ஸ்ரீசாரதாதேவியின் உபதேசங்கள்-1
-
பக்தை..அம்மா,என் மனம் குடும்ப வாழ்க்கையில் சிறிதும் ஒட்டவில்லை. எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் அவர்களுடன் வாழ்கிறேன்.அது உங்களுக்குத் தெரியும். என்னை அத்தகைய மனிதர்களுக்கு இடையே விட்டுவைக்காதீர்கள்.இது எனது பிரார்த்தனை
-
அன்னை...மகளே,குடும்ப வாழ்க்கை அப்படி பெரிதாக உன்னை என்ன செய்துவிடும்? உன்னைப் பொறுத்தவரை நீ இல்லறத்தில் வாழ்ந்தாலும் மரத்தடியில் வாழ்ந்தாலும் இரண்டும் ஒன்றுதான். குடும்பவாழ்க்கை இறைவனிலிருந்து வேறுபட்டதா என்ன? எல்லாவற்றிலும் அவரே இருக்கிறார். நீ ஒரு பெண் நீ எங்கே போகமுடியும்? இறைவன் உன்னை எங்கே எப்படி வைக்கிறாரோ அங்கேயே மகிழ்சியுடன் வாழ்.இறைவனை நாடவேண்டும்,அவரைப்பெற வேண்டும்-இதுவே லட்சியம். அவரிடம் நீ பிரார்த்தனை செய்வாயானால் உன் கையைப் பிடித்து அவரே அழைத்து செல்வார். அவரைச் சரணடைந்து உன்னால் வாழ முடியுமானால் எதற்கு பயப்பட வேண்டும்?
-
இந்துமதம் வாட்ஸ் அப் குரூப் 9789 374 109
No comments:
Post a Comment