வகுப்பு-39 நாள்-19-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே।
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:॥
8.3 ॥
8.3 அழிவற்றதாகவும் மேலானதாகவும் இருப்பது
பிரம்மம். அது அத்யாத்மம் என்று சொல்லப்படுகிறது.
உயிர்களை உண்டுபண்ணி நிலைத்திருக்கச் செய்வதாகிய வேள்விக்கு அல்லது கர்மம் எனப்படுகிறது.
-
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஷ்சாதிதைவதம்।
அதியஜ்ஞோ அஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர॥
8.4 ॥
-
8.4 அர்ஜுனா, அழியும் பொருள் அதிபூதம் என்று
சொல்ப்படுகிறது. புருஷன் அதிதெய்வம் எனப்படுகிறான். இனி தேகத்தினுள் நானே அதியக்ஞமாகிறேன்
-
அத்யாத்மம்,அதிபூதம்,அதிதெய்வம்,அதியக்ஞம்
என்று நாக்கு இருக்கிறது இவைகள் பற்றி பார்ப்போம்
-
அதியக்ஞம்
-
யக்ஞம் என்றால் பிரதியாக எதையும் எதிர்பார்க்காமல்
தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பது.தியாகம் செய்வது
இயற்கை முழுவதையும் பார்த்தால் எங்கும் யக்ஞம்
நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
சூரியன் ஒளி தந்துகொண்டே இருக்கிறது.பதிலுக்கு
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
பூமி மனிதர்களையும் உயிரினங்களையும் தாங்குகிறது.அவைகள்
வாழ வழி செய்கிறது. பதிலுக்கு எதையும் எதிர்பார்ப்பதில்லை.
இயற்கை முழுவதும் இப்படியே நடந்துகொண்டிருக்கிறது.
-
மனித உடலை எடுத்துக்கொண்டால்கூட அந்த உடலுக்குள்ளேயும்
இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது.
இதயம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது,இரத்தத்தை
பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது..யாரும் அதற்கு சம்பளம் கொடுப்பதில்லை.
நுரையீரல் காற்றை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அதற்கும் சம்பளம் கிடைப்பதில்லை.
இரைப்பை உணவை ஜீரணிக்கிறது.பதிலுக்கு எதுவும்
கிடைப்பதில்லை.
-
அப்படியானால் நமது உடலுக்குள் நடக்கும் இந்த
செயல்கள் யாருக்காக நடைபெறுகின்றன?
இந்த உடல் உறுப்புகள் அடிமைகள்போல எதற்காக
தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறன?
-
அதிதெய்வம்
-
இந்த உடலின் செயல்கள் யாருக்காக நடைபெறுகிறதோ
அதற்கு தெய்வம் என்று பெயர்.
ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் தெய்வத்திற்காக
இந்த செயல்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
இதன் பலன்களை அனுபவித்துக்கொண்டிருப்பதும்
தெய்வம்.
எங்கெல்லாம் அதியக்ஞமாகிய செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ
அங்கெல்லாம் தெய்வம் இருக்கிறது.
இந்த உடலுக்குள் தெய்வம் இருப்பதுபோல,
பிரபஞ்சம் ஒட்டுமொத்ததிற்கும் ஒரு தெய்வம்
இருக்கிறது.
பல்வேறு மதங்களில் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
திருக்குறளிலும் தெய்வம் என்ற வார்த்தை உள்ளது.
வேதத்தில் ஹிரண்யகர்பர், சுயம்பு,ஈஸ்வரன்,பிரம்மதேவன்
என பல பெயர்கள் உள்ளன.
-
அதிபூதம் என்றால் என்ன?
-
திடப்பொருட்கள்,திரவப்பொருட்கள்,வாயுக்கள்,வெப்பம்,ஆகாயம்
போன்ற பஞ்சபூதங்களினால் உருவாக்கப்பட்ட உடல்கள்,மனம் உட்பட அனைத்தும் அழியும் தன்மை
உடையவை.
இவைகள் அனைத்தும் அதிபூதம் என்று சொல்லப்படுகிறது.
இந்த அதிபூதம் இருப்பதால்தான் அதிதெய்வம் இருக்கிறது.அதிதெய்வம்
இருப்பதால்தான் அதியக்ஞம் நடைபெறுகிறது.
-
வேள்வி அல்லது கர்மம் என்பது என்ன?
உயிர்களை உண்டுபண்ணுதல், அவைகளை காப்பாற்றுதல்,அழித்தல்
என்று மூன்று செயல்படுகளுக்கும் வேள்வி என்று பெயர்.
ஒவ்வொரு உடலுக்குள்ளும் வேள்வி நடைபெற்றுக்கொண்டே
இருக்கிறது.
உடலுக்குள்ளே ஒவ்வொரு கணமும் புதிய அணுக்கள்
உருவாகிக்கொண்டிருக்கின்றன.அவைகள் காக்கப்படுகின்றன. அழிக்கப்படுகின்றன.
அதேபோல மனிதன் புதிய குழந்தையை உருவாக்குகிறான்.குழந்தையை
காப்பாற்றுகிறான்.பலரது அழிவிற்கு காரணமாகவும் மனிதன் இருக்கிறான்.
-
இதேபோல இந்த பிரபஞ்சம் முழுவதும் படைத்தல்,காத்தல்,அழித்தல்
என்ற மூன்று செயல்களும் எங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த செயலுக்கும்
வேள்வி அல்லது கர்மம் என்று பெயர்.
-
இந்த கர்மத்தின் துவக்கம் எது? பிரபஞ்சம் எங்கிருந்து
துவங்கியதோ அங்கிருந்துதான் அதுவும் துவங்கியது.
அத்யாத்மம் என்று சொல்லபடும் அழிவற்ற தன்மையிலிருந்து
கர்மம் துவங்குகிறது.
-
இந்த அத்யாத்மம் என்பது என்ன?அதன் இயல்புகள்
என்ன?
எல்லாவற்றிற்கும் மேல் இருக்கும் ஆத்மா,பரமாத்மாவிற்கு
அத்யாத்மம் என்று பெயர்
அத்யாத்மம் என்பது அழிவற்றது.
வேதத்தில் அதற்கு பிரம்மம் என்று பெயர்.
பிரம்மத்தின் இயல்புகள் பற்றி ஏற்கனவே பல இடங்களில்
பார்த்திருக்கிறோம்.
இனியும் பார்க்க இருக்கிறோம்.
-
அத்யாத்மம்,கர்மம்,அதிபூதம்,அதிதெய்வம்,அதியக்ஞம்
இந்த நான்குமாக இருப்பது இறைவன்.
இறைவன் கர்மத்திற்கு அப்பாற்பட்ட நிலையில்
பிரம்மமாக இருக்கிறார்
எங்கும் நடைபெறும் கர்மமாகவும்
அழியும்தன்மையுடைய அதிபூதமாகவும்
ஒவ்வொரு உடலுக்குள்ளும் உறையும் அதிதெய்வமாகவும்
அனைத்து உடலுக்குள்யேயும்,உடலுக்குவெளியேயும்
நடக்கும் அதியக்ஞமாகவும்
எங்கும் இறைவன். எதிலும் இறைவன் இருக்கிறார்
No comments:
Post a Comment