விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -51
--
தமிழர்களிடம் நம்பிக்கை
-
பிப்.,14ம் தேதியன்று ஹார்ம்ஸ்டன் சார்க்கஸ் வளாகத்தில் சுவாமிஜியின் கடைசி பொதுச் சொற்பொழிவு நடைபெற்றது. சுமார் 3000 பேர் வந்திருந்தனர். தலைப்பு 'இந்தியாவின் எதிர்காலம், 'சுவாமிஜியின் சொல்லாற்றல் அன்று உச்சத்தில் இருந்தது. மேடையில் அங்குமிங்குமாக நடந்த வண்ணம் அவர் சொற்பொழிவு ஆற்றியது ஒரு சிங்கம் தனிமையில் உலவியபடி கர்ஜிப்பதுபோல்இருந்தது. அவரது குரல் எங்கும் எதிரொலித்து, கேட்பவர் இதயங்களில் ஊடுருவியது போல் இருந்தது' என்று சுந்தரராம ஐயர் எழுதுகிறார்.
இந்தச் சொற்பொழிவில்தான் சுவாமிஜி தமிழ் மக்களின் மீது தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்குச் செவி சாய்ப்பீர்களா? இது தமது தமிழ் மக்களிடம் அத்தகையதொரு பேரன்பை வெளிப்படுத்தினார். அவரது சொற்பொழிவு முடிந்தபோது கை தட்டல்களும், வாழ்த்தொலிகளுமாக முடிந்த போது கைதட்டல்களும், வாழ்த்தொலிகளுமாக எங்கும் பேரொலி பரந்தது. 'இனி சுவாமிஜி ஒவ்வொரு வருடமும் சென்னைக்கு வருவார். 'இனி சுவாமிஜி ஒவ்வொரு வருடமும் சென்னைக்கு வருவார்' என்று அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இறைவனின் திருவுளம் என்னவோ அதுவாக இருக்கவில்லை!
சுவாமிஜி தங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆவல் யாருக்குத்தான் இருக்காது? ஆனால் சென்னையுடன் நின்றுவிடுவதல்லவே அவரது பணி. அவர் தொடர்ந்து சென்றாக வேண்டும், இன்றும் எத்தனை எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் அளித்தாக வேண்டும், இன்றும் எத்தனையோ பணிகளுக்கு உருவம் கொடுத்தாக வேண்டும். எனவே அவர் 15ம் தேதி புறப்படுவதென்று முடிவாயிற்று. இன்னும் ஒன்று. சுவாமிஜியே கூறியதுபோல் 'துறவிகளுக்கும் உடம்பு என்ற ஒன்று இருக்கிறது'. தொடர்ந்த இந்தப் பயணமும் அலைச்சல்களும் அவரது உடம்பை வெகுவாகப் பாதித்திருந்தன. 'சிறிது ஓய்வாவது கிடைக்காவிட்டார் நான் இன்னும் 6 மாதம் உயிரோடு இருப்பேனா என்றே தெரியவில்லை' என்று மிசஸ் சாராவிற்கு எழுதுகிறார் அவர்.
-
சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்லும் வழி
பிப்.,13ம் தேதியன்று 3ம் பொதுச் சொற்பொழிவு பச்சையப்பா ஹாலில் வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும் என்ற தலைப்பில் நடைபெற்றது. அன்று மேடையில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் இருந்தார். சொற்பொழிவின் இடையில் சுவாமிஜி இளைஞர்களுக்கு அறைகூவுகின்ற பகுதி வந்தது. முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும் நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும்... உங்கள் கை, கால் தசைகளில் இன்றும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று பேசினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணிய ஐயர் அருகிலிருந்தவரிடம் தமிழில், 'இதைத்தான் நானும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கெசாள்ளவில்லை. இப்போது சுவாமிகள் கூறுகிறார், எல்லோரும் ஆர்ப்பரிக்கிறார்கள்' என்றாராம்.
சொற்பொழிவை நிறைவு செய்துவிட்டு சுவாமிஜி ராயப்பேட்டை பேட்டர்சன் தோட்டத்திலுள்ள எல்.கோவிந்தாஸ் என்பவரின் வீட்டிற்குச் சென்றார். ஐரோப்பியர்கள் பலர் அங்கே திரண்டிருந்தனர். சுவாமிஜிக்கு வரவேற்புரை அளிக்கப்பட்டது. வீணை மற்றும் கிடார் கச்சேரிகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிஜிக்கு ஆரஞ்சு வண்ண சில்க் துணிகள் வழக்கப்பட்டன, மாலை மரியாதைகள் செய்யப்பட்டன.
-
உயர்நிலைப் பள்ளியில் சுவாமிஜியின் உரை
பிப்.,12ம் தேதியன்று கேஸில் கெர்னனின் தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தன. மாலை 4.30க்கு சுவாமிஜி இந்து தியாலஜிக்கல் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவருக்கு இண்டு வரவேற்புரைகள் அளிக்கப்பட்டன. சுவாமிஜி அவற்றை ஏற்றுக் கொண்டு பதிலுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெரம்பூர் அன்னதான சமாஜத்தின் 6ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி பச்சையப்பா ஹாலில் நடைபெற்றது. அங்கும் சுவாமிஜி சொற்பொழிவு ஆற்றினார்.
-
விக்டோரியா ஹாலில் சுவாமிஜி ஆற்றிய சொற்பொழிவு
பிப்.,11ம் தேதியன்று காலையில் சுவாமிஜி லஸ் சர்ச் ரோடில் அமைந்துள்ள நீதிபதி சுப்பிரமணிய ஐயர் வீட்டிற்கு அழைப்பின் பேரில் சென்றார். லட்டு, காப்பி ஆகியவை சுவாமிஜிக்கு அளிக்கப்பட்டன. அவற்றை அவர் சிறிது சுவைத்தார். அன்று பேராசிரியர் சுந்தரம் ஐயரும் உடன் இருந்தார். திருவனந்தபுரத்திலும் அவர் சுவாமிஜியுடன் நெருக்கமாகப்பப் பழகியவர். சாப்பாட்டு விஷயத்தில் சுவாமிஜி பெரிய ஈடுபாடு காட்டியதில்லை என்கிறார் அவர். அன்று நீதிபதியிடம் சுவாமிஜி தமது முஸ்ஸிம், கிறிஸ்தவர், பௌத்தர் அனைவரையும் சகோதர உணர்வுடன் அந்தக் கோயிலின் கீழ் திரளச் செய்ய இயலும். அந்தக் கோயிலின் அமைப்பே புதுமையாக இருக்கும். எல்லா மதத்தின் தீர்க்கதரிசிகளின் சிலைகள் அதில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்னால் திறந்த வெளியில் ஒரு தூணில் 'ஓம்' என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்.
அன்று விக்டோரியா ஹாலில் சுவாமிஜி ',இந்திய ரிஷிகள்' என்ற தலைப்பில் இரண்டாவது பொதுச் சொற்பொழிவு ஆற்றினார்.
-
இந்து சமுதாயச் சீர்திருத்த சங்கத்தில் சுவாமிஜி
பிப்.,10ம் தேதியன்று சுவாமிஜி இந்து சமுதாயச் சீர்திருத்த சங்கத்தில் விருந்தினராக அழைக்கப்பட்டார். சீர்திருத்தம்' 'சீர்திருத்தவாதி' போன்றவை பற்றி தாம் கூறிய கருத்துக்களை இங்கே சுவாமிஜி விளக்கினார். அதுபற்றி பல அன்பர்கள் எழுப்பிய சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். நிகழ்ச்சி முடிந்து, சுவாமிஜி அங்கிருந்து புறப்படும்போது அந்தச் சங்கத்தினர் ஓர் அழகிய விசிறியை சுவாமிஜிக்கு அன்பளிப்பாகத் தந்தனர்.
--
இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள்
--
சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜியிடம் சில இளைஞர்கள் கேள்விகளை எழுப்பினர்.
சுவாமிஜி, இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள் எவை?' என்று கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கேட்டார். 'கடவுள் நம்பிக்கை, வேதங்களில் நம்பிக்கை, கர்ம நியதி, மறுபிறவிக் கொள்கை. இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா? மனிதன் தவறிலிருந்து உண்மைக்குப் பயணம் செய்கிறான் என்று மற்ற மதங்கள் கூறுகின்றன. அவன் உண்மையிலிருந்து உண்மைக்கு, தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்குப் போகிறான் என்கிறது இந்துமதம். வேதங்களை ஆழ்ந்து படித்தால் அங்கே சமரக் கருத்துதான் காணப்படுகிறது. பரிணாமக் கருத்தின் கோணத்தில் பேதங்களைப் படிக்க வேண்டும்.'
ஒரு நாள் மொத்தப் படித்தவர்கள் சிலர் அவரைக் காண வந்தனர். சுவாமிஜி தம்மை அத்வைதி என்று கருதுபவர். அத்வைதம் அறுதி உண்மைபற்றி பேசுகிறது. 'உயிர், உலகம், அறுதி உண்மை என்று பிரிவுகள் கிடையாது. இருப்பது ஒன்றே, அதுவே நான்' என்பது அதன் கருத்து. வந்தவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஒரு சவால் விடுவது போலவே சுவாமி4யிடம், 'நீங்களும் கடவுளும் ஒன்றே என்று கூறுகிறீர்கள். இதன்மூலம் உங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டீர்கள். நீங்கள் தவறு செய்தால் தடுப்பது யார்? சரியான பாதையிலிருந்து விலகினால் திருத்துவது யார்?' என்று கேட்டனர். அதே அழுத்தத்துடன் சுவாமிஜி கூறினார். 'நான் கடவுளுடன் ஒன்றுபட்டிருப்பதாக உண்மையிலே உணர்ந்திருந்தால் தீய வழியில் செல்ல மாட்டேன். என்னைத் திருத்தவோ, தடுக்கவோ யாரும் தேவையிருக்காது.'
சுவாமிஜி ராமராதபுரம் அரண்மனையில் இருந்த போதும் இத்தகைய விவாதம் ஒன்று எழுந்தது. அறிய முடியாததாகிய அறுதி உண்மையைக் காண இயலாது என்று ஒருவர் ஏளனமே செய்யத் தொடங்கினார். சிறிது நேரம் பொறுமையாக இருந்த சுவாமிஜி தீர்க்கமான குரலில், 'அறிய முடியாததை நான் கண்டிருக்கிறேன்' என்று கூறினார்.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment