வீக மனிதராக போற்றினார்கள் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் ஊர்வலம் நிறைவுபெற்றது

1897 ஜனவரி 25ம் திகதியன்று இரவு ஏழு மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுவாமிஜி வேதாந்தம் என்னும் தலைப்பில் ஒருமணி நாற்பது வினாடிகள் நேரம் சொற்பொழிவு ஆற்றினார்.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment