வகுப்பு-42 நாள்-23-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
-
இறைவனுக்கு இரண்டு நிலைகள் இருக்கின்றன.
ஒன்று செயல்படும் நிலை.
இன்னொன்று செயல்படாதநிலை
செயல்படும் நிலைக்கு ஈஸ்வரன்,விஷ்ணு,காளி,போன்ற
பல பெயர்கள் இருக்கின்றன
செயல்படாத நிலைக்கு பிரம்மம் என்று பெயர்
-
பிரபஞ்சத்தை தனது உடலாகவும், பிரபஞ்ச மனத்தை
தனது மனமாகவும், பிரபஞ்ச ஆன்மாவை தனது ஆன்மாவாகவும் கொண்டுள்ள நிலை என்பது இறைவனின்
செயல்படும் நிலை.
பிரபஞ்சம் முற்றிலும் ஒடுங்கி மூலநிலைக்கு
சென்ற பிறகு இறைவன் செயல்படாத நிலையில் இருக்கிறார்
-
பக்தர்கள்,யோகிகள் செயல்படும் நிலையை அடைய
வரும்புகிறார்கள்
சந்நியாசிகள்,ஞானிகள் செயல்படாத நிலையை அடைய
விரும்புகிறார்கள்.
-
இரண்டும் முக்திதான்.
செயல்படும் நிலையை அடைபவர் ஈஸ்வரனுடன் ஒன்றுகலக்கிறார்
செயல்படாத நிலையை அடைபவர் பிரம்மத்துடன் ஒன்றாகிறார்.
செயல்படும் நிலையை அடைபரின் உடல் பிரபஞ்ச உடலுடன்
ஒன்றாகிவிடும்
செயல்படாத நிலையை அடைபவரின் உடல் மூலநிலைக்கு
சென்றுவிடும்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா।
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்॥
8.8 ॥
8.8 பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாத மனத்துடன்,யோகத்தை
அப்பியாசம் செய்து (அப்பியாசம் என்பது தொடர்து செய்யும் பயிற்சி) சித்தத்தால் திவ்யமான
மேலான புருஷனை சிந்தனை செய்பவன் அதை அடைகிறான்.
கவிம் புராணமநுஷாஸிதாரம் அணோரணீயம்ஸமநுஸ்மரேத்ய:।
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூபம் ஆதித்யவர்ணம் தமஸ:
பரஸ்தாத்॥ 8.9 ॥
ப்ரயாணகாலே
மநஸா அசலேந பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ।
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஷ்ய ஸம்யக் ஸ தம் பரம்
புருஷமுபைதி திவ்யம்॥ 8.10 ॥
-
8.9,10 முற்றும் உணர்ந்தவனை,ஆதிகாலத்தவனை,
அனைத்தையும் ஆளுபவனை, அணுவைவிட நுண்மையானவனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு
எட்டத வடிவானவனை, சூரியனைப்போல் ஒளிர்பவனை, இருளுக்கு அப்பாற்பட்டவனை, மரணகாலத்தில்,
பக்தியோடும், யோகபலத்தோடும், புருவத்தின் மத்தியில் பிராணனை முழுவதும்வைத்து, யார்
நினைக்கிறானோ, அவன் மேலான திவ்யபுருஷனை அடைகிறான்.
-
இறைவனின் செயல்படும் நிலையைப்பற்றி கிருஷ்ணர்
விவரிக்கிறார்
-
அவன் எல்லாவற்றையும் அறிந்தவன்.பிரபஞ்ச மனம்
அல்லது வேதத்தை அவர் அறிந்தவர்
ஒவ்வொருவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.அனைத்தையும்
அவர் அறிவார்
அவருக்கு துவக்க காலம் என்று ஒன்று இல்லை.
எல்லா காலத்திலும் இருக்கிறார்.
இந்த உலகத்தை ஆள்வது அவர்தான்.
அணுவை விட நுண்மையானவர் என்றால் என்ன அர்த்தம்?
அணுவை உடைத்துக்கொண்டே சென்றால் கடைசியில்
என்னவரும்?
அந்த எல்லையற்ற நிலை அவருடையது.
பூமி மனிதர்களைத் தாங்குகிறது. அதேபோல அவர்
இந்த மழு பிரபஞ்சத்தையும் தாங்குகிறார்.அவருள்தான் இந்த எல்லா கிரகங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன..
மனத்தின் மூலம் அவரை அறிய முடியாது.
சூரியன் எப்படி ஒளிர்கிறது? அதைவிட பலகோடி
மடங்கு பெரிய சூரியன்களும் உள்ளன.
எல்லையற்ற மடங்கு ஒளி அவரிடமிருந்து வெளிப்படுகிறது.
இந்த
உலகத்தில் ஒளியும் இருளும் கலந்துள்ளது. ஆனால் அவர் இரண்டிற்கும் அப்பாற் இருக்கிறார்.
மரண காலத்தில் பக்தியோடும் யோக பலத்தோடும்
புருவத்தின் மத்தியில் பிராணனை முழுவதும்வைத்து, யார் நினைக்கிறானோ, அவன்
மேலான திவ்யபுருஷனை அடைகிறான்
அந்த இறைவனின் இருப்பிடம் ஒவ்வொரு மனிதனிலும்
இருக்கிறது.
அது புருவ மத்தி.
புருவ மத்தியில் உயிரை கொண்டு செல்ல வேண்டும்.
அங்கு செல்பவன் ஈஸ்வரனது காட்சியைப் பெறுகிறான்.
அந்தநிலையில் திவயபுருஷனைத்தவிர வேறு எதையும்
விரும்பாத நிலையில் உயிரைவிட்டால் ஈஸ்வனுடன் ஒன்றாகிவிடுகிறான்.
-
சைவர்கள் புருவமத்தி என்பது சிவனின் இருப்பிடம்
என்பார்கள்
வைணவர்கள் புருவமத்தி விஷ்ணுவின் இருப்பிடம்
என்பார்கள்
சாக்தர்கள் புருவமத்தி காளியின் இருப்பிடம்
என்பார்கள்.
எல்லாமே ஒன்றுதான். பெயர்கள் மட்டுமே வேறுவேறு.
-
அந்த இறைவனின் குணங்கள் பற்றி மேலே பார்த்தோம்.மேலே
கூறப்பட்டுள்ள இறைவனின் குணங்களுடன் இறைவனை தியானித்து புருவமத்தில் உயிரை கொண்டு செல்பவர்கள்
அந்த மேலான நிலையை அடைகிறார்கள்.
புருவமத்தியை அடையாமல் அதற்கு கீழே உள்ள தொண்டை,ஹிருதயம்
போன்ற இடங்களில் உயிரைவைத்து அந்த நிலையை அடைபர்கள் வேறு உலகங்களை அடைகிறார்கள்.அவர்கள்
ஈஸ்வரனுடன் ஒன்று கலப்பதில்லை
-
-
இறைவனின் செயல்படாத நிலை என்பது என்ன?
-
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விஷந்தி யத்யதயோ வீதராகா:।
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம்
ஸம்க்ரஹேண ப்ரவக்ஷ்யே॥ 8.11 ॥
8.11 வேதத்தை அறிந்தவர்கள், எதை அழிவற்றது
என்கின்றனர்? பற்று நீங்கிய சந்நியாசிகள் எதனுள் புகுகிறார்கள். எதை விரும்பி பிரம்மச்சர்யத்தை
கடைபிடிக்கின்னரோ அந்தநிலையை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச।
மூத்ந்யார்தாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்॥
8.12 ॥
ஓமித்யேகாக்ஷரம்
ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்।
ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்॥
8.13 ॥
8.12,13 எல்லா துவாரங்களையும் அடக்கி (கண்,காது
உட்பட 9துவாரங்களை)
மனதை ஹிருதயத்தில் நிறுத்தி
தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து
யோகசாதனையில் நிலைபெற்று
ஓம் என்கின்ற ஓரெழுத்து அழிவற்ற மந்திரத்தை
உச்சரித்துக்கொண்டு,
உடலைவிட்டு யார் போகிறாரோ
அவன் மேலான நிலையை பெறுகிறான்.
“ஓம்”
என்பது தமிழில் “ஆம்” என்று
மருவியுள்ளது.பிற மதங்களில் “ஆமென்” என்று
மாறியிருக்கிறது.
-
கண்கள் இரண்டு, நாசித்துவாரங்கள் இரண்டு, காதுகள்
இரண்டு, வாய், மலத்துவாரம், சலத்துவாரம் மொத்தம் ஒன்பது
இந்த ஒன்பது துவாரங்களின் செயல்பாடும் முற்றிலும்
நிற்க வேண்டும்.
கண்களை முழுவதும் மூடியிருக்க வேண்டும்.
மூக்கு வழியாக எதையும் சுவாசிக்காமல் இருக்க
வேண்டும்.காற்று எதுவும் உள்ளே செல்லக்கூடாது.காற்று வெளியே வரவும் கூடாது
காதுகள் எதையும் கேட்காமல் இருக்க வேண்டும்.
வாய் வழியாக எதுவும் உள்ளே செல்லக்கூடாது.அதாவது
உணவு அருந்தக்கூடாது
வாய்வழியாக வெளியே எதுவும் வரவுக் கூடாது.
அதாவது எதுவும் பேசக்கூடாது
மலத்துவாராம்,சலத்துவாரம் முற்றிலும் செயல்படக்கூடாது.
இந்த நிலையை அடைவதற்காக வெளிச்சம் துளையாத
குகை அல்லது பூமிக்குள் பாதாள அறையில் சில நாட்கள் வசிக்கிறார்கள்.
இப்படி நவதுவாரத்தையும் அடக்கிய பிறகு.
மனத்தை ஹிருதயத்தில் நிறுத்த வேண்டும்.
ஹிருதயம் உலகத்தின் ஒடுக்க நிலை.
புருவமத்தி பிரபஞ்சத்தின் விரிவுநிலை.
எனவே மனத்தை ஒடுக்கநிலையில் நிறுத்தவேண்டும்
பிராணனை உச்சந்தலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
புருவமத்தி வழியாகத்தான் உச்சந்தலைக்கு கொண்டுசெல்ல
முடியும்.
புருவமத்தியின் இறைவனின் மனதை மயக்கும் காட்சிகள்
கிடைக்கின்றன.அந்த நிலையையும் கடந்துசெல்ல வேண்டும்.
“ஓம்”
என்ற ஓரழுத்து மந்திரத்தை உள்ளுக்குள் உச்சரித்தவாறு உடலைவிட்டு செல்ல
வேண்டும்.
அப்படி சென்றால் என்வாகும்?
இறைவனின் செயலற்ற நிலை அல்லது பிரம்மத்தில்
ஒன்று கலந்துவிடலாம்
பிரம்மத்தின் இருப்பிடம் உச்சந்தலை.
மனிதனிடம் உச்சந்தலை இருப்பதுபோல உலகத்திற்கும்
ஒரு உச்சந்தலை இருக்கிறது. அங்கே இறைவன் உருவமற்ற நிலையில் இருக்கிறார். அந்த நிலையை
அடைந்து இறைவனுடன் ஒன்று கலக்கிறான்.
-
-
இவ்வாறு இரண்டு நிலைகள் பற்றி ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகிறார்.
ஸ்ரீகிருஷ்ணர் தன்னை ஈஸ்வரன் அல்லது செயல்படும்
நிலையில் வைத்துக்கொண்டு பேசுகிறார்.
ஸ்ரீகிருஷ்ணரை நினைப்பவர்கள் அவரிடம் பக்தி
செலுத்துபவர்கள்
புருவமத்தியில் மனதைவைத்து அவரை அடைய வேண்டும்.
-
இதைவிடவும் சற்று கீழான நிலைகளும் உள்ளது.
அங்கே பல உலகங்கள் இருக்கின்றன. வைகுண்டம்,
கைலாயம் உட்பட இன்னும் பல...
அங்கே இறைவன் உருவத்தோடு தனது தேவியோடு பக்தர்களுடன்
பேசக்கூடிய நிலையில் இருக்கிறார்.
பக்தர்கள் அவரை எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
அவருக்கு சேவைகள் செய்வார்கள்.
இன்னும் பல லீலைகள் அங்கே நடைபெறும்..
பல மதங்கள், புராணங்களில் இவைகள் பற்றிய வர்ணனைகளை
காணலாம்.
ஒவ்வொரு மதத்தை உருவாக்குபவரும் தனக்கென்று
ஒரு உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
சில மதங்கள் இதை சொர்க்கம் என்று அழைக்கிறது.
இந்து மதத்தில் பல படித்தரங்களில் பல சொர்க்கங்கள்
இருக்கின்றன.
இந்த உலகங்களை அடைபவர்கள் சிலவேளைகளில் மீண்டும் பிறக்க வேண்டி வரலாம்.
இந்த உலகங்கள் பல லட்சம் ஆண்டுகள் நிலைத்து
இருந்தால்கூட இவைகளும் தற்காலிகமானவைதான் என்று வேதம் கூறுகிறது.
No comments:
Post a Comment