வகுப்பு-25 நாள்-23-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யோகயுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:।
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே॥
5.7 ॥
யோகத்தில் வெற்றிபெற்றவன்,சுத்தமனமுடையவன்,உடலை
அடக்கியவன்,மனத்தை வென்றவன், எல்லா உயிர்களின் ஆத்மாவையும் தனது ஆத்மாவாக காண்பவன்,
கர்மம் செய்தாலும் கட்டுப்படுவதில்லை
-
யோகத்தில் வெற்றிபெற்றவன்கூட கர்மம் செய்கிறான்.ஆனால்
எப்படிப்பட்ட மனநிலையில் அவனிடம் இருக்கிறது?
எல்லா உயிர்களின் ஆத்மாவும் தனது ஆத்மா என்ற
நிலை.
-
இந்த உலகத்தில் ஆத்மா ஒன்றுதான் இருக்கிறது.அந்த
ஆத்மாவுக்கு கோடிக்கணக்கான உடல்கள் இருக்கின்றன.
நமது ஆன்மாவும்,மிருகங்களின் ஆத்மாவும்,மரம்
செடி கொடிகளின் ஆத்மாவும் ஒன்றுதான்.
சாதாரமனிதர்களுக்கு இந்த உண்மை தெரியாது.யோகிக்கு
தெரியும்.
எனவே யாரிடமும் விருப்பு,வெறுப்பை வெளிப்படுத்தாமல்
அவனால் வேலை செய்ய முடிகிறது.
-
அவரிடம் அளவற்ற ஆற்றல் வெளிப்படுகிறது.இயற்கை
சக்திகள் அவருக்கு கட்டுப்பட்டிருக்கின்றன.அவர் யாரையும் அடக்கி ஆள்வதில்லை.
-
மகான்கள் இந்த நிலையில்தான் வேலை செய்கிறார்கள்.
அப்படியானால் அவர் தீயவர்களையும் வெறுப்பதில்லையா?
தீயவர்கள் செய்யும் தீய செயல்களையும் ஏற்றுக்கொள்கிறாரா?
நல்லவன்,கெட்டவன் என்று எல்லோருமாக நானே ஆகியிருக்கிறேன்.எனது
ஆன்மாவும் அவர்களது ஆன்மாவும் ஒன்றுதான் என்பது அவருக்கு தெரியும்.
அதே நேரத்தில் நல்லது செய்தால் நல்லதும்,கெட்டது
செய்தால் கெட்டதும் நடக்கும் என்ற விதி இந்த உலகத்தில் இருக்கிறது.அந்த விதியின்படி
தீயவர்களுக்கு கிடைக்கும் தண்டனையை அவர் தடுப்பதில்லை.
-
சுவாமி விவேகானந்தர் இந்தகருத்தை செயல்முறை
வேதாந்தம் என்ற சொற்பொழிவில் விரிவாகக்கூறியிருக்கிறார்.
-
எல்லா மனிதர்களையும் தனது ஆத்மாவாகவே கருதி
ஒருவன் வேலைசெய்ய தொடங்கினால் முடிவில் ஒருநாள் உண்மையாகவே அவ்வாறு பார்க்கும் நிலையை
அடைகிறான்.
நாம் எதை நினைக்கிறோமோ அதை அடைகிறோம்
-
வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி।
ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஷிந:॥
5.18 ॥
5.18 உண்மையை உணர்ந்த பண்டிதன், கல்வியும்
பணிவும் பொருந்திய பிராமணர்களிடத்தும்(ரிஷிகளிடமும்), பசுவிடமும், யானையிடமும், நாயிடமும்,
நாயை சமைத்து உண்ணும் (பண்பாடற்ற) மனிதனிடமும் சமமான பார்வை உள்ளவனாக இருப்பான் (ஏற்றத்தாழ்வு
பார்க்கமாட்டான்)
-
எல்லா உயிர்களிலும் தானே இருப்பதை காணும் யோகி
யாரிடமும் வேறுபாடு பார்க்க மாட்டான். அவனைப்பொறுத்தவரை பிராமணனும் ஒன்றுதான் நாயும்
ஒன்றுதான்,நாயை சமைத்து உண்ணும் மனிதனும் ஒன்றுதான்.
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம்
மந:।
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி
தே ஸ்திதா:॥ 5.19 ॥
5.19 யாருடைய மனமானது சமநிலையில் உறுதியாயிருக்கிறதோ
அவர்களால் இங்கேயே (இப்பிறப்பிலேயே) பிறப்பு இறப்பை ஜயிக்கிறார்கள்(முக்தி அடைகிறார்கள்).
உண்மையில் பிரம்மம் ஸமமானது, தோசமற்றது. ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்திருக்கிறார்கள்.
இந்த பிறவியிலேயே இந்த மேலான நிலையை அடைய வேண்டும்.
ஜீவன்முக்தர்கள் இந்த உடலைவிடும்போது பிரம்மத்தில் ஒன்றுகலக்கிறார்கள்.மீண்டும் பிறப்பதில்லை
No comments:
Post a Comment