Sunday, 27 November 2016

பொன்மொழிகள் .பகுதி-30

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-30
-----
ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.
----
எனது அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியைப் பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை. போலித் தன்மை யினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்க வில்லை. ஆனால் உண்மையான மதத்தின் தலைசிறந்த சமய போதனையாகவும் மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களில் இருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்,
-----
இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்து விட்டது.
எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்துநின்று வேலை செய்யுங்கள்.
----
உலகியலின் பக்கத்திலோ எல்லாம் வெறுமை, எதுவும் இல்லை. எல்லாம் மறைந்துகொண்டே இருக்கின்றன. அழகு, இளமை, நம்பிக்கை இவை நிறைந்த இன்றைய மனிதன், நாளைய அனுபவசாலியாக ஆகிறான். இன்று பூத்த மலர்களாகிய நம்பிக்கையும் இன்பங்களும் சுகங்களும் எல்லாம் நாளைய உறைபனியில் வாடிக் கருகிவிடும். ஒரு பக்கம் இப்படி இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், வெற்றியின் மேல் மனிதனுக்கு உள்ள ஆசை, வாழ்க்கையின் தீமைகளை வெல்ல ஆசை, வாழ்க்கையை வெற்றிகொள்ள ஆசை, பிரபஞ்தசதையே கீழடக்க ஆசை, இவை உள்ளன. இந்தப் பக்கத்தில்தான் மனிதர்கள் உறுதியாக நிற்க முடியும். எனவே வெற்றிக்காக, உண்மைக்காக மத உணர்வுக்காகத் துணிச்சலாகப் போராடுபவர்கள் சரியான வழியிலேயே போகிறார்கள். அதையே வேதங்களும் போதிக்கின்றன. மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்திமுனையில் நடப்பது போன்றது. ஆனாலும் சோர்வடையாதீர்கள். எழுந்திருங்கள். விழித்திருங்கள், குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்.
-----

பொன்மொழிகள் .பகுதி-31

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-31
-----
நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதே நல்லொழுக்கம். கீழ்நிலைக்கு இழுத்துச் செல்வதே தீய ஒழுக்கம். 
----
மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற இந்த மூன்று குணங்களால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். உன்னிடமுள்ள தெய்விகத் தன்மையை வளர்க்கக் கூடியதுதான் நல்லெழுக்கமாகும். உன்னிடமுள்ள மிருக இயல்பை அதிகரிக்கச் செய்வதே தீய ஒழுக்கம்.
---
மிருக இயல்பை உன்னிடமிருந்து அழித்துவிட்டு மனிதத்தன்மை கொண்டவனாக மாற வேண்டும். அதாவது அன்புள்ளமும் தர்ம சிந்தனையும் உடையவனாக இருக்க வேண்டும்.
பிறகு நீ அந்த நிலையையுங்கூடக் கடந்து சென்று தூய ஸத்-சித்-ஆனந்தமாக ஆக வேண்டும்.
----
சுடும் தன்மை இல்லாத நெருப்பாகவும், அற்புதமான அன்புள்ளவனாகவும், ஆனால் அதே சமயத்தில் பாமர மனிதனின் உணர்ச்சி வசப்பட்ட அன்பு என்ற பலவீனத்திற்கும் துன்ப உணர்ச்சிக்கும் உட்படாதவனதகவும் நீஆக வேண்டும்.
-----
நீ உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான், நீ சமய வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும். ஒருவன் வாடிய முகத்தோடு இருப்பது குன்ம வியாதியின் விளைவாக இருக்கலாமேயன்றி, அது மத வாழ்க்கை ஆகாது.
----
துன்பம் பாவத்தினால் ஏற்படுகிறது.அதைத் தவிர பாவம் விளைவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. இருளடைந்த முகங்களோடு உனக்கு என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது? அப்படி இருப்பது பயங்கரமானது உன் முகத்தில் இருள் சூழ்ந்திருந்தால். அன்றையத் தினம் நீ வெளியே போகாமல் உன் அறையின் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இரு. வெளியுலகத்திற்கு இந்த நோயைச் சுமந்துகொண்டு போவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
-----
நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய்.புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமானாகவே நீ ஆகிவிடுவாய்.
-----
உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது; வலிமையைத் தருகிறது; உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வளவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது.
----
நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால் உனக்குள்ளே இருப்பதுதான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால் அதை நாம் வெளியில் பார்க்க முடியாது-இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடந்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.
-----
உன்னிடமுள்ள தெய்விகத் தன்மைதான் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதற்கு உரிய சான்றாகும்.நீ ஒரு தீர்க்கதரிசியாக இல்லாவிட்டால் கடவுளைப் பற்றிய எந்த உண்மையும்ஒரு போதும் இருந்திருக்க முடியாது. நீ கடவுளாக இல்லாவிட்டால், கடவுள் என்ற ஒருவர் இருக்கவில்லை, இனி இருக்கபோவதும் இல்லை - இந்த உண்மையே வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியம் என்று வேதாந்தம் சொல்லுகிறது.
---
நாம் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகவே ஆகவேண்டும் நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத்தான் இருக்கிறார். ஆனால் அதை நீ அறியாமல் மட்டுமே இருக்கிறாய். இதை நீ உணரவே வேண்டும்.
-----
சுவாமி விவேகானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-32

சுவாமி விவேகானந்தரின்
பொன்மொழிகள் .பகுதி-32
----
ஆன்மாவினால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது மதத்திற்கு மிகவும் முரண்பட்ட கருத்தாகும். பாவம் என்பது ஒன்று உண்டென்றால், அது நான் பலவினமானவர்கள் என்று சொல்வதுதான்.
----
கடவுள் இல்லாதது என்று எதுவுமே இல்லை என்று வேதாந்தம் சொல்லுகிறது.உயிருள்ள கடவுள் உனக்கு உள்ளளேயே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்களையும் கட்டிக்கொண்டிருக்கிறாய். மேலும், எல்லா விதமான கற்பனைப் பிதற்றல்களிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறாய்.
----
மனித உடலிலுள்ள மனித ஆன்மா ஒன்றுதான் வழிபட வேண்டிய ஒரே கடவுளாகும்.எல்லா விலங்குகளுங்கூடத் தெய்வத்தின் கோயில்கள் தாம். ஆனால் மனிதனே இவற்றுள் மேலானவன் . கடவுளை நான் அத்தகைய மனித கோவிலில் வழிபட முடியவில்லை என்றால், வேறு எந்தக் கோயிலும் எனக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை.
----
சமயசாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை; அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது நல்லவனாகவே இருந்து நன்மை செய்வதுதான் சமயசாதனையின் முழு உண்மையாகும். கடவுளே! கடவுளே! என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆவான்.
----
ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன்கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்
-----
.எல்லையில்லாத சக்தி, சுருள் சுருளாக இந்தச் சிறிய மனித உடலுக்குள் சுருட்டி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தி விரிந்து பரந்து கொண்டே இருக்கிறது. இதுதான் மனிதனுடைய வரலாறு சமயத்தின் வரலாறு, நாகரிகத்தின் வரலாறு, முன்னேற்றத்தின் வரலாறு ஆகிய அனைத்துமாகும்.
----
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை இலட்சியமாகும். மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது அறிவுடைய செயலாகாது.ஒருவன் இங்கேயே இப்போதே, இன்பத்தைத் பெற வேண்டும். இப்படிபட்ட இன்பத்தைத் தரக்கூடிய எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.
-----
சுவாமி விவேகானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-33

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-33
----
முதலில் நமக்கென்று ஓர் இலட்சியம் இருந்தாக வேண்டும். ஒழுக்கமாக இருப்பதே நம்முடைய இலட்சியத்தின் முடிவல்ல. மாறாக, அது ஓர் இலட்சியத்தை அடையச் செய்யும் பாதையாக மட்டும் தான் இருக்கிறது.
முடிவான இலட்சியம் என்ற ஒன்று இல்லாமற்போனால் நாம் ஏன் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்? நான் எதற்காக மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்?நான் ஏன் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யக்கூடாது? இன்பமாக இருப்பதுதான் மக்களுடைடைய இலட்சியம் என்றால், நான் என்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டு மற்றவர்களை. ஏன் துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாது? அப்படிச்செய்வதிலிருந்து என்னை எது தடுத்து நிறுத்துகிறது?
-----
பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்.
----
தெய்விகத் தன்மை இல்லாமல் பெறப்படுகின்ற மித மிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தன்களாக்கி விடுக்கின்றன.
----
வேதங்கள் பைபிள், குரான் ஆகிய இவற்றுக்கும் அப்பால் மக்களை நாம் அழைத்துப் போக விரும்புகிறோம். என்றாலும் இந்தச் செயலை வேதங்கள், பைபிள், குரான் ஆகியவற்றைச் சமரசப்படுத்தி வைப்பதன் மூலமாகத்தான் சாதிக்க முடியும். எல்லா மதங்களும், ஒரு பரம்பொருளான அந்த ஒரே ஒரு மதத்தின் புறத்தோற்றங்களே ஆகும்.
-----
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்தபோதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம். அவனுக்கு உலகில் செல்வம் எதுவுமே இல்லாமலிருக்கலாம். அப்படி இருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால்அவன் இலௌகிகத்தில் ஒரேயடியாக மூழ்கியவனே ஆவான்.
----
ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் இலட்சியமே; மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது என்பதுதான் மேலும் கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபடமுடியும்?- இதுவே வேதாந்தம் அறிவுரையாக வழங்கும் செய்தியாகும்.

பொன்மொழிகள் .பகுதி-34

சுவாமி விவேகானந்தரின்
பொன்மொழிகள் .பகுதி-34
-----
ஒழுக்கம் உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலைபெற்றிரு மத சம்பந்தமான தத்துவ உண்மைகளைப் போட்டு உனது மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
-----
கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் செய்வதில்லை. மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை.
----
சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.
-----
நெடுங்காலமாக இந்தியாவில் மதம் தேக்க நிலையில் உள்ளது.அதை செயல் நிலைக்கு கொண்டுவருவதே நாம் செய்ய வேண்டியது.
-----
நமது முதல் வேலை அத்வைத நெறியை அனைவருக்கும் பரப்புங்கள்.அதன் மூலம் தற்கால விஞ்ஞானத்தின் எதிர்ப்புகளை தாங்கும் சக்தியை நம் மதம் பெறும்.
----
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்.ஆகவே எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
----
வேதத்தின் மீது அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தான் வேதம் படிக்க வேண்டும் என்று எந்த வேதங்களிலும் இல்லை.
----
நாம் இனத்தால், மொழியால், ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நமது மதமாகும். அது தான் நமது பொதுவான அடித்தளம்.
----
கடவுளை கண்டிருக்கிறாயா? நீ ஆன்மாவை கண்டிருக்கிறாயா? இல்லையென்றால் இறைவனின் திருநாமத்தை பிரச்சாரம் செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
----
நமது சொந்த ஆன்மாவை நாம் அறிவும் வரை நமக்கு முக்தியே கிடையாது
----
ஒருவன் தன்னிடம் நம்பிக்கை இழக்கிறான் என்றால், கடவுளிடம் நம்பிக்கை இழக்கிறான் என்றே பொருள்
----
மேலை நாகரீகங்கள் அஸ்திவாரம் வரை ஆட்டம் கண்டுவிட்டது. விரைவிலேயே இந்த நாகரீகங்கள் மறைந்துவிடப்போகிறது. பொறுமையாக காத்திருங்கள். எதிர்காலம் நம்முடையது தான்.

பொன்மொழிகள் .பகுதி-35

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-35
-----
🌿 தன்னைத் தேடும்படியும் உணரும்படியும் உங்களைத் தூண்டுவது, உங்களுக்கு உள்ளே இருக்கும் கடவுள்தான்
---
🌿 கோயில்களிலும் சர்ச்சுகளிலும் மண்ணிலும் விண்ணிலும் மற்றெல்லா இடங்களிலும் பல காலமாகக் கடவுளைத் தேடிவிட்டு, ஆரம்பித்த இடத்திற்கே அதாவது உங்கள் ஆன்மாவிற்கே கடைசியில் வந்து சேருகிறீர்கள்.
---
🌿 இந்த ஆன்மாவைத் தான் நீங்கள் உலகமெல்லாம் தேடினீர்கள். இந்த ஆன்மாவை உணர்வதற்காகத்தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் அழுதீர்கள். பிரார்த்தனை செய்தீர்கள். இந்த ஆன்மாவைத்தான் மேகங்களுக்குமேல் மறைந்திருக்கும் மர்மங்களுக்குள் மர்மம் என்று நினைத்தீர்கள்.
---
🌿 இந்த ஆன்மா உங்கள் உயிருக்கு உயிராக, அருகிலுள்ள அனைத்திலும் மிக அருகில் இருக்கிறது.
---
🌿 உங்கள் உடல், பொருள், ஆவி இவற்றின் உண்மையான உருவம் இந்த ஆன்மாதான். இதுதான் உங்கள் உண்மையான இயல்பு.
---
🌿 நீங்களே பரம்பொருள், நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள் என்று சொன்னால் மனிதர்களுக்குப் பயம் ஏற்படுகிறது, நீங்கள் எல்லா பொருட்களின் மூலமாகவும் செயல்படுகிறீர்கள்; எல்லா கால்களின் மூலமாகவும் நடக்கிறீர்கள்; எல்லா உதடுகளின் மூலமாகவும் பேசுகிறீர்கள்; எல்லா இதயங்களின் மூலமாகவும் உணர்கிறீர்கள். இப்படிச் சொன்னாலே மக்கள் நடுங்குகிறார்கள். தங்கள் தனித்துவம் என்ன ஆவது? என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள்
----
🌿 நான் இந்தச் சிறிய உடம்பு என்று நினைத்த உடனேயே, மற்ற உடல்களுக்குக் கேடு செய்தாவது இந்த உடம்பைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் அழகாக வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன். அப்போதே நீங்கள் வேறு, நான் வேறு என்றாகி விடுகிறது. இந்தப் பிரிவுணர்ச்சியே எல்லா தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகிறது.
---
🌿 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எல்லைக்கு உட்பட்ட அற்பமான வாழ்க்கை மரணம், மரணமேதான், இதனால்தான் நமக்கு மரண பயம் ஏற்படுகிறது. இவ்வுலகில் ஒரேஓர் உயிர் வாழ்ந்திருக்கும்வரை நானும் வாழ்வேன் என்று உணரும் போதுதான் மனிதனால் மரண பயத்தை வெல்ல முடியும்.
----
🌿 எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன். எல்லோருள்ளும் நான் இருக்கிறேன். எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் நான் இருக்கிறேன். பிரபஞ்சமே நான்தான் என்று எப்போது ஒரு மனிதன் உணர்கிறானோ அப்போதுதான் பயமற்ற நிலை அவனுக்கு வருகிறது.
----
🌿 நீங்களே பரம்பொருள், நீங்கள் இறைவன். நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள். நீங்கள் எல்லா பொருட்களின் மூலமாகவும் செயல்படுகிறீர்கள்; எல்லா கால்களின் மூலமாகவும் நடக்கிறீர்கள்; எல்லா உதடுகளின் மூலமாகவும் பேசுகிறீர்கள்; எல்லா இதயங்களின் மூலமாகவும் உணர்கிறீர்கள்.
----
🌿 பழைய மூடநம்பிக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு உண்மையை உணருங்கள்.

பொன்மொழிகள் .பகுதி-36

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-36
-----
சமுதாயம்தான் உண்மையை மதித்து நடக்க வேண்டும். இல்லையென்றால் அந்தச் சமுதாயத்திற்கு அழிவு நிச்சயம். உண்மையின் அடிப்படையில் தான் சமுதாயங்களை அமைக்க வேண்டும். சமுதாயத்தின் தேவைக்கேற்ப உண்மை மாற முடியாது. சுயநலமின்மையைப் போன்ற ஓர் உயர்ந்த உண்மையைச் சமுதாயத்தில் பின்பற்ற முடியவில்லையென்றால், மனிதன் சமுதாயத்தை விட்டுவிட்டுக் காட்டிற்குப் போய்விடுவதே நல்லது.
---
🌿 மீன், நீரிலுள்ள தன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க விரும்புகிறது. அது எப்படித் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? இறக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு பறவையாவதன் மூலம்தான்.
🌿 நீரையோ காற்றையோ அந்த மீன் மாற்றவில்லை; மாற்றம் அதனிடமே உண்டாகிறது. மாற்றம் எப்பொழுதும் அகச்சார்பு உடையது. பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், எல்லா உயிர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன்மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம்.
---
🌿 கோபத்தின் வசப்படாதிருக்கப் பழகிவிட்டால் எனக்குக் கோபம் வராது. வெறுப்பு என்னை அணுகாமல் பார்த்துக் கொண்டால் வெறுப்பே எனக்கு வராது. ஏனெனில் அவை என்னைத் தொடவே முடியாது.
வெற்றியடைவதற்கு இதுதான் வழி; அதாவது அகச் சார்பின்மூலம் நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வதுதான்.
---
பவுதீக விஞ்ஞானம் மற்றும் ஒழுக்கக் கோட்பாடு ஆகியவற்றின் தற்கால ஆராய்ச்சிகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், அவற்றிற்கு ஒரு படி மேலேயும் போயிருக்கும் ஒரே நெறி அத்வைதம்தான் என்று நான் தைரியமாகச் சொல்வேன். அதனால்தான் தற்கால விஞ்ஞானிகளை அத்வைதம் கவர்கிறது. பழைய துவைதக் கருத்துக்கள் அவர்களுக்குப் போதவில்லை, திருப்தி அளிக்கவில்லை.
---
🌿 இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், வழிவழியாகத் தாங்கள் பின்பற்றிவரும் மதக் கருத்துக்களைத் தவிர, மற்றவை எதுவும் சரியானவை அல்ல என்ற எண்ணம் இருப்பது, மனிதனின் மனத்தில் இன்னும் பலவீனம் எஞ்சியுள்ளதையே காட்டுகிறது. அத்தகைய கருத்துக்களை விட்டுவிட வேண்டும்.
---
🌿 ஐரோப்பாவில் இன்று உலோகாயதம் தான் வழக்கில் இருக்கிறது. ஐரோப்பாவின் ஆன்மிக விழிப்பிற்கு அறிவுபூர்வமான ஒரு மதம்தான் தேவை. இரண்டற்ற ஒன்றேயான நிர்க்குண பிரம்மக் கருத்தைப் போதிக்கும் அத்வைதம் ஒன்றுதான், அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் மக்களுக்குத் திருப்தி அளிக்ககூடியதாக இருக்கிறது.
---
🌿 தர்மம் மறைந்தது போலாகி, அதர்மம் தலைதூக்குவது போல் தோன்றும் போதெல்லாம் அத்வைதம் வருகிறது. அதனால்தான் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேர்பிடித்திருக்கிறது.
---
🌿 கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே சொர்க்கத்தில் எங்கேயோ இருக்கிறார் என்று துவைதம் சொல்கிறது.
நம்முடைய ஆன்மாதான் கடவுள் என்றும், அவர் நமக்கு வெளியே இருக்கிறார் என்று சொல்வது தெய்வநிந்தை என்றும் அத்வைதம் கூறுகிறது.
----
🌿 நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.
----
🌿 நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

-


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-37

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-37
-----
🌿 பழங்கால மதங்கள் எல்லாவற்றிலுமே ஒரு பொதுவான கருத்தைக் காணலாம். இந்த வாழ்க்கையின் துன்பங்கள் எல்லாமே மறைந்து, இன்பங்களே மிஞ்சும் ஒரு காலம் வரும், அப்போது இந்தப் பூமியே சொர்க்கமாக மாறி விடும் என்பதே அந்தக் கருத்து.
🌿 எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
---
🌿 இந்த உலகம் எப்போதும் இப்படியேதான் இருக்கும். நான் சொல்வது பயங்கரமான விஷயம்தான். ஆனால் சொல்லாமல் வழியில்லை.
🌿 உலகின் துன்பம், குணப்படுத்த முடியாத மூட்டுவாதம் போன்றது. உடம்பில் ஓர் இடத்தில் இதைக் குணப்படுத்தினால் வேறிடத்திற்குச் செல்லும். அங்கிருந்து துரத்துங்கள், வேறு ஓர் இடத்தில் அதை உணர்வீர்கள். என்ன செய்தாலும், அது இடத்திற்கு இடம் தாவிக்கொண்டே இருக்குமே தவிர உடம்பை விட்டுப் போகாது.
----
🌿 இந்த உலகில் முன்னேற்றம் என்று நீங்கள் சொல்வதெல்லாம், ஆசைகளைப்பெருக்கிக் கொள்வதே தவிர வேறெதுவுமாக எனக்குத் தெரியவில்லை.
🌿 எனக்குத் தெளிவாகத் தெரிவதெல்லாம் ஆசைகளே துன்பம் அனைத்தையும் கொண்டு வருகின்றன என்பதுதான். இந்த நிலை, எப்பொழுதும் எதையாவது யாசித்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் நிலைதான்.
🌿 பார்ப்பதையெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ள மனிதன் விரும்புகிறான். அந்த விருப்பம் இல்லாமல் அவனால் எதையும் பார்க்க முடியாது. இன்னும் அதிகம் வேண்டும் என்று ஏங்குகிறான். அதை பெறுவதற்காக வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுகிறான்.
---
🌿 நம் ஆசைகளைத் திருப்திப்படுத்தும் சக்தி கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால், ஆசைகளின் சக்தி பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது.
---
🌿 உலகிலுள்ள இன்ப துன்பங்களின் மொத்த அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்யாமல் எப்போதும் அப்படியேதான் இருக்கிறது.
🌿 கடலில் ஓர் இடத்தில் அலை எழுந்தால் அது மற்றோரிடத்தில் பள்ளத்தை உண்டாக்குகிறது.
--
🌿 ஒருவனுக்கு இன்பம் வந்தால், மற்றொருவனுக்கோ, ஒருவேளை மற்றொரு பிராணிக்கோ துன்பம் வருகிறது. மனிதர்களின் தொகை பெருகிறது, ஆனால் சில மிருகங்களின் தொகை குறைகிறது. நாம் அந்த மிருகங்களைக்கொன்று, அவை வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறோம். நாம் வாழ்வதற்கான வழிகளை அவற்றிடமிருந்தே பெறுகிறோம்.
---
🌿 உலகில் இன்பம் அதிகரிக்கிறதென்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? வலிமைமிக்க இனங்கள் எளிய இனங்களை அழித்தே வாழ்கின்றன. ஆனால் இந்த வலிமைமிக்க இனம் சந்தோஷமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
--

சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-38

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-38
----- 
இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில் நீ வரம் பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
---
நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
---
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
---
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்றிப் போதிப்பாயாக.
---
🌿 வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதி யையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.
----
மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
---
🌿 இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
----
ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு வெற்றிக்கு இதுதான் வழி.

--


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-39

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-39
----- 
ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில்உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.
---
பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்துவிடும். அழிந்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும்.
---
சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கபடுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.
----
நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வென்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப்பெற்றிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதனால் அந்த எண்ணங்கள் செயலுக்குவரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடிஅடிக்கும் வரையிலும் , அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம் . நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால் அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்ப தில்லை.
----
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ. அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை . எனவே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
----
மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக்கொண்டு,அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள்.
விதி என்னால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத்தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டு வதற்கும் ஒருவருமில்லை.
---
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்த தைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.
---
துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதி யாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது.
--


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-40

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-40
----- 
பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் , அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நீனைவில் வைத்துக் கொண்டால் , தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.
----
ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத்தக்கவையே. ஆனால் நான் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.
----
கடவுள்மீது நம்பிக்கை வைப்பதால் பலருக்கு பாதை எளிதாகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். தத்துவஆராய்ச்சி செய்யாதவன். எந்த மதத்தையும் சாராதவன்,சர்ச்சுக்கோ கோவிலுக்கோ போகாதவன், இவர்கள் கூட மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை புத்தரின் வாழ்க்கை காட்டுகிறது
---
மனிதனை காக்கும் சக்தி எல்லா மதங்களிலும் சமமாகவே உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். மதங்களிடையே வேறுபாடு உள்ளது என்று நீங்கள் கோவில்களிலோ அல்லது சர்ச்சுகளிலோ கேள்விப்படுவது வெறும் மூடநம்பிக்கை. எல்லோருக்கும் ஒரே கடவுள் தான் இருக்கிறார். ஆன்மாவை முக்தியடையச்செய்வது நீங்களோ நானோ அல்லது தனிக்கூட்டமோ அல்ல,சர்வவல்லமை பொருந்திய ஒரே கடவுள்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு.
---
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிசெய்யாதீர்கள். முடிந்தால் அதைவிட சிறந்த ஒன்றை அவனுக்கு கொடுங்கள். முடிந்தால் அவன் எங்கு நிற்கிறானோ அங்கிருந்து அவனை முன்னுக்கு தள்ளுங்கள்.அதைச்செய்யாமல் அவனிடம் இருப்பதையும் கெடுக்காதீர்கள்.
---
கோட்பாடுகளைப்பற்றி கவலைப்படாதீர்கள்.கொள்கைகள்,பிரிவுகள்,கோவில்கள்,சர்ச்சுகள் முதலியவற்றை பற்றி கவனிக்க வேண்டாம். ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் சாரமான ஆன்மீகத்துடன் ஒப்பிடும்போது அவை ஒன்றும் இல்லை. இந்த ஆன்மீகம் அதிகரிக்கும் அளவுக்கு நன்மை செய்யும் சக்தியும் அவனிடம் பெருகும்.முதலில் இதை சம்பாதித்துக்கொள்ளுங்கள்.இதை சேமியுங்கள்.யாரையும் குறை கூறாதீர்கள்.ஏனெனில் எல்லா சம்பிரதாயங்களிலும் கொள்கைகளிலும் சிறிதளவு நல்லது இருக்கவே செய்கிறது.வாழ்வின் நோக்கம் இறைவனை நேருக்கு நேராக காண்பது. இதை அடைந்தவர்களே மற்றவர்களுக்கு ஆன்மீகத்தை போதிக்க முடியும்.இத்தகையோர் மிகுதியாக உருவாம்தோறும் அந்த நாடு மேன்மையும்.
---

பொன்மொழிகள் .பகுதி-41

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-41
----- 
சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.
---
அறிவும் உடம்பும் சமச்சீராக வளரவேண்டும்.இரும்பைப்போன்ற நரம்புகளும் கூர்ந்த அறிவும் இருந்தால் உலகமே உன் காலடியில் இருக்கும்.
எண்ணெய் மற்றும் காரப்பொருட்களை சாப்பிடுவது நல்லதல்ல, பூரியைவிட சப்பாத்தி நல்லது. மீன்,இறைச்சி,புதிய காய்கறிகளை சாப்பிடு.இனிப்பை குறைத்துக்கொள்.
---
உனக்குள் அளவற்ற ஆற்றலும்,அளவற்ற அறிவும்,வெல்ல முடியாத சக்தியும் இருக்கிறது என்று நீயும் நினைப்பாயானால்,அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால் நீயும் என்னைப்போல் ஆக முடியும்.
----
பாவிகள்.துயரில் உழல்பவர்கள், ஏழைகள், சம்சார தீயில் துடிப்பவர்கள், வழி தவறியவர்கள் இவர்களின் மோட்சத்திற்கு, மேன்மைக்குப் பாடுபடாமல் நாமும் ஒதுங்கிக்கொண்டால் அவர்களுக்காக வேறு யார்தான் கவலைப்படுவார்கள்?
--
இந்த உலகின் துன்பங்களை நீக்குவதற்கான ஆயிரம் பிறவிகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நான் நிச்சயம் பிறப்பேன்.அதனால் யாராவது ஒருவரின் துயரம் சிறிதளவு துடைக்கப்படுமானால்கூட,நான் அதை செய்வேன்.
--
நாம் நூல்களைப் படிக்கலாம், சொற்பொழிவுகள் கேட்கலாம், பெரிதாகப் பேசலாம் – ஆனால் அனுபவம் என்ற ஒன்று உள்ளதே, அது ஒன்று தான் ஆசிரியர், கண்ணைத் திறந்து விடுகின்ற ஒன்று. உள்ளபடியே இருப்பதுதான் மிகச் சிறந்தது. நாம் கற்றுக் கொண்டேயிருக்கிறோம், புன்னகைகளின் வழியாகவும், கண்ணீர்த்துளிகளின் வழியாகவும் கற்றுக் கொண்டேயிருக்கிறோம்.
---
எந்தவொரு மகத்தான பணியும் தியாகம் இல்லாமல் நடந்ததில்லை. இதயத்தை அப்படியே பறித்தெடுத்து ரத்தம் சொட்டச் சொட்ட பலிபீடத்தில் வைக்க வேண்டும். அதன் பிறகே உலகில் மகத்தான காரியங்கள் ஆற்றப்பட்டுள்ளன”.
---
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்.ஆகவே எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
---
நாம் இனத்தால், மொழியால், ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நமது மதமாகும். அது தான் நமது பொதுவான அடித்தளம்.

--


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-42

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-42
---
நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.
-
. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.
-
இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே ,என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
--
. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். 
--
ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
-
.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை முயற்சிசெய்.
-
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்றிப் போதிப்பாயாக.
-
.வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.
-
. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக்கத்தை, நமது குழந்தை களைக் கேட்கச் செய். பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயாக மாற்றப்பட்டிருக்கிறது.
-
.அறியாமை மிக்க , உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.
-
. சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவதேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன் மாவில் நிலைத்திரு.
-
.மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
--


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-43

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-43
---
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் , பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகி விடும்.
-
பயங்கரத்தை எதிர்த்து நில் அஞ்சாமல் அதை எதிர்த்து நில்.
-
.ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு வெற்றிக்கு இதுதான் வழி.
--
நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.
----
. ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி.
தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில்உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல் , ஒரே தட்டுதல் இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
-------
பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்துவிடும். அழிந்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும்.
---------
.சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கபடுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.
-------
நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வென்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப்பெற்றிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதனால் அந்த எண்ணங்கள் செயலுக்குவரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடிஅடிக்கும் வரையிலும் , அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம் . நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால் அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்ப தில்லை.
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ. அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை . எனவே நீங்கள் விரும்பும் எதிர்காலம் இன்றைய உங்கள் செயலில் இருக்கிறது.
.மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக்கொண்டு,அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள்.
விதி என்னால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத்தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை.
--

சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-44

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-44
-----
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்த தைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
-
.ஏன் எதற்கு? என்று ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நமது வேலையன்று, மாறாக செயலில் ஈடுபட்டுச் செத்து மடிவது ஒன்று தான் நமது கடன் . மகத்தான காரியங்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றும் அவற்றை நாம் செய்து முடிப்போம் என்றும் உறுதியாக நம்பு.
-
துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதி யாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது.
--
நமது வாழ்க்கை சிறந்ததாகவும் தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான் உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம் எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.
---
சண்டையிடுவதிலும் குறை சொல்லிக்கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.
---
தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய அற்பமான வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும் முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன் தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துகொண்டு தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்று கொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்த கடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாகவந்து சேரும்.
-
தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

--


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

பொன்மொழிகள் .பகுதி-45

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-45
--
தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலுங்கூட இடம் கிடைக்காது. -- பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் , அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நீனைவில் வைத்துக் கொண்டால் , தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.
---
.மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்? பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும் ஒன்றாக இருக்கும்படிச் செய்தால் , அதைச் செய்ய உன்னால் இயலுமானால், பணம் தண்ணீரைப் போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும்.
--- .
இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை தான் மிகவும் கரடுமுரடாகவும் செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பதுதான் வியப்புக்கு உரிய விஷயம் . பல பேர் தோல்வி அடைந்து விழுந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.
--
ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத்தக்கவையே. ஆனால் நான் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.
-
பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம் பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால் களில் நிற்கும்படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும்.
--
வாழ்க்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக் களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும்.
-
நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக்கொண்டு அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.
--
.ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனது தான் இதற்குக் காரணம்.
முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள் பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போது முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.
--
கல்வி கல்வி கல்வி ஒன்றே இப்போது நமக்குத் தேவை ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நமதுநாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறு பாட்டிற்கும் என்ன காரணம்! கல்வி என் பதுதான் எனக்கு கிடைத்த விடை.
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
-