Sunday, 25 February 2018

நரன்-நாராயணன் தத்துவம் என்ன?

நரன்-நாராயணன் தத்துவம் என்ன?
-
சுவாமி விவேகானந்தரை பார்த்தவுடன் ஸ்ரீராமகிருஷ்ணர் நர-நாராயணன் என்று கூறுவார்.இதன் பொருள் என்ன என்பதை தெரிந்துகொள்ள மகாபாரதத்தை பார்க்க வேண்டும்.அதில் அர்ஜுனரையும் கிருஷ்ணரையும் நர-நாராயணர் என்று கூறுவார்கள். அர்ஜுனர்-நரன். கிருஷ்ணர்-நாராயணன்.கிருஷ்ணர்தான் அனைத்தையும் செய்தார் என்றாலும்,அர்ஜுனனின் மூலமாகவே அனைத்தும் நடைபெற்றன.அர்ஜுனன் கிருஷ்ணரின் கருவி அவ்வளவுதான்.
-
பூலோகத்தில் அவதாரம் நிகழும்போது இறைவன் நர-நாராயணனாக அவதரிப்பதாக பாகவதம் கூறுகிறது. ஸ்ரீராமகிருஷ்ணர்-நாராணனன். விவேகானந்தர்-நரன். ஸ்ரீராமகிருஷ்ணர்தான் விவேகானந்தர் மூலமாக அனைத்தையும் செய்தவர். முதலில் அவர் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.பின்னர் விவேகானந்தர் மூலம் அந்த கருத்தை உலகம் எங்கும் பரப்பினார்.
-
விவேகானந்தர் என்பவர் யார்? சப்த ரிஷி மண்டலத்தில் தவம் செய்துகொண்டிருக்கும் ஏழு ரிஷிகளில் ஒருவர்.இறைவன் ஒரு குழந்தையாக மாறி அந்த ரிஷியின் கழுத்தை அன்புடன் பிடித்துக்கொண்டு,நான் பூலோகம் செல்கிறேன்.நீங்கள் வருவீர்களா என்று கேட்பது போல் இருந்தது.அந்த ரிஷியும் புன்னகையால் சம்மதத்தை தெரிவித்தார். அந்த ரிஷிதான் விவேகானந்தர்.
-
அந்த குழந்தை யார் என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார்கள். தாம்தான் அந்த குழந்தை என்று பக்தர்களிடம் அவர் தெளிவுபடுத்தினார்
-


No comments:

Post a Comment