ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸
-
-🌸part9🌸
🌸தோட்டி மலக்கூடையை சுமந்து செல்கிறான். பழக்கத்தின் காரணமாக அதன்மீதிருந்து அருவருப்பு மறைந்துவிடுகிறது. அதேபோல் காமத்திலும் உலகியல் ஆசைகளிலும் மூழ்கிக்கிடப்பவன், நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வான்.
-
🌸ஒரு ஜமீன்தார் தனது அரண்மனையில் எல்லா இடங்களுக்கும் போக முடியும். ஆனால் அவரை பார்க்க வேண்டுமானால் வரவேற்பறைக்கு செல்ல வேண்டும். அதேபோல் இறைவன் எல்லா உயிர்களிலும் உறைகிறார். ஆனால் பக்தனின் இதயம் அவரது வரவேற்பறை .பக்தனின் இதயத்தில் இறைவனைக்காணலாம்.
-
🌸நாம ரூபங்கள் எல்லாம் கனவு போன்றவை என்ற உறுதியான உணர்வு பிரம்ம ஞானியிடம் இருக்கும். ஆனால் பக்தர்கள் எல்லா நிலைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இந்த நாம ரூபங்கள் அதாவது இந்த உலகம் கனவு போன்றது என்று சொல்வதில்லை.
-
🌸இறைவனே இதயத்தின் உள்ளேயும் இருக்கிறான், வெளியேயும் இருக்கிறார். அவரே பஞ்ச பூதங்களாகவும்,உயிர்களாகவும், உலகமாகவும் ஆகியுள்ளார். பக்தர்கள் பிரம்மமாக விரும்பவில்லை. பிரம்மத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்.
-
🌸யோகி உலகியல் விஷயங்களிலிருந்து மனத்தை விலக்கி பரமாத்மாவில் நிறுத்த முயல்கிறான். ஆரம்ப காலத்தில் தனிமையான இடத்திற்கு சென்று, அசைவில்லாத ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்கிறான். ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது தான் யோகம்.
-
🌸படைத்தல்,காத்தல்,அழித்தல்,உயிர்,உலகம் எல்லாம் சக்தியின் விளையாடல் என்கின்றனர் ஞானிகள். ஆராய்ந்து பார்த்தால் இவையெல்லாம் கனவு போன்றவை. சக்தியும் கனவு போன்றது தான். பிரம்மம் ஒன்றே உள்ளது. மற்றவை எதுவும் இல்லை. ஆனால் ஆயிரம் ஆராய்ச்சி செய்தாலும் சமாதிநிலையை அடையாமல் சக்தியின் எல்லையைவிட்டு வெளியே வரமுடியாது. நான் தியானிக்கிறேன். நான் சிந்திக்கிறேன் என்ற உணர்வும் சக்தியின் எல்லைக்கு உட்பட்டது.
-
🌸பாலும் அதன் வெண்மையும் சேர்ந்தே இருப்பது போல்.இறைவனை விட்டுவிட்டு உலகத்தை மட்டும் தனியாக நினைக்க இயலாது. அதேபோல் உலகத்தை விட்டுவிட்டு இறைவனை நினைக்க முடியாது.
-
🌸எல்லாம் மனத்தைப் பொறுத்தது. ஒரு பக்கம் மனைவி. இனைனொரு பக்கம் மகள். அவன் இருவரிடமும் வெவ்வெறு விதமாக பழகுகிறான். இல்லறத்தில் இருந்தாலும் சரி காட்டில் இருந்தாலும் சரி, எனக்கு என்ன பந்தம் நான் இ.றைவனின் குழந்தை , என்னை யார் கட்டுப்படுத்த முடியும்? என்று நினைப்பவன் முக்தனாகிறான்.
-
🌸மனைவி மக்களுக்காக குடம் குடமாக கண்ணீர் வடிக்கிறார்கள். இறைவனைக் காண்பதற்காக யார் அழுகிறார்கள். சொல்.
-
🌸ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 9789 374 109
-🌸
No comments:
Post a Comment