ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-🌸part5🌸
🌸
.நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால் இறைவனைக் காணலாம். அனுமனுக்கு ராமநாமத்தில் நம்பிக்கை இருந்தது . அந்த நம்பிக்கையின் வலிமையினால் அவர் கடலைத்தாண்டினால். ஆனால் ராமனுக்கு பாலம் கட்டித்தான் கடலை கடக்கவேண்டியிருந்தது.
🌸
நெருப்பும் அதன் சுடும்தன்மையும் சேர்ந்தே இருக்கின்றன.அதேபோல் பிரம்மமும் சக்தியும் பிரிக்க முடியாதவை.செயலற்றவராகத் தோன்றும் போது அவரை பிரம்மம் என்கிறோம். படைத்து,காத்து,அழிக்கும் செயல்களைச் செய்யும் போது அவரை காளி என்கிறோம்.ஆத்யாசக்தி என்கிறோம். ஈஸ்வரன் என்கிறோம்.
🌸
மனம் இறைவனில் லயித்துவிடவேண்டும்.இறைவனை அதிகம் நினைத்தால் மூளை குழம்பிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள்.அது உண்மையல்ல. ஏனெனில் அவர் ஒரு அமுதக்கடல்.அதில் மூழ்கினால் மரணம் இல்லை.மரணமில்லாப்பெருநிலை கிடைக்கிறது.
🌸
காற்றில்லாதபோது விசிறிதேவை . தென்றல் வீசத்தொடங்கியதும் விசிறியை வைத்துவிடுகிறோம். அதேபோல் இறைவனிடம் பக்தி ஏற்படும்வரை தான் பூஜை,யாகம்,யக்ஜம் போன்றவை தேவை. பக்தி ஏற்பட்டுவிட்டால் இவைகள் தேவையில்லை
-🌸
மருமகள் கருவுற்றால் மாமியார் அவளை வேலைகள் செய்ய விடுவதில்லை. அதேபோல் ஒருவனுக்கு இறைவனிடம் பக்தி ஏற்பட்டடுவிட்டால் தினசரி கடமைகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.பக்தி ஏற்படும்வரை பற்றின்றி கடமைகளை செய்ய வேண்டும்.
🌸🌸
பற்றின்றி பணி செய்தால் மனம் தூய்மைபெறுகிறது, இறைவனிடம் அன்பு பிறக்கிறது..ஆசைகள் இன்றி யார் வேலை செய்கிறார்களோ,அவன் தனக்கே நன்மை செய்கிறான். மனிதர்களால் இறைவனுக்கு நன்மைசெய்ய முடியாது. இறைவனே அனைத்து செயல்களையும் செய்கிறார்.
🌸
இறைவனைக்காண முடியும் அவருடன் பேச முடியும். நான் இப்போது உங்களிடம் எப்படி பேசுகிறேனோ அதேபோல் அவருடன் பேச முடியும்.
🌸
நாம் ஒருவரின் பெயரைச்சொல்லி அழைக்கிறோம். அவரே வந்துவிட்டால் அதன்பின் அழைக்கவேண்டியதில்லை. அதேபோல். சச்சிதானத்தை அடைந்தால்மா சமாதிநிலை வாய்க்கிறது. சமாதிநிலை வாய்க்கும் வரை கடமைகளை செய்ய வேண்டும். அதன்பின் அவைகளை செய்ய முடியாது
🌸
தேனீ எதுவரை ரீங்காரம் செய்துகொண்டிருக்கும் பூவில் அமரும்வரை. அதேபோல் இறைவனைக்காணும் வரை சாதகர்கள் பூஜை,தியானம்,ஜபம்,தீர்த்த யாத்திரை போன்றவற்றை விடக்கூடாது. அதன் பின் தேவையில்லை
🌸-
ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 9789 374 109
No comments:
Post a Comment