ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸
-part2
-
🌸கடவுள் எல்லா உயிரிலும் இருக்கிறார்.ஆனால் நல்லவர்களுடன் நெருங்கிப்பழகலாம். கெட்டவர்களைக் கண்டல் தூர விலகி நிற்க வேண்டும். புலியிலும் இறைவன்தான் இருக்கிறார்.அதற்காக யாரும் புலியை கட்டித்தழுவிக்கொள்ள முடியாது

🌸உலகில் வாழ நேரும்போது,தீயவர்களிடமிருந்து நம்மைக்காப்பாற்றிக்கொள்வது அவசியம் தீயவர்கள் நமக்கு தீங்கு செய்யாமல் இருப்பதற்காக அவர்களை பயமுறுத்த வேண்டும். ஆனால் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது.
🌸இறை நம்பிக்கை உள்ளவன் கொடிய பாங்களை செய்திருந்தாலும்,இறைநம்பிக்கை காரணமாக பாவத்திலிருந்து விடுபட முடியும். இனி இத்தகைய கொடிய பாவங்களைச் செய்ய மாட்டேன் என்று அவன் உறுதியாக இறைவனிடம் சொன்னால் போதும். எதற்கும் பயப்பட வேண்டியதில்லை
🌸இந்த உலகம் இறைவனின் மகிமை. ஆனால் மக்கள் மகிமையைக் கண்டு அதில் மயங்கிவிடுகிறார்கள்.காமத்திலும் பணத்தாசையிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். முடிவில் அவர்களுக்கு கிடைப்பது பெரும் துன்பமும்,அமைதியின்மையும்தான்
-
🌸இந்த உலகம் ஒருவிதமான முட்செடி போன்றது. இதில் மாட்டிக்கொள்பவன் ஒரு முள்ளிலிருந்து தன்னை விடுவிப்பான்,அதற்குள் இன்னும் மூன்றில் மாட்டிக்கொள்வான். தடுமாறச்செய்கின்ற குழப்பவழியைப்போன்றது இந்த உலகம். ஒரு முறை இதில் அகப்பட்டுக்கொண்டால் வெளிவருவது மிகக்கடினம். மனிதன் இதில் வறுக்கப்படுகிறான்

🌸சாதுசங்கத்தினால் பயன் உண்டு. உண்மை எது, உண்மையற்றது எது என்ற விவேகம் அதனால் உண்டாகிறது. நிலையான பொருள் அதாவது இறைவன் மட்டுமே உண்மை,மற்ற அனைத்தும் உண்மையற்றவை அதாவது நிலையற்றவை.
🌸அடுத்தவன் வீட்டு வாழை மரத்தை தின்ன யானை துதிக்கையை நீட்டினால் உடனே யானைப்பாகன் அங்குசத்தால் ஒரு போடுபோட்டு அதைத் தடுக்கிறான். அதேபோல உண்மையற்றதான வழியில் மனம் செல்லத்தொடங்கினால் ஆராய்ச்சி செய்து மனத்தை அடக்க வேண்டும்
🌸இறைவனது படைப்பில் எல்லா ரகங்களும் உண்டு. நல்லவர்களையும் அவரே படைத்திருக்கிறார், தீயவர்களையும் அவரே படைத்திருக்கிறார். நல்ல அறிவை அளிப்பவரும் அவரே தீய அறிவை அளிப்பவரும் அவரே.பாவம் செய்தால் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி.
🌸மிளகாயை கடித்தால் காரத்தை அனுபவிக்காமல் இருக்க முடியாது. அதே போல் பாவ செயல்களை செய்தால் அதனால் வரும் துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது.இது இறைவன் வகுத்த நியதி
-
🌸ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள்🌸 இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 🌸
🌸9789 374 109🌸
-
🌸ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள்🌸 இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 🌸
🌸9789 374 109🌸
No comments:
Post a Comment