வகுப்பு-20 நாள்-14-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஷ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரம்தப।
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே॥
4.33 ॥
4.33 எதிரிகளை வாட்டுபவனே, பொருட்களைக்கொண்டு
செய்யும் யக்ஞத்தைவிட,
ஞானத்தை பிறருக்கு கொடுக்கும் யக்ஞம் மேலானது.
பார்த்தா,
உலகில் உள்ள கர்மம் எல்லாம் ஞானத்தில் முற்றுப்பெறுகிறது
யக்ஞம் என்றால் என்ன?
பிரதிபலன் பார்க்காமல் தன்னிடம் உள்ளவற்றை
கொடுப்பது யக்ஞம்
யக்ஞம் மூன்று வகைப்படும்
1.பிரதிபலன் பார்க்காமல் உயிர்களுக்கு உணவிடுதல்
2.பிரதிபலன் பார்க்காமல் மனிதர்களுக்கு வாழ்க்கை
கல்வியை போதித்தல்
3.பிரதிபலன் பார்க்காமல் தகுந்த சீடர்களுக்கு
ஞானத்தை கொடுத்தல்
-
வாசலில் ஒரு பிச்சைக்காரன் நிற்கிறான்.அவனுக்கு
உணவிடுகிறோம்.பதிலுக்கு அவனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.இது ஒரு யக்ஞம்.
சிலர் உயிர்களுக்கு உணவிடுவதையே முழுநேரமும்
மேற்கொள்வார்கள்.அது சிறந்த பணி.
அடுத்து
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கைக்
கல்வி அல்லது தொழில் கல்வியை பிரதிபலன் பார்க்காமல்
போதிப்பது மிகச்சிறந்த செயல்
சிலர் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு
சுயதொழில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
அனைத்தையும் விட உயர்ந்தது
மனிதனின் அறியாமையை நீக்குவது.அதை குருவால்
மட்டுமே செய்ய முடியும்.யாரிடம் அறியாமை இல்லையோ அவரால்தான் பிறரது அறியாமையை நீக்க
முடியும்
உணவு தானம் கொடுத்தல் ஒருவனது ஒரு நாள் பசி
துன்பம் நீக்கும்
கல்வியை தானமாகக் கொடுத்தால் அந்த பிறவி துன்பம்
நீங்கும்
ஞானத்தை தானமாகக் கொடுத்தால் பல பிறவி துன்பம்
நீங்கிவிடும்.
-
இந்த ஞானத்தை எப்படி பெறுவது?
-
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா।
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந:॥
4.34 ॥
4.34 பணிந்தும், கேட்டும்,பணிவிடைசெய்தும்
அந்த ஞானத்தை அறிந்துகொள்.
தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை
உபதேசிப்பார்கள்
-
குருவிடம் ஞானம் இருக்கிறது. சீடன் அதை எப்படி
பெற வேண்டும்?
பணிந்தும்,கேட்டும்,பணிவிடை செய்தும் அந்த
ஞானத்தைப்பெற வேண்டும்.
அவ்வப்போது குருவை சந்திக்க வேண்டும். அவருடன்
சிறிது நேரமாவது செலவிட வேண்டும். பணிவாக இருக்க வேண்டும். தனது மனத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க வேண்டும்.அத்துடன் குருவுக்கு பணிவிடை செய்யவும்
வேண்டும்.
எதற்காக குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும்?
இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை.
ஒன்றை கொடுத்தால் அதற்கு இணையான இன்னொன்றைப்
பெறலாம்.
குருவால் மற்ற மனிதர்களைப்போல தனது தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
எப்போதும் உயர்ந்த மனநிலையிலேயே இருப்பதால்
அவரது உடல் மிகவும் மென்மையாக இருக்கும்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து
செல்வதற்கே சிரமமாக இருக்கலாம்.
உலகியல் மனிதர்களுடன் தொடர்புகொள்வது இயலாத
ஒன்றாக இருக்கும்.
இதனால் குருவுக்கு சீடர்களின் உதவி தேவைப்படுகிறது.
சில சீடர்கள் குருவிடம் அடிக்கடி தேவையில்லாத
கேள்விகளைக்கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
அதுவும் தவறு.அது பணிவு அல்ல
ஒவ்வொரு சீடனின் மனநிலை என்ன என்பது குருவுக்கு
தெரியும்.
ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரத்தில் பத்து
லிட்டர் பாலை நிரப்ப முடியுமா? முடியாது.
அதேபோல சீடனின் மனநிலைக்கு ஏற்பவே குரு ஞானத்தை
போதிப்பார்.
உயர்ந்த ஞானத்தை பெறும் தகுதி எல்லோருக்கும்
உடனே கிடைப்பதில்லை.
எனவே ஞானம் உடனே வேண்டும் என்று குருவிடம்
கேட்கக்கூடாது.
-
ஞானத்தை அடைய ஒரு மனிதன் நூறு படிகளை தாண்டி
செல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
தற்போது சிலர் பத்தாவது படியில் இருப்பார்கள்.சிலர்
ஐம்பதாவது படியில் இருப்பார்கள். குருவின் தொடர்பினால் யார் எந்த படியில் இருக்கிறார்களோ
அந்த படியிலிருந்து முன்னேறுவார்கள்.
பத்தாவது படியில் இருக்கும் ஒருவர் ஒரே தாவலில்
நூறாவது படியை அடைய முடியாது.
-
சில நேரங்களில் குருவின் தொடர்பினால் சீடர்களுக்கு
ஞானம் தானாக ஏற்படும்.
குரு எதையும் போதிக்க வேண்டிய தேவையில்லை.
குருவின் அருகில் இருந்தாலே போதும்.
-
குரு அப்படி என்ன ஞானத்தை போதிப்பார்?
-
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ।
யேந பூதாந்யஷேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி॥
4.35 ॥
4.35 அப்போது எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும்,
அப்படியே என்னிடத்திலும் பார்ப்பாய்.
ஞானத்தை
அறிந்து மறுபடியும் இப்படி மயக்கமடையமாட்டாய்.
இறைவன் எங்கும் நீக்கமற நிநை்திருக்கிறார்.அவர்
இல்லாத இடமே இல்லை.இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார் என்பது புரியும்.அது
மட்டுமல்ல தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதும் அப்போது புரியும்.
அதன்பிறகு மயக்கம் நீங்கிவிடும். துன்பங்கள்
எல்லாம் நீங்கிவிடும். இந்த உலம் சொர்க்கமாகத்தெரியும்.தனக்கு மரணம் இல்லை என்பதை ஒருவன்
அறியும்போது அவனுக்கு அளவற்ற ஆனந்தம் கிடைக்கிறது.
இந்த உலகம் வேடிக்கை வினோதங்கள் நிறைந்த விளையாட்டு
மைதானம்போல தோன்றும்.
No comments:
Post a Comment