வகுப்பு-53 நாள்-10-3-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
-
ஒவ்வொரு மனிதனும் எல்லா நேரங்களிலும் ஒரேபோல
இருப்பதில்லை. குணங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் நல்ல
சிந்தனை ஏற்படுகிறது,சில நேரங்களில் தீயசிந்தனை
வருகிறது,சில நேரங்களில் ஆன்மீக சிந்தனைகள் ஏற்படுகின்றன.
இவைகளுக்கெல்லாம் யார் காரணம்?
சில மனிதர்கள் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக
மாறிவிடுகிறார்கள்
சிலர் தீயவர்களாக இருந்து நல்லவர்களாக மாறுகிறார்கள்.
-
இந்த குணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
14.5
ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று பிரகிருதியிலிருந்து உண்டான குணங்கள்
தேகத்தில் ஆத்மாவை பந்தப்படுத்துகின்றன
-
சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்கள் பிரகிருதியிலிருந்து
வெளிப்படுகிறது.பிரகிருதி என்பது இயற்கை,இந்த பிரபஞ்சம்
-
இந்த மூன்றும் பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு
விதங்களில் வெளிப்படுகிறது
கிரகங்களுக்கிடையில் ஈர்ப்புவிசை attractive force(தமஸ்) விலக்கு விசை
repulsive force (ரஜஸ்) சமன்படுத்துதல் Neutral force (சத்வம்)
சிறிய அணுக்களில் கவர்தல் proton (தமஸ்) விலக்குதல்
electron (ரஜஸ்) சமன்படுத்துதல் neutron (சத்வம்)
உடல்களில் மிருக உடல் (தமஸ்),மனித உடல்(ரஜஸ்),தேவ
உடல்(சத்வம்)
மனித செயல்களில் தூக்கம்(தமஸ்) சுறுசுறுப்பு (ரஜஸ்) ஆன்மீக செயல்கள்(
சத்வம்)
மனித குணங்களில் வெறுப்பு (தமஸ்) விருப்பு
(ரஜஸ்) பற்றற்ற தன்மை (சத்வம்)
-
இந்த மூன்று குணங்களும் எல்லா இடங்களிலும்
வெளிப்படுகிறது
இது ஆத்மாவை உடல்மீது பந்தப்படுத்துகிறது.
ஒவ்வொரு மனிதனிலும் இந்த மூன்று குணங்களும்
அவ்வப்போது வெளிப்படுகின்றன.
சிலருக்கு சில குணங்கள் அதிகமாக வெளிப்படுகிறது.
தூங்கும்போதும்,சோம்பலாக இருக்கும்போதும் தமோகுணம்
மேலெழுகிறது.
சுறுசுறுப்பாக தினசரி வேலைகளை செய்யும்போது
ரஜோகுணம் மேலெழுகிறது.
ஆன்ம ஆராய்ச்சியில் ஈடுபட்டு. தியானம்,ஜபம்,படிப்பு.ஆழ்ந்த
சிந்தனை என்று தனிமையில் இருக்கும்போது சத்வகுணம் மேலெழுகிறது.
-
இரவு நேரங்களில் தமோகுணம் மேலெழுகிறது
பகல் நேரங்களில் ரஜோகுணம் மேலெழுகிறது.
இரண்டும் கலந்த சந்தியா வேளைகளில் சத்வகுணம்
மேலெழுகிறது.
-
14.6 சத்வகுணமானது தூய்மையானது, ஒளிபொருந்தியது,
தொந்தரவு செய்யாதது.
சுகத்தில் பற்றுதலாலும், ஞானத்தில் பற்றுதலாலும்
பந்தப்படுத்துகிறது
-
சத்வ குணம் மேலெழும்போது ஆன்மீகத்தைப்பற்றி
சிந்தித்துக்கொண்டிருக்கவும்,ஜெபத்தில் ஈடுபடவும்,ஆன்மீகத்தைப்பற்றி பேசவும் விருப்பம்
ஏற்படுகிறது.
இது நல்லதுதானே. பிறகு ஏன் இதையும் பந்தம்
என்று கூறுகிறார்?
பிரம்மத்தை அடையவேண்டுமானால் மூன்று குணங்களையும்
கடந்துசெல்ல வேண்டும்.
சத்வ குணம் என்பது பிரம்மத்தை அடைவதற்கான கடைசி
படியில் உள்ளது.
இருந்தாலும் பிரம்மத்தை அடையவிடாமல் தடுக்கிறது.
ஆன்மீகத்தைப்பற்றி நன்கு அறிந்த ஒருவர். கருணையின்
காரணமாக சீடர்களுக்கு அதை கற்றுக்கொடுக்க வேண்டும்
என்றுதான் விரும்புவார் , பிரம்மத்தில் ஒன்று கலந்து முக்தியடைய விரும்பமாட்டார்.
தயை,கருணை,அருள்,போன்ற மேலான குணங்கள் சத்துவத்திலிருந்து
வருகிறது.
சத்வ குணத்தை அடைந்து அதில் நிலைபெற்று வாழ்வது கடினமானது.
பல ஆண்டுகள் தீவிர தவத்தின் காரணமாகவே சத்வ
குணத்தில் நிலைபெற முடியும்
14.7 ரஜோகுணத்தை ஆசை வடிவுடையது என்றும், தீராத
தாகத்தையும், பற்றுதலையும் உண்டுபண்ணுவது என்று அறி. கர்மபற்றினால் அது தேஹியை பந்தப்படுத்துகிறது
-
பெரும்பாலான மனிதர்கள் காலையிலிருந்து இரவு
வரை தொடர்ந்து வேலைசெய்துகொண்டே இருக்கிறார்கள்.
ஏன் இப்படி வேலைசெய்கிறார்கள்?
தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக.
வீடு கட்டவேண்டும்,வீட்டில் பல்வேறு பொருட்கள்
வாங்கவேண்டும்.குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்,வசதியான வாழ்க்கை வேண்டும்.
இவை அனைத்திற்கும் பணம் வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக
படினமாக உழைக்க வேண்டும்.
ரஜோகுணம் நிறைந்திருப்பவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக
வேலைசெய்துகொண்டே இருக்கிறார்கள்.
இது நல்லதுதான்.
ஒரு காலத்திற்கு பிறகு வயதாகிவிடுகிறது. முன்புபோல
வேலைசெய்ய முடிவதில்லை.
ஆனால் நிறைவேறாத ஆசைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.
அனுபவிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன
என்ன செய்வது?
மனம் அவைகளை எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டே இருக்கும்.
கடைசி காலத்தில் நிம்மதியின்றி வாழ்வார்கள்
14.8
தமோகுணமோ,அக்ஞானத்தில் பிறந்து, எல்லா தேஹிகளுக்கும் மயக்கத்தை உண்டுபண்ணுவது
என்று அறி. அரட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் அது பந்தப்படுத்துகிறது
-
மனிதர்களில் சிலர் எந்த வேலைகளையும் செய்ய
விரும்புவதில்லை. வேறு யாராவது வேலைசெய்து இவர்களை காப்பாற்ற வேண்டும். குடிப்பழக்கத்தில்
ஆழ்ந்திருப்பார்கள். சிலர் பிச்சைஎடுத்து வாழ்வார்கள்
காமம்,களவு,வஞ்சகம் போன்ற தீய பழக்கம் நிறைந்திருக்கும்.
பகல்வேளைகளில் மது அருந்தி போதையில் படுத்திருப்பார்கள்.
இரவு வேளைகளில் களவு.கொலை போன்ற தீய செயல்களை
செய்து தீய வழிகளில் பணம் சம்பாதிப்பார்கள்.
14.9 சத்துவகுணம் சுகத்தில் சேர்க்கிறது. ரஜோகுணம்
கர்மபந்தத்திலும்,
தமோகுணம் ஞானத்தை மறைத்து கவனமின்மையிலும்
இணைக்கிறது
-
சத்வ குணத்திலிருந்து அமைதி,சுகம்,ஆனந்தம்
போன்றவை உருவாகிறது.
ரஜோ குணத்தினால் நிறைவேறாத ஆசைகளால் மனக்குழப்பம்
ஏற்படுகிறது
தமோ குணத்தினால் பெரும்துன்பம் ஏற்படுகிறது
-
14.10
சத்வம், ரஜசையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது.
ரஜஸ், சத்துவத்தையும் தமசையும் அடக்குகிறது.
அங்ஙனம் தமஸ், சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது
-
இந்த மூன்று குணங்களும் ஒவ்வொரு மனிதனிடமும்
மாறிமாறி செயல்படுகிறது.
மிகவும் தீயவன் என்று கருதும் நபர்களிடம்கூட
எப்போதாவது சத்வகுணம் மேலெழுகிறது.அப்போது தாங்கள் செய்த தவறுகளைப்பற்றி சிந்திக்கவும்,தவறு
செய்துவிட்டோமே என்ற பச்சாதாபமும் ஏற்படுகிறது.இனிமேல் நல்லவனாக வாழவேண்டும் என்ற எண்ணமும்
ஏற்படுகிறது.ஆனால் சத்வகுணம் நெடுநேரம் நீடித்து நிற்பதில்லை. மீண்டும் தவறான வழியில்
சென்றுவிடுகிறார்கள்.
அதேபோல ஒவ்வொரு குணமும் பிற குணங்களை அடக்கி
மேலெழுகிறது.
சத்வ குணம் நிறைந்த மனிதனிடம்கூட சில நேரங்களில்
தமோ குணம் மேலெழுகிறது. தீய சிந்தனைகள் மேலெழுகின்றன.அதனால் பெரும் மனப்போராட்டம் ஏற்படுகிறது.
14.11 எப்பொழுது. இந்த தேகத்தில் எல்லா பொறிவாயில்
வழியாக ஞானத்தின் ஒளி உண்டாகிறதோ
அப்பொழுது சத்துவம் ஓங்கியுள்ளது என்று அறியவேண்டும்
-
14.12
பேராசை,பிரவிருத்தி,புதியகர்மங்களை செய்தல்,அமைதியின்மை,
கர்மங்களில் பற்று இவைகள் ரஜோகுணம் மேலெழும்போது
உண்டாகிறது
-
14.13 விவேகமின்மை, முயற்சியின்மை,கவனக்குறைவு.மதிமயக்கம்
இவைகள் தமோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன
-
சத்வ குணம் நிறைந்தவன் அதைக்கடந்து பிரம்மத்தை
அடைய முடியாமல் மரணமடைந்தால் என்னவாகிறான்?
14.14 எப்பொழுது சத்வகுணம் மேலோங்கியிருக்குமோ,
அப்போது தேகத்தை எடுத்தவன் மரணமடைந்தால்,
உயர்ந்த, குற்றமற்ற உலகங்களை அடைகிறான்
-
சத்வகுணம் நிறைந்தவன் ஒளி உடலைப்பெறுகிறான்.
மேல் உலகங்களுக்கு செல்கிறான். அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பிறகு மீண்டும் முக்தி அடைவதற்காக
மனிதனாகப்பிறக்கிறான்
-
14.15 ரஜோகுணத்தில் மரணமடைந்தால் கர்மப்பற்றுடையவர்களிடத்து
மீண்டும் பிறக்கிறான்.
அப்படியே தமோகுணத்தில் சாகின்றவன் அறிவில்லாதவர்கள்
கர்ப்பத்தில் பிறக்கிறான்
-
ரஜோ குணம் நிறைந்தவன் மரணமடைந்த பிறகு மீண்டும்
மனிதனாகப்பிறந்து நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இன்னொரு வாய்ப்பைப்பெறுகிறான்.
தமோ குணம் நிறைந்தவன் மரணமடைந்தால் விலங்குகளாகப்பிறக்கிறான்.
பேய்,பிசாசுகளாக சுற்றி அலைகிறான்.
அல்லது அறிவற்றவர்களின் குடும்பத்தில் பிறக்கிறான்.
-
14.18 சத்வகுணத்திலுள்ளவர்கள் மேல்நோக்கி போகிறார்கள்.
ரஜோகுணத்தில் உள்ளவர்கள் மத்தியில் நிற்கிறார்கள்.
தமோகுணத்தில் இருப்போர் கீழ்நோக்கி செல்லுகின்றனர்
No comments:
Post a Comment