வகுப்பு-21 நாள்-16-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஸம்ந்யாஸ: கர்மயோகஷ்ச நி:ஷ்ரேயஸகராவுபௌ।
தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே॥
5.2 ॥
5.2 சந்நியாசம், யோகம் இரண்டும் சிறப்பானதுதான், என்னினும் கர்மத்தை
துறப்பதைவிட அதாவது சந்நியாசத்தைவிட கர்மத்தை
செய்வது(கர்மயோகம்) மேலானது
இரண்டு பாதைகள் இருக்கின்றன என்று பார்த்தோம்
-
1. உலகியல் வாழ்க்கையிலிருந்து, உலக கடமைகளிலிருந்து,
அனைத்து செயல்களிலிருந்தும் விடுபட்டு வாழும் நிலை சந்நியாசம்..இதை முற்காலத்தில் சாங்கிய
மார்க்கம் என்று அழைத்தார்கள்
2.உலகியல் வாழ்க்கையில் இருந்துகொண்டு,உலகியல்
கடமைகளை செய்துகொண்டு,
செயல்கள் செய்துகொண்டே மேலான நிலையை அடையும்
நிலை.
இதை யோகம் அல்லது கர்மயோகம் என்று அழைக்கிறோம்
-
உலகத்தில் வாழும் மனிதர்கள் பல்வேறுஅனுபவங்களையும்,
துன்பங்களையும் அனுபவித்தபிறகு உலகத்திலிருந்து விலகி சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளலாம்
என்று நினைக்கிறார்கள்.
துன்பத்திற்கு காரணம் ஆசை.துன்பத்தை நீக்க
வேண்டுமானால் ஆசைகளை அனுபவிப்பதைவிட அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்று சந்நியாச
மார்க்கம் கூறுகிறது.
-
இந்த இரண்டு பாதைகளும் வேறுவேறானாலும் சேரும்
இடம் ஒன்றுதான்
ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:।
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்॥
5.4 ॥
5.4 குழந்தைகள்தான் சாங்கியத்தையும் (சந்நியாச
மார்க்கம்) யோகத்தையும் (கர்ம மார்க்கம்) வெவ்வேறானவை என்று பேசுவார்கள். பண்டிதர்கள்
அவ்வாறு பேசுவதில்லை. எதையாவது ஒன்றை உறுதியாக கடைபிடிக்கிறவன் இவ்விரண்டினுடைய பலனையும்
பெறுகிறான்
சந்நியாச மார்க்கத்தில் செல்பவன் உடலை செயல்புரிவதிலிருந்து
நிறுத்துகிறான்.
பின்னர் மனத்தை கவனிக்கிறான்.மனத்தில் எழும்
எண்ணங்களை படிப்படியாக கவனித்து அடக்குகிறான்.
எனவே வாழ்க்கையில் பெரும்பாலன நேரம் தியானத்திலேயே
கழிகிறது
முடிவில் அவனது ஆன்மா உடலிலிருந்து விடுதலைபெற்று
எல்லையற்றதாகிவிடுகிறது.
உடலை செயல்புரிவதிலிருந்து நிறுத்தவேண்டுமானால்
படிப்படியாக உணவை குறைத்துக்கொண்டே வரவேண்டும். சத்வ உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும்.
யோக மார்க்கத்தில் செல்பவன் தொடர்ந்து செயல்புரிந்துகொண்டே
இருக்கிறான்.உணவு விசயத்தில் அதிக கட்டுப்பாடுகள் தேவையில்லை.உடல் நன்றாக இயங்குவதற்கு
தேவையான உணவுகளை உட்கொள்கிறான்.
மனத்தில் எழும் ஆசைகளைஅனுபவிப்பதற்கு தடைகள்
இல்லை.எந்த ஆசைகளை அனுபவிக்கவேண்டும்,எதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற அனுபக
அறிவு அவனிடம் இருக்கும்.
எனவே மனம் அவனது முழுகட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆனால் உடல் இயங்கிக்கொண்டே இருப்பதால் பிரம்மத்தை
அடைவது கடினமாகிறது.
உடலை ஓரிடத்தில் அப்படியே நிலையாக வைத்திருப்பது
என்பது கர்மயோகிக்கு சுலபத்தில் முடியாத காரியம்.
யோகயுக்தன் என்ற நிலையை அடைந்தபிறகு அவனது உடல் கர்மம் செய்வதிலிருந்து விலகிநிற்கிறது.
அப்போது எளிதில் பிரம்மத்தை அடைகிறான்.
-
ஸம்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:।
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி॥
5.6 ॥
5.6 தோள்வலிமையுடையவனே கர்ம யோகத்தை செய்யாமல்,
சந்நியாசத்தை அடைவது எளிதல்ல.
யோகயுக்தன் (யோகத்தில் நிலைபெற்றவன்) முனிவன்
விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை சம்மாளிக்க
முடியாமல் சிலர் சந்நியாச வாழ்க்கைக்கு வருகிறார்கள்.அவர்கள் சந்நியாசத்தின் எல்லையை
அடைய முடியாது.
மனத்திலிருக்கும் எண்ணங்களை நீக்கினால்தான்
சந்நியாசத்தை அடைய முடியும்.
அனைத்து கடமைகளையும் முறையாக நிறைவேற்றியவனது
மனம் அமைதியாக இருக்கும்.
தியானத்தில் ஈடுபடும்போது எந்த கடமைகளை செய்யாமல் புறக்கணித்தோமோ அந்த கடமைகள்
பற்றிய பதிவுகள் மனத்தில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கும்.
யோகயுக்தன் என்பவன் யார். கடமைகளை எல்லாம்
முறையாக செய்து முடித்து நிறைவு கண்டவன்.
அவன் முனிவன் என்று அழைக்கப்படுகிறனான்.அந்த
முனிவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.
-
புத்தமதம் இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பு
மக்கள் கர்மயோகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டார்கள்.பல்வேறு கடமைகளை செய்து வந்தார்கள்.இந்த
கடமைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து அதிலிருந்து விடுபட முடியாமல் தவிர்த்தார்கள்.கர்மயோகத்தின்
வழியாக எல்லா கடமைகளையும் முடித்து பிரம்மத்தை அடைவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது.
புத்தமதம் தோன்றிய பிறகு சந்நியாச மார்க்கம்
முக்கியத்துவம் பெற்றது. ஒரு மனிதன் உலகத்தைவிட்டு விலகி சந்நியாசம் பெற்று மடங்களில்
வாழ்ந்தால்தான் விடுதலை(முக்தி) அடைய முடியும் என்று போதிக்கப்பட்டது
சுமார் ஆயிரம் ஆண்டுகளில் வடஇந்தியாவின் மக்கள்
தொகையில் பெரும்பகுதியினர் துறவிகளாகி இல்லற,உலகியல் கடமைகளை புறக்கணித்து துறவிகளானார்கள்.இல்லறத்தார்களின்
எண்ணிக்கையைவிட துறவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
புத்தமதம் தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்குள் சந்நியாச
மார்க்கம் கடும் தோல்வியை சந்தித்து.அதற்கு காரணம் மக்கள் ஒழுக்கம் தவறியவர்களானார்கள்.
விரைவில் உலகத்தைவிட்டு விலகி சந்நியாசியாகிவிட வேண்டும் என்பதே அனைவரின் கடமை என்று
நினைத்தார்கள்.
-
கர்மயோகம் என்பது முக்கியம்.ஆனால் கர்மத்திலிருந்து
விலக முடியாதநிலைக்கு சென்றுவிடக்கூடாது.
கர்மங்கள் ஒருகாலத்தில் முடியும் முடியும்
என்று எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
அது முடிவடைவது எப்போது என்று தெரியவில்லை.
எனவே அவ்வப்போது கடமைகளிலிருந்து விலகி தனிமையில்
சென்று சந்நியாச மார்க்கத்திற்குரிய பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பிறகு சில காலம் கடமைகளை முறையாக செய்ய வேண்டும்.
இவ்வாறு இரண்டையும் சமஅளவில் கொண்டுசெல்ல முடிந்தால்
விரைவில் இரண்டிலும் முழுமை அடைந்துவிடலாம்.
No comments:
Post a Comment