Sunday, 25 February 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-9

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-9
-
லௌகீக விஷயங்களிலேயே பலர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.சிலருக்குத்தான் இந்த விளையாட்டு போதும் என்ற விழிப்புணர்வு உண்டாகிறது
-
இயற்கையிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நாம் எல்லோரும் தெரிந்தோ,தெரியாமலோ போராடிக்கொண்டிருக்கிறோம்
-
முதலில் ஒரு சமநிலை இருந்தது.அது கலைந்துவிட்டது.எல்லா அணுக்களும் சமநிலையை திரும்ப பெறவே போராடிக்கொண்டிருக்கின்றன
-
நாம் எந்த பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டோமோ அந்த பிரம்மத்தை அடைவதற்கான முயற்சிதான் வாழ்க்கையின் பெரிய போராட்டம்
-
பிரபஞ்சம் முழுவதுமே பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டது.அதற்குள் அடங்குவதற்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது
-
மனிதப் பிறவியில் மட்டுமே ஜீவன் சுதந்திரம் பெற முடிவதால்,மனிதன் தேவர்களைவிட,மற்ற படைப்புகளைவிட மிகச் சிறந்தவன்
-
மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டு,மிருகங்களுக்கு ஆன்மா இல்லை என்று கூறுவது தவறு.அவற்றிற்கும் ஆன்மா உண்டு
-
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது என்று தவறாக நினைக்கிறோம்.சூரியன் உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லை
-
ஆன்மா இயக்கமற்றிருக்கிறது. இயற்கைதான் இயங்குகிறது.இதை
ஆன்மா உணர்ந்ததும் சுதந்திரம் கிடைக்கிறது
-
மரணத்திற்கு பிறகு ஒரு மனிதன் போகும் இடத்திற்கு வழிகாட்டுவது அவனது சம்ஸ்காரங்களின் கூட்டு பலனே
-
ஆன்மாவுக்கு பிறப்போ இறப்போ இல்லை. இயற்கைதான் ஆன்மாவின் முன்னால் இயங்கிக் கொண்டிருக்கிறது
-
நாம் இந்த உலகத்தைவிட்டு வெளியே போகும்போது.இந்த உலகத்தில் செய்த செயல்களின் கூட்டுபலனை எடுத்து செல்கிறோம்
-
ஒருவன் இறந்தபின் பிராணன் வேறோர் இடத்திற்கு சென்று புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாக்கிக்கொள்கிறது
-
இந்த உலகில் நாம் செய்யும் செயல்களே நமது அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றன
-
சுதந்திரம் பெற்ற ஆன்மா விரும்பினால் பல உடல்களையும், மனங்களையும் படைத்துக்கொள்ள முடியும்
-
உடல், மனத்திலிருந்து சுதந்திரம் கிடைத்ததும் தான் எங்கும் நிறைந்திருப்பதை ஆன்மா உணரும்
-
மனம் அழிந்து தூள்தூளாகச் சிதறி, சம்ஸ்காரங்களையும் விட்டுவைக்காமல் அழிக்கும்போது நாம் சுதந்திரர்களாகி விடுவோம்
-
சம்ஸ்கிருதத்தில் பிராணன் என்று சொல்லப்படும் சக்திகள் ஒன்று சேர்ந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன
-
ஒரு மனிதன் இறந்தபிறகு அவனது சமஸ்காரங்கள் அழிவதில்லை.அவை அந்தக்கரணம் அல்லது மனத்துடன் சேர்ந்திருக்கிறது
-
ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தை தானே உருவாக்கிக்கொள்கிறான்.அவன் தன் மனத்தாலும்,உடலாலும் செய்த செயலின் பலனே குணம்-
-
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது.இதுவே சம்ஸ்காரம்
-

No comments:

Post a Comment