வகுப்பு-51 நாள்-6-3-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
13.1 குந்தியின் மைந்தா, இந்த உடல் க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.
யார் இந்த உடலை அறிகிறானோ அவன் க்ஷேத்ரக்ஞன்
என்று சொல்லப்படுகிறான்
-
13.2 அர்ஜுனா எல்லா க்ஷேத்ரங்களிலும் (பிரபஞ்சத்திலுள்ள
எல்லா உடல்களிலும்)
என்னை க்ஷேத்ரக்ஞன்(எல்லா உடலையும் அறிந்தவன்)
என்று அறிந்துகொள்.
க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம்
என்பது என்னுடைய கொள்கை
-
உடலுக்கு க்ஷேத்ரம் என்று பெயர்.
இந்த உடலைப்பற்றிய அறிவு யாரிடம் இருக்கிறதோ
அவன் க்ஷேத்ரக்ஞன்
அதேபோல பிரபஞ்சத்தில் கணக்கற்ற உடல்கள் இருக்கின்றன.
இந்த ஒட்டுமொத்த உடல்களையும் அறிந்தவன் யார்?
இறைவன்.
எல்லா உடல்களையும், இறைவனையும் பற்றி அறிவதுதான்
ஞானம்
-
13.3 அந்த க்ஷேத்ரம் யாது, எத்தன்மைகளை உடையது
என்றும், என்னனென்ன விரிவுகளை உடையதென்றும், எதிலிருந்து எது உண்டானதென்றும் அந்த க்ஷேத்ரக்ஞன்
யார் என்றும், என்ன மகிமையுடையவன் என்றும் அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள்
-
13.5,6 மஹாபூதங்கள், அகங்காரம்,புத்தி, அவ்யக்தம்,
இந்திரியங்கள் பத்து மற்றும் ஒன்று, இந்திரிய விஷயங்கள் ஐந்தும் விருப்பு,வெறுப்பு,சுகம்,துக்கம்,
வேறுபாட்டு உணர்வுகள்,காலஅறிவு,மனவுறுதி இவைகள் வேறுபாடுகளோடு கூடிய க்ஷேத்ரம்
(மஹாபூதங்கள்(5)- ஆகாயம்,வாயு,அக்கினி,அப்பு,பிருத்துவி,
அகங்காரம்(1)- நான் இருக்கிறேன் என்ற உணர்வு.
புத்தி(1)- மஹத் அல்லது பிரபஞ்சமனம்.
அவ்யக்தம்(1)-மூலப்பொருட்கள் தோன்றாநிலை.(பிரபஞ்சத்தின்
ஒடுக்கநிலை)
பத்து இந்திரியங்கள்(10)- கண்,காது,நாக்கு,மூக்கு,தோல்
ஆகிய 5 ஞானஇந்திரியங்கள் .
வாக்கு, கை , கால் ,குதம், குறி இந்த 5 கர்மேந்திரியங்கள்.
இந்திரியார்த்தங்கள்(5) - சப்த,ஸ்பர்ச,ரூப,ரச,கந்த
அதாவது ஒலி,தொடுதல்,ஒளி,சுவை,மணம் இந்த ஐந்தும் இந்திரியார்த்தங்கள்.
மேலும் ஒன்று(1) -உடலுள் உறைபவன் அல்லது ஆன்மா
அல்லது புருஷன்.
இவைகள் சாங்கிய தத்துவம் கூறும் 24 தத்துவங்கள்
-
ஆன்மா உடலோடு பற்றுகொள்ளும்போது அதனிடம்
விருப்பு-வெறுப்பு,சுகம்-துக்கம்,வேறுபாட்டு
உணர்வுகள்
கால உணர்வுகள் போன்றவை ஏற்படுகின்றன
-
எல்லா உடல்களைப்பற்றியும், இறைவனைப்பற்றியும்
அறிபவன் ஞானி.
அவனது செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
13.7 தற்பெருமையின்மை, செருக்கின்மை,அஹிம்சை,பொறுமை,
நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி,தன்னடக்கம்
-
13.8 இந்திரிய போக விஷயங்களில் விருப்பமின்மை
(பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,தொடுதல்,நுகர்தல்) அகங்காரமின்மை, பிறப்பு இறப்பு மூப்பு
பிணி துயரம் ஆகியவைகளில் உள்ள கேடுகளை எண்ணிப்பார்த்தல்
-
13.9 பற்றின்மை, மகன் மனைவி வீட்டைத் தனதென்று
நினையாமலிருத்தல், விருப்பமானவை வரும்போதும், விரும்பாதவை வரும்போதும் எப்பொழுதும்
மனம் நடுநிலையில் நிற்பது
-
13.10 என்னிடத்திலிருந்து(இறைவனிடமிருந்து)
எதையும் எதிர்பார்க்காமல், யோகத்தால் என்னிடம் தொடர்ந்து பக்திசெய்தல், தனியிடத்தை
நாடுதல், மக்கள் கூட்டத்தில் விருப்பமின்மை
-
13.11 ஆத்மஞானத்தில் நிலைபெறுதல், தத்துவஞானத்தின்
பலனை ஆராய்தல். இவையாவும் ஞானம் என்று சொல்லப்படுகிறது. எது இதற்கு அன்னியமானதோ அது
அக்ஞானம்
-
மேலே கூறப்பட்டுள்ள குணங்கள் யாரிடம் இருக்கிறதோ
அவன் ஞானி.
இதை ஞானம் பெறுவதற்கான வழிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்
-
ஞானி பிரம்மத்தைக்குறித்து தியானிக்கிறான்.
பிரம்மம் என்பது இறைவனின் உருவமற்ற நிலை.
ஞானம் பெறுவதற்கான வழிகள் என்ன?
1.தற்பெருமையின்மை
நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்று
தற்பெருமை
2.செருக்கின்மை
தன்னைவிட தாழ்ந்தவர்களை அவமதித்தால்,அலட்சியம்
செய்தால் அதற்கு பெயர் செருக்கு
3.அஹிம்சை
பிற உயிர்களை கொல்லுவது,துன்புறுத்துவது ஹிம்சை
அதற்கு எதிர்பதம் அஹிம்சை
4.பொறுமை
ஒரு செயல் உடனே நடந்துவிட வேண்டும் என்று அவசரப்படக்கூடாது.
ஒவ்வொரு செயலும் அதற்குரிய காலத்தில்தான் நடக்கும் அதுவரை காத்திருக்க வேண்டும்
5.நேர்மை
எந்த வேலையைச் செய்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும்
6.குருசேவை
குருவிடம் பாடம் கற்கும் சீடன் குருசேவை செய்ய
வேண்டும்.
7.தூய்மை
உடலையும்,உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள
வேண்டும்.
8.விடாமுயற்சி
நல்லது என்று நினைத்து ஒரு செயலை செய்யத்தொடங்கினால் எக்காரத்தைக்கொண்டும் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது
9.தன்னடக்கம்
புகழ்வரும்போது அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்
10.விஷயங்களில் விருப்பின்மை
உலக விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.நம்மைச்சுற்றி
பல கேளிக்கைகள் நடந்துகொண்டிருந்தாலும் அவைகளிலிருந்து விலகியிருத்தல்
11.அஹங்காரமின்மை
இந்த உடல் என்னுடையது என்ற எண்ணத்தைவிட்டுவிட
வேண்டும். நான் என்பது உடல் அல்ல.
12.பிறப்பு,இறப்பு,வயோதிகம் பிணி,துயரம் ஆகியவற்றினால்
வரும் துன்பங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
மறுபடிமறுபடி பலமுறை பிறந்து பலமுறை இறந்துவிட்டோம்.
ஒவ்வொரு முறையும் எத்தனை நோய்களை சந்திக்கவேண்டியிருக்கிறது? வயதான காலத்தில் எவ்வளவு
துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.இவைகளை எப்போதும் நினைத்துப்பார்த்து.இனி மறுபடி
பிறக்கக்கூடாது என்ற எண்ணத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
13.பற்றின்மை
இந்த உலகத்திலுள்ள எதனோடும் பற்று வைத்துக்கொள்ளக்கூடாது.சிறிது
பற்று இருந்தாலும் மறுபடி பிறக்கவேண்டிய சூழல் ஏற்படும்
14.மகன்,மனைவி,வீட்டை தனதென்று நினைக்காமல்
இருத்தல்.
மகன்,மனைவி,வீடு இவைகள் இருக்கலாம். இவைகளை
விட்டுவிட்டு செல்ல வேண்டிதில்லை.ஆனால் இவைகள் தன்னுடையவர்கள் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.
அப்படியானால் யாருடையவர்கள்? இந்த உலகத்திலுள்ள எல்லாம் இறைவனுக்கு சொந்தமானது. தனக்கு
எதுவும் சொந்தம் இல்லை. உடல்கூட தனக்கு சொந்தம் இல்லை
15.விருப்பமானவை வரும்போதும், விரும்பாதவை
வரும்போதும் எப்பொழுதும் மனம் நடுநிலையில் நிற்பது.
விருப்பமானவை வரும்போது எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள்,
விரும்பாத நோய்கள் வரும்போது துன்பப்படுவார்கள். எது வந்தாலும் சரி, சமநிலையில் இருக்கவேண்டும்.
மகிழ்ச்சியடையவும்கூடாது. துயரப்படவும் கூடாது
16.இறைவனைத்தவிர வேறு எதையும் எண்ணாமல் இருத்தல்
உலகத்திலுள்ள ஒன்றைக்கூட நினைக்கக்கூடாது.
எப்போதும் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டும்.
17.தனிஇடத்தை நாடுதல்
தனி இடம் என்பது வீட்டைத்துறந்து காடுகளில்
வசிப்பது என்று அர்த்தம் இல்லை.
வீட்டில் இருந்தாலும் தனியாக இருப்பதற்குரிய
ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.
குடும்பதினருடன் பேசி,மகிழ்ந்து,பொழுதைப்போக்கக்கூடாது.
தங்களுக்குரிய அறையில் தனித்திருக்கவேண்டும்.
18.மக்கள் கூட்டத்தை விரும்பாமல் இருத்தல்
திருவிழாக்கள்,பண்டிகைகள்,மேடை நிகழ்ச்சிகள்
போன்று மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது.அப்படி சென்றால் மனம் பாதிக்கப்படும்.உலகத்தைப்பற்றிய
எண்ணங்கள் அதிகரிக்கும்,
19ஆத்ம ஞானத்தில் நிலைபெற்றிருத்தல்
நமது இயல்பு என்ன? ஆத்மா.
மனத்தை எப்போதும் அதில் வைக்க வேண்டும்.
20.உண்மைப்பொருள் ஆராய்ச்சி
இறைவன் மட்டுமே எப்போதும் நிலையாக இருப்பர்.
இந்த பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது. இது நிலையில்லாதது. இதை நினைத்துக்கொண்டிருந்தால்
இறைவனை அடைய முடியாது என்பதை எப்போதும் ஆராய்ந்து மனத்தை உலகியல் விஷயங்களிலிருந்து
விலக்கி எப்போதும் இறைவனை நோக்கி செலுத்தவேண்டும்
-
-
தொடரும்..
No comments:
Post a Comment