தவறான தகவல்
-
இன்று (3-2-2018) தினத்தந்தியில் சுவாமி விவேகானந்தர் கூறியதாக வந்த தகவல் தவறானது.
-
சுவாமி விவேகானந்தரிடம் கோவில் எதற்கு என்று ஒருவர் கேட்பாராம், சுவாமி விவேகானந்தர் தாகமாக இருக்கிறது என்று கூறி தண்ணீர் கொண்டுவர சொல்வாராம்,அவர் ஒரு செம்பு நிறைய தண்ணீர் கொண்டுவருவாரம், நான் தண்ணீர்தானே கேட்டேன்,சொம்பு எதற்கு? தண்ணீரை கொண்டுவர சொம்பு தேவைப்படுவதுபோல இறைவனை வழிபட கோவில் வேண்டும் என்று சொல்வது போல அந்த செய்தி உள்ளது
-
முதலில் அவரது வாழ்க்கை வரலாற்றில் இப்படிப்பட்ட செய்தி இல்லை. இரண்டாவது அவரது உபதேசங்கள் அனைத்தையும் படித்தால் அதில்
-
1. இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்,ஆனால் நீயோ கோவில்களையும்,ஆலயங்களையும் கட்டிக்கொண்டு திரிகிறாய் என்று கூறுகிறார்.
-
2. சிறுவர்களை கோவிலுக்கு செல்ல ஊக்கப்படுத்தவேண்டும்,அவர்கள் வளர்ந்த பிறகும் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தால் அதை கண்டிக்க கண்டிக்க வேண்டும். அவர்கள் இன்னும் ஆன்மீகம் பற்றி எதுவும் அறியாமல் இருப்பதைதான் இது காட்டுகிறது என்று கூறியிருக்கிறார்.
-
3.தனக்குள்ளே இருக்கும் இறைவனை உணர கோவில்கள் உதவுமானால் அதை வரவேற்கலாம்,உதவாவிட்டால் கோவில்களால் ஒரு மனிதனுக்கு எந்த பயனும் இல்லை
-
4.கோவில்கள்,சடங்குகள் போன்றவை மனிதர்களை மேலும்மேலும் அறியாமையில் ஆழ்த்தும் வாய்ப்பும் உள்ளது.
-
5. தனக்குள்ளே இருக்கும் இறைவனை ஒருவன் கண்டுவிட்டால்,கோவில்கள் சடங்குகள் போன்றவை அவனுக்கு தேவையில்லை
-
சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை வாங்கி படித்து அவரது கருத்துக்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
-
சுவாமி வித்யானந்தர் (3.2.2018)
No comments:
Post a Comment