Sunday, 20 November 2016

அன்னிபெசன்ட் அம்மையார் -சுவாமி விவேகானந்தரைப் பார்த்தபோது

கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்டலத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத் திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத்தோடு விரைந்தெழும் இயக்கங்கள் – இது சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் உபயோகிப்பதற்கு என்று ஒதுக்கியிருந்த அறைகளில் ஒன்றில், நான்
சுவாமி விவேகானந்தரைப் பார்த்தபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணமாகும். அவர் ஒரு வீரத்துறவி. ஆம், அவரிடம் நான் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்.
-
அவர் சிகாகோ சர்வசமயப் பேரவையில், சொற்பொழிவு மேடையை விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தார். அவரது உருவம், இந்தியாவின் பண்புகளையும் பெருமைகளையும் தாங்கியிருந்தது. இன்று இருக்கும் மதங்களில் மிகவும் பழமை வாய்ந்த இந்துமதத்தின் பிரதிநிதி அவர்; இந்திய மகனாகிய அவர், இந்தியாவின் தூதராக இந்தியத் தாயின் செய்தியை – சிகாகோ சர்வ சமயப் பேரவைக்குக் கொண்டு வந்திருந்தார்.
அங்கு அவர், அந்த இந்தியத் தாயின் பெயரால் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவரது இந்துமத விளக்கச் சொற்பொழிவுகளைக் கேட்டு, சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ள வந்திருந்த மக்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
-
அந்தப் பேரவையில் விவேகானந்தரின் சொற்பொழிவு முடிந்தபிறகு வெளியே வந்த ஒருவர், “இந்த மனிதரா கதியில்லாத இந்துமதத்தைச் சேர்ந்தவர்! இவரைச் சேர்ந்த இந்திய மக்களுக்கு நாம் போய்க் கிறிஸ்துவப் பாதிரிமார்களை அனுப்பி வைக்கிறோமே! அவர்கள் நமக்கு இந்துமதப் பிரசாரகர்களை இங்கு அனுப்பி வைப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்று கூறினார்.
-
அன்னிபெசன்ட் அம்மையார்
--
விவேகானந்தர் விஜயம்-சுவாமி வித்யானந்தர்9789374109

No comments:

Post a Comment