சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-1
-
என் பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்னைவிட நூறுமடங்கு அதிகச் சிறப்புடையவர்களாக இருக்கவேண்டும்
-
ஜாதி முதலிய பைத்தியமெல்லாம் புரோகிதர்கள் எழுதிய நூல்களில்தான் உள்ளது.இறைவன் அருளிய நூல்களில் இல்லை
-
புத்தமதத்திற்கு இனி இந்தியாவில் எந்த வாய்ப்பும் இல்லை.இந்தியா தூய்மையாக்கப்ட்ட இந்துமதத்திற்கு உரியதாகிவிட்டது
-
விஞ்ஞானத்தில் மேலை நாட்டினர் எவ்வளவுதான் முன்னேறினாலும்,தத்துவம் ஆன்மீகம் இவற்றில் அவர்கள் குழந்தைகள்
-
கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது.தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது
-
நான் உண்மையை கண்டுவிட்டேன்.இந்த உடல் மிதந்தவாறு மேலேயோ கீழேயோ போகட்டும். யார் கவலைப்பபட்டார்கள்?
-
உண்மை இதுதான். நாம் ஒரு பொறியில் சிக்கிக்கொண்டுள்ளோம். எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறோமோ அந்த அளவிற்கு நல்லது
-
நான் தனியாக வேலைசெய்யவில்லை. இறைவன் எப்போதும் என்னுடன் உள்ளார் இல்லாவிட்டால் நான் என்ன சாதித்துவிட முடியும்?
-
தொடரும்...
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழு 9789 374 109
No comments:
Post a Comment