வகுப்பு-33 நாள்-12-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
-
இறைவனுடைய இயல்பு என்ன? இறைவன் என்பவர் யார்?
அவர் எங்கே இருக்கிறார்?
இவைகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் ஒவ்வொருவரும்
தேடிப்பெற வேண்டும்.
இன்னொருவர் எவ்வளவுதான் விளக்கினாலும் புரிந்துகொள்ள
முடியாது.
இறைவனைத்தேடித்தேடி அலைந்து முடிவில் நானும்
இறைவனும் ஒன்றே என்ற அனுபவத்தை அடைகிறோம்.
இந்த நிலையை அடைவதுவரை மனிதனின் தேடல் நிற்காது.
-
இறைவன் பற்றிய தத்துவக் கருத்தை ஸ்ரீகிருஷ்ணர் இங்கே விளக்குகிறார்.
-
பூமிராபோ அநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச।
அஹம்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா॥
7.4 ॥
7.4 நிலம், நீர், அக்னி,காற்று,ஆகாயம்(இவை
பஞ்சபூதங்கள்) மற்றும்,
மனம்,புத்தி, அகங்காரம் என்று என்னுடைய பிரகிருதி
எட்டுவிதமாக பின்னப்பட்டிருக்கிறது
பஞ்சபூதங்கள் மூலப்பொருள்
வானம் அல்லது ஆகாயம் என்பது அணுக்களுக்கிடையே
உள்ள இடைவெளி.
இந்த வெளி எல்லா இடத்திலும் பரந்துள்ளது.
வெளி இல்லாவிட்டால் அணுக்கள் அனைத்தும் ஒன்றோடு
ஒன்று இணைந்து நகரமுடியாமல் அப்படியே நின்றுவிடும்.
உலகம் முழுவதும் வானம் அல்லது இடைவெளியால்
நிரம்பியுள்ளது.
அக்னி என்பது வெப்பம்.
வெப்பம் நுண்ணியதாகும்போது வெப்ப அலைகளாக,
ஒளி அலையாக மாறிவிடுகிறது.
வெப்பத்திற்கு இரண்டு இயல்பு உண்டு. ஒன்று
ஒளி இன்னொன்று சூடு.
ஏதாவது ஒரு அணுவின்மீது ஒளி செயல்படும்போது
அந்த அணு சூடாகிறது.அப்போது ஒளியைக் காண்கிறோம்
ஒருவேளை எந்த அணுக்களும் இல்லாவிட்டால் ஒளி
மட்டும் நிற்கும்.
தனி ஒளியை யாராலும் காண முடியாது. ஏதாவது ஒரு
அணுவில் பட்டு பிரதிபலிக்கும்போது மட்டுமே அதைக்காண இயலும்.
-
வாயு என்பது அணுக்களை ஓரிடத்திலிருந்து இன்னோர்
இடத்திற்கு செலுத்தும் சக்தி
மிகப்பெரிய சந்திர சூரியர்கள் முதல் மிகச்சிறிய
அணுக்கள் வரை உள்ள அனைத்தையும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகர்த்துவதற்கு
சக்தி தேவைப்படுகிறது. அது வாயு.
வாயு பல்வேறு இடங்களில்,பல்வேறு நிலைகளில்
பல்வேறு சக்தியாக இயங்குகிறது.
நிலம், நீர் இந்த இரண்டும் கூட்டுப்பொருள்
ஒரு மரக்கட்டையை பொடிப்பொடியாக அரைத்தால் அவைகள்
நுண்ணிய துகள்களாகின்றன.
மேலும் அவைகளை அரைத்தால் இன்னும் நுண்ணியதாகிறது.
இன்னும் அரைத்தால் அவைகள் வெப்ப அலைகளாக மாறிவிடுகின்றன.
அதற்குமேல் நுண்ணியதாக்க முடியாது.
அதேபோல நீர்த்துளிகளை மேலும் மேலும் நுண்ணியதாக்கிக்கொண்டே
சென்றால் கடைசியில் அவைகளும் வெப்ப அலைகளாக மாறிவிடுகின்றன.
-
இந்த பஞ்ச பூதங்களைத் தாண்டியிருப்பது
மனம்,புத்தி, அகங்காரம்
-
அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே
பராம்।
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்॥
7.5 ॥
7.5 ஆனால் இது (மேலே சொன்ன எட்டும் ) கீழானது.
இதிலிருந்து வேறானதும் உயிர்களின் ஜீவனான என்னுடைய
மேலான பிரகிருதியை
அறிவாயாக.
தோள்வலிமையுடையோய், இந்த பிரபஞ்சம் இதனால்
தாங்கப்படுகிறது.
-
மேலே கூறப்பட்ட எட்டு தத்துவங்களும் தாழ்ந்தது.
அதைவிட உயர்ந்தது எது?
எதிலிருந்து இந்த உலகம் உற்பத்தியாகிறதோ அது
உயர்ந்தது.
எதிலிருந்து இந்த ஜீவன் உற்பத்தியாகிறதோ அது
உயர்ந்தது.
ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய।
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா॥
7.6 ॥
7.6 எல்லா உயிர்களும் இந்த இரண்டு யோனிகளை
பிறப்பிடமாக கொண்டுள்ளது என்று அறிந்துகொள்
(மேலே சொன்ன எட்டுக்கும் ஒரு யோனி . அவ்யக்தம்
இன்னொரு யோனி ).
நான் பிரபஞ்சம் முழுவதற்கும் வெளிப்படுவதற்கும்,அதுபோல
பிரபஞ்சம் முழுவதும் ஒடுங்குவதற்கும் காரணம்
-
இந்த உலகத்தில் பல்வேறு சூரிய சந்திரர்கள்
இருக்கின்றன.இவைகள் எங்கிருந்து வெளிப்படுகின்றன?
தற்காலத்தில் வெள்ளைத்துளையிலிருந்து பல கிரகங்கள்
வெளி வருகின்றன. கருப்புதுளைக்குள் பல கிரகங்கள் உள்ளே செல்கின்றன என்று கூறுகிறார்கள்.
முற்காலத்தில் இதை பிரபஞ்ச யோனி என்று அழைத்தார்கள்.
இந்த யோனியிலிருந்து பல்வேறு கிரகங்கள் வெளி வருவதை யோகி காண்கிறான்.
இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இரண்டு
யோனிகளைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.
மனிதர்கள்,விலங்குகள் உட்பட அனைத்தும் தாயின்
கருப்பையிலிருந்து உருவாகி யோனி வழியாக வெளியே வருகிறோம்.இது இரண்டாவது யோனி.
முதல் யோனி எது?
இந்த உயிர்கள்,விலங்குகள் உட்பட கிரகங்கள்
அனைத்தும் எதிலிருந்து வெளி வந்ததோ
அது முதல் யோனி
அது பிரபஞ்சயோனி.
நிலம்.நீர்,காற்று,தீ,ஆகாயம்,மனம்,புத்தி,அகங்காரம்
என்ற எட்டும் பிரபஞ்ச யோனியிலிருந்து வெளிவருகிறது.
அதற்கு முன்பு அது எப்படி இருந்தது?
இயங்கா நிலையில் இருந்தது.மூலநிலையில் இருந்தது
மத்த: பரதரம் நாந்யத்கிம்சிதஸ்தி தநம்ஜய।
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ॥
7.7 ॥
7.7 தனஞ்சயா, என்னைவிட மேலானது வேறு ஒன்றும்
இல்லை. நூலிலே மணிகளை கோர்த்துவைத்ததுபோல, இவையாவும் என்னிடம் கோர்க்கப்பட்டிருக்கின்றன
-
பிரம்மத்தை இறைவன் என்கிறோம்.பிரம்மம் எப்போதும்
இருக்கிறது. இந்த உலகத்திலுள்ள உயிர்கள்,கிரகங்கள் உட்பட அனைத்தும் பிரம்மத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.
-
-
மேலே கூறப்பட்டுள்ள தத்துவங்களை தியானித்து
அறிந்துகொள்ள வேண்டும்.
தத்+த்வம்=தத்துவம்
தத் என்றால் அது
த்வம் என்றால் நீ
நீயே அதுவாக ஆகிறாய்
-
-
இந்த தத்துவத்தை அறிந்துகொண்டால் சந்தேகங்கள்
அகல்கின்றன. சந்தேகங்கள் அகன்றால் இறைக்காட்சி கிடைக்கிறது.
No comments:
Post a Comment