வகுப்பு-40 நாள்-20-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யம் யம் வா அபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்।
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:॥
8.6 ॥
8.6 குந்தியின் புதல்வா, மரணதருவாயில் எந்த
எந்த பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை விடுகிறானோ, எப்பொழுதும் அப்பொருளையே நினைத்துக்கொண்டிருப்பவனாகிய
அவன் அதையே அடைகிறான்.
-
மரணமடையும்போது எதை நினைத்துக்கொண்டு உயிரைவிடுகிறான்,என்பதைப்பொறுத்து
அடுத்தபிறவி அமைகிறது
-
இதைப்பற்றி சற்றுவிரிவாக விளக்கலாம் என நினைக்கிறேன்.
-
மரணமடைந்தபிறகு ஒருவன் அடுத்தபிறவியில் எப்படி
பிறப்பான்?
மரணத்திற்கு பிறகு நடப்பது என்ன?
ஒருவரின் மரணத்திற்குபிறகு நடப்பவைகள் ஏன்
நமக்குதெரிவதில்லை?
இவைகள் போன்ற பல கேள்விகளுக்கு வேதங்களில்
பல பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன,
இருந்தாலும் கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான்
இருக்கிறது.
உண்மையிலேயே மரணத்திற்கு பிறகு இன்னொரு வாழ்க்கை
உள்ளதா?
மறுபிறவி உள்ளதா?
-
பலகோடி உயிரினங்கள் இருக்கின்றன.இவைகளுக்கெல்லாம்
மறுபிறவி இருக்கிறதா?
இவைகள்
இறந்தபிறகு என்னவாகும்?
-
பல்வேறு கேள்விகளில் எனக்குதெரிந்த ஒருசில
கேள்விகளுக்கு விடைகூற முயற்சிக்கிறேன்.
இவைகளை அப்படியே நம்பவேண்டும் என்ற அவசியம்
இல்லை.
முடிந்தவரை
சிந்தித்து பார்க்கலாம்.
பகுத்தறிவுக்கு ஒத்துவரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம்
மற்றவற்றை விட்டுவிடலாம்
இவைகள் குறித்து சிந்திக்க சிந்திக்க சந்தேகங்கள்
விலகுவதற்கு பதிலாக மேலும் புதிய சந்தேகங்கள் ஏற்படலாம்.
-
மனிதனின் உடலில் ஆறு சக்கரங்கள் இருக்கின்றன.
அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மனிப்பூரகம்,
அனாகதம், விசுத்தி, ஆக்ஜா, சஹஸ்ராரம்.
இந்த ஆறும் ஆறு உலகங்கள்
இந்த ஆறும் உயிர்களின் ஆறு இருப்பிடங்கள்.
இவைகள்பற்றி விரிவாக பின்பு பார்க்கலாம்
-
மிகவும் கீழ்நிலையில் இருப்பது மூலாதாரம்.
மிருகங்கங்களுக்கு உயிர் மூலாதாரத்தில் இருக்கிறது.
உயிர் என்பது என்ன?
நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் மொத்த
சக்திகளும் சேர்ந்து பிராணசக்தி என்று பெயர்.
தமிழில் உயிர்
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகலன், தேவதத்தன், தனஞ்செயன் இந்த சக்திகள் அனைத்தும் சேர்ந்து
பிராணசக்தி
-
உயிர் என்பது உடல் முழுவதும் வியாபித்துள்ளது.
மரணமடையும்போது அது ஏதாவது ஒரு சக்கரத்திற்குள்
செல்கிறது.
சஹஸ்ராரத்திற்கு சென்றால் பிரம்மமாகிறது.
ஆக்ஜாவிற்குள் சென்றால் உலகை ஆளும் ஈஸ்வரநிலையை
அடைகிறது.
மிருகங்களை ஒத்த மனிதர்கள் மரணமடையும்போது
மூலாதாரத்திற்குள் செல்கிறது.
அந்த மனிதன் தூக்கநிலைக்கு சென்றுவிடுகிறான்.
என்றாவது ஒருநாள் வேறுபிறவி கிடைக்கலாம்,அல்லது
அப்படியே அழிந்தும்போகலாம்.இதைப்பற்றி உறுதியான முடிவுக்கு வரமுடியாது.
ஒருவேளை அவன் அழிந்துபோனால்,மறுபடி பிறக்காமல்
போனால் அவன் செய்த பாவங்களை யார் அனுபவிப்பது?
அவர்கள் குழந்தைகள் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள்
அல்லது அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் அனுபவிக்கலாம்.
விலங்கு ஒன்று மரணமடையும்போது அது தூக்கநிலைக்கு
சென்றுவிடுகிறது.
தூக்கத்தில் காலம் இல்லை.இடம்,காரண காரியங்கள்
எதுவும் இல்லை.உணர்வு இல்லை.
எதையும் அனுபவிப்பதற்கோ,உணர்வதற்கோ எதுவும்
இல்லை.
புலி ஒன்று மானைத் துரத்திசென்று அதைக்கொல்வதாக
வைத்துக்கொள்வோம்.
மான் உயிரிழக்கும்போது புலியைப்பற்றிய பயத்திலேயே
உயிரைவிடுகிறது.
உயிர் மூலாதாரத்திற்குள் சென்று தூக்கநிலைக்கு
சென்றுவிடுகிறது.தூக்கநிலை என்பது சூன்யநிலை.
எதுவும் அற்ற நிலை
மானின் உடலை புலிகள் உண்கின்றன. மானின் உடல்
அணுக்கள் புலியின் உடல் அணுக்களுடன் கலக்கிறது.
இப்போது அந்த மானின் உடல் என்னவானது?
புலிகளின் உடல்களோடு ஒன்றாகிவிட்டது. மான்
அழிந்துவிட்டதா? இல்லை
இறந்துபோன மானின் உடல்தான் புலியின் ரத்தமாகிறது,அதிலிருந்துதான்
புதிய உயிர் உருவாகிறது.
இப்போது அந்த மான்தான் புலிக்குட்டியாக பிறக்கிறது.
-
மனிதன் இறந்துபின் என்னவாகிறான்?
-
-
அடுத்த நான் இதுபற்றி பார்க்கலாம்...
-
இதுகுறித்து கேள்விகள் இருந்தால் கேட்கலாம்...அடுத்துவரும்
வகுப்புகளில் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்...
No comments:
Post a Comment