Thursday, 8 February 2018

அன்பார்ந்த சகோதரி நிவேதிதா


அன்பார்ந்த சகோதரி நிவேதிதா (மார்கரெட் எலிசபெத் நோபிள்)
-
இந்தியாவிற்கான பணியில், எதிர்காலத்தில் உனக்கு மகத்தான பங்கு ஒன்று உள்ளது என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன். இந்தியர்களிடையே குறிப்பாக பெண்களிடையே வேலை செய்வதற்கு இப்போது வேண்டியது ஓர் ஆண் அல்ல. பெண்- பெண் சிங்கம். இந்தியா சிறந்த பெண்களை உருவாக்க முடியாததாக இருக்கிறது. அவர்களை மற்ற நாடுகளிலிருந்து கடனாக பெற்றாக வேண்டும். உனது கல்வி,ஈடுபாடு.தூய்மை,ஆழமான அன்பு,உறுதி,அனைத்தையும்விட உன் உடலில் ஓடும் வீர ரத்தம் இவையெல்லாம் அந்த பெண் நீயே என்பதைக் கூறுகின்றன.
-
நீ இந்தியாவில் பணியாற்றுவதில் பல கஷ்டங்கள் உள்ளன. இங்கே நிலவுகின்ற துயரங்கள்,மூடநம்பிக்கைகள்,அடிமைத்தனம் இவற்றை உன்னால் கற்பனைகூட செய்ய முடியாது. அரை நிர்வாணமான மனிதர்கள் ஜாதியைவிட்டு விலக்குதல் இவை பற்றிய வினோதமான கருத்துக்கள் கொண்ட மக்கள்.பயத்தின் காரணமாகவோ வெறுப்பின் காரணமாகவோ வெள்ளைத்தோல் (வெள்ளைக்காரர்கள்) என்றாலே அதைத் தவிர்கின்ற, வெள்ளையர்களை மிகவும் வெறுக்கின்ற ஒரு பெரும் கூட்டத்தின் நடுவே நீ இருப்பாய்.இனி,மறுபுறம் வெள்ளையர்கள் உன்னை ஒரு பைத்தியம் என்றே நினைப்பார்கள். உனது செயல்களை ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் கவனிப்பார்கள்.
-
இங்கு சூடு மிகவும் பயங்கரமாக இருக்கும்.இங்குள்ள பெரும்பாலான இடங்களில் எங்கள் குளிர்காலம் உங்கள் கோடைகாலம் போல் இருக்கும். தென்இந்தியா எப்போதும் கொழுந்துவிட்டு எரிவதுபோல் இருக்கும்
-
இங்குள்ள நகரங்களுக்கு வெளியே உள்ள ஓரிடத்தில்கூட ஐரோப்பிய வசதிகள் எதுவும் கிடைக்காது.இவை அனைத்தையும்மீறி இந்த வேலையை மேற்கொள்ள உனக்கு துணிவிருந்தால் உன்னை வரவேற்கிறேன். நூறு தடவை வரவேற்கிறேன்.
-
இறங்கும்முன் நன்றாக யோசித்துச் செயல்படு. வேலை செய்த பிறகு இதில் நீ வெற்றி பெறாமல் போனாலும்,வெறுப்படைந்தாலும் என்னைப்பொறுத்தவரை நான் மரணம்வரை உன்னுடன் இருப்பேன்.இது உறுதி. நீ இந்தியாவிற்கு சேவை செய்தாலும் செய்யாவிட்டாலும்,வேதாந்தத்தை விட்டாலும் அல்லது அதிலேயே நிலைத்திருந்தாலும் நான் உன்னுடனேயே இருப்பேன். யானையின் தந்தங்கள் வெளியே வருகின்றன.ஒருபோதும் அவை திரும்ப உள்ளே போவதில்லை.அவ்வாறே மனிதனின் வார்த்தைகளும் மாறுவதில்லை.இதை நான் உனக்கு உறுதியளிக்கிறேன்.
-
இறைவனில் என்றும் உனது
விவேகானந்தா
நாள் 27-7-1897 அல்மோரா,இந்தியா
-
இந்துமதம் வாட்ஸ்அப் குழு 9789 374 109

No comments:

Post a Comment