ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்--part8
-
இந்த மகாமாயையே உலகை மயக்கத்தில் ஆழ்த்தி படைத்தல்,காத்தல்,அழித்தல் எல்லாம் செய்துவருகிறாள். அந்த மகாமாயை கதவை திறந்துவிட்டால்தான் நாம் உள்ளே போகமுடியும். வெளியில் விழுந்துகிடந்தால் வெறும் புறவிஷயங்களைத்தான் காணமுடியும்.நித்தியமான அந்த சச்சிதானந்தத்தை(பிரம்மம்) அறிந்துகொள்ள முடியாது.
-
சக்தியே உலகின் ஆதாரம். அந்த ஆத்யாசக்தியிடம் வித்யைமாயை,அவித்யை மாயை இரண்டும் உள்ளன. அவித்யை மோகத்தில் ஆழ்த்துகிறது. பக்தி,தயை,ஞானம்,பிரேமை போன்றவை வித்யைமாயையிடமிருந்து வருகிறது. இது இறைநெறியில் நம்மை அழைத்துச்செல்கிறது
-
உண்மையான பக்தனுக்கு இறைவனைப்பற்றிய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று தோன்றும்.உலகியல் விஷயங்கள் காதில் விழுந்தால் மிகவும் வேதனைப்படுவார்கள்.
-
கடவுளால் இயலாதது எதுவும் இல்லை. அவரது இயல்பை வாக்கினால்யாரும் கூற முடியாது. அவரால் எல்லாம் முடியும்.
-
விவேகம் என்பது என்ன? இருப்பது இறைவன் மட்டுமே.மற்ற அனைத்தும் நிலையற்றவை என்று உணர்வது.
-
முதலில் உன் இதயக்கோவிலில் இறைவனை எழுந்தருழச்செய். பேச்சு.பிரசங்கம் எல்லாம் பிறகு வைத்துக்கொள்ளலாம். விவேகமும், வைராக்கியமும் இல்லாமல் வெறுமனே பிரம்மம் பிரம்மம் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் என்ன பயன்?
-
மக்களுக்கு போதிப்பது கடினம். பகவானது தரிசம் கிடைத்தபிறகு, அவரிடமிருந்து ஆணை பெற்றால், பிறகு மக்களுக்கு போதிக்கலாம்
-
யாருக்கு இறைவனிடம் ஆழ்ந்த பக்தி இருக்குமோ, அவனுக்கு அரசர்,தீயவர்,மனைவி என்று எல்லோரும் அனுமூலமாக அமைந்துவிடுவார்கள். ஒருவனுக்கு மனப்பூர்வமான பக்தி இருக்குமானால் காலப்போக்கில் அவனது மனைவியும் இறைநெறியில் செல்வது சாத்தியமாகிவிடும்.அவன் நல்லவனாக இருந்தால் அவனது மனைவியும் காலப்போக்கில் நல்லவளாக மாறிவிடுவாள்
-
சொந்த தாயை இறைவனின் வடிவமாக நினைத்து தியானிக்கலாம். அவளே குரு. அவளே பிரம்ம ரூபிணி.
-
பல்வேறு இடங்களிலும் சுற்றி மனத்தை ஒருமுகப்படுத்தியவர்கள்,அமைதி கண்டவர்கள் குடீசகர்கள். அவர்கள் எங்கும் அலையாமல் ஓரிடத்தில் நிலையாக தங்கி சாதனைகள் செய்வார்கள். ஒரே இடத்தில் தங்குவதில்தான் அவர்களுக்கு ஆனந்தம்.
-
சாக்தம்,வைணவம்,வேதாந்தம்,போன்ற பல மதங்களுடன் இஸ்லாம்,கிறிஸ்தவம் போன்றவற்றையும் நான் பின்பற்றினேன். எல்லா பாதைகள் வழியாகவும் சென்றேன். எல்லோரும் ஒரே கடவுளை நோக்கியே வருகிறார்கள் என்று அப்போது கண்டேன்.
-
நான் பிருந்தாவனத்தை காணச்சென்றேன். அங்கே தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.அங்கேயே தங்கிவிடலாம் இனி கல்கத்தாவிற்கு போகவேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன்.அப்போது என் தாயின் நினைவு வந்தது. அவள் தனியாக இருப்பாள்(ராமகிருஷ்ணரை பெற்ற தாய் அப்போது கல்கத்தாவில் அவருடன் வசித்து வந்தார்) என்ற எண்ணம் வந்தது. அதன் பிறகு பிருந்தாவனத்தில் இருக்க முடியவில்லை.
-
ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 9789 374 109
No comments:
Post a Comment