ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-1
--------------------
பலவிதமான பூஜை முறைகளை இறைவனே ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உலகம் யாருடையதோ அந்த ஆண்டவனே இவைகளையெல்லாம் மக்களின் தகுதிக்கு ஏற்ப அமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் குழந்தைகளின் ஜீரண சக்திக்கு ஏற்ப உணவு சமைக்கிறாள் அல்லவா! அதுபோல்
---------------------
அவ்வப்போது பக்தர்களையோ சாதுக்களையோ நாடிச் செல்லவேண்டும். குடும் விவகாரங்களிலும் உலகியல் விசயங்களிலும் இரவுபகலாக ஆழ்ந்துகிடந்தால் மனம் இறைவனிடம் செல்லாது.எனவே அவ்வப்போது தனிமையில் சென்று இறைவனை நினைப்பது மிகவும் இன்றியமையாதது. ஆரம்பத்தில் தனிமை வாழ்க்கை பழகாவிட்டால் பிறகு மனத்தை இறைவனிடம் நிறுத்துவது மிகவும் கடினம். இளஞ்செடியாக இருக்கும்போது சுற்றி வேலி போட வேண்டும்.இல்லாவிட்டால் ஆடுமாடுகள் மேய்ந்துவிடும்
----------------------------
பணக்காரவீட்டு வேலைக்காரி அங்கே எல்லா வேலைகளையும் செய்கிறாள்.ஆனால் அவளது மனம் கிராமத்தில் உள்ள தன் வீட்டையே சதா நினைத்துக்கொண்டிருக்கும். பணக்காரவீட்டு குழந்தையை பாசத்தோடு கொஞ்சுவாள்.ஆனாலும் அது தன் குழந்தை இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதேபோல் எல்லா கடமைகளையும் செய். ஆனால் மனத்தை இறைவனிடம் வை. மனைவி,மக்கள்,தாய்,தந்தை எல்லோருடனும் சேர்ந்து வாழ். அவர்களுக்கு சேவை செய். அதேவேளையில் அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் தெரிந்துவைத்துக்கொள்.
------------------
இறைவனிடம் பக்தியை அடையாமல், இல்லறத்தில் ஈடுபட்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய். ஆபத்து,துன்பம்,கவலை இவையெல்லாம் வந்து மோதும்போது மனஉறுதியை இழப்பாய். அது மட்டுமல்ல, உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும்
-
தனிமையில் அமர்ந்து,இறைசிந்தனையில் ஈடுபட்டால் மனத்தில் ஞானம்,வைராக்கியம்,பக்தி முதலியவை உண்டாகிறது. ஆனுால் அதே மனத்தை உலகியல் விஷயங்களில் ஈடுபடுத்தினால் அதன் தரம் தாழ்ந்துவிடுகிறது. உலகியல் வாழ்க்கையில் காமம்-பணத்தாசை போன்ற சிந்தனைகளே உள்ளன.
-
இதோ பார் பணத்தில் என்ன இருக்கிறது. அழகிய உடம்பில்தான் என்ன இருக்கிறது. பகுத்தறிந்து பார். வெறும் எலும்பு,சதை,கொழுப்பு,மலம்,மூத்திரம் எல்லாம்தான் இருக்கிறது. இறைவனைவிட்டுவிட்டு மக்கள் இத்தகைய விஷயங்களில் ஏன்தான் மனத்தைப் பறிகொடுக்கிறார்களோ!
-
ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் இறைவனைக்காணமுடியும். மனைவி மக்களுக்காக மக்கள் குடம்குடமாகக் கண்ணீர் வடிக்கிறார்கள். பணத்திற்காக அழுது புரள்கிறார்கள்.ஆனால் கடவுளுக்காக யார் அழுகிறார்கள்?
-
தாய் குழந்தையை நேசிப்பதுபோல், மனைவி கணவனை நேசிப்பதுபோல், உலகியல் மனிதன் இனபத்தை நேசிப்பதுபோல், இந்த மூன்று கவர்ச்சியும் ஒன்று சேர்ந்தால் எவ்வளவாகுமோ அந்த நேசத்தை இறைவனிடம் செலுத்த முடியுமானால் இறைவனைக்காண முடியும்
-
ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 9789 374 109
No comments:
Post a Comment