Sunday, 25 February 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-8

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-8
-
உண்மையில் உலகிலுள்ள துன்பங்களைக் குறைக்க இதயப் பயிற்சியால்தான் முடியுமேதவிர, அறிவு வளர்ச்சியால் முடியாது
-
தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பிரபஞ்ச ரகசியத்தை நம் முன்னோர்கள் எதன்மூலம் கண்டார்கள்? தூய இதயத்தின் மூலம்
-
நீ போதுமான அளவு தூயவனாக இருந்தால், பிரபஞ்சத்தின் உண்மைகள் அனைத்தும் உன் இதயத்தில் வெளிப்படும்
-
பிறருக்கு நன்மை வேண்டும் என்று இதயம் சொன்னால் அதை பின்பற்றுங்கள்.அறிவு அதை எதிர்த்தாலும் அதை கேட்காதீர்கள்
-
உலகஅறிவு எதுவும் இல்லாவிட்டாலும்,நீங்கள் தூயவராக இருந்தால் இறைவனை அடையலாம்.அறிவு மிகுந்த தூய்மையற்றவனால் முடியாது
-
அறிவில்லாத ஆனால் இரக்கமுள்ள மனிதன் ஒருபோதும் கொடியவனாக இருக்கமாட்டான். அறிவுநிறைந்த இரக்கமற்ற ஒருவன் கொடியவனாகலாம்
-
அறிவுப் பயிற்சிக்கு மட்டும் இடம்கொடுத்து,இதய உணர்ச்சிகள் விரிய இடமே கொடுக்காதது தற்கால கல்விமுறையின் தீமைகளுள் ஒன்று
-
எல்லா அறிவும் நமக்குள்ளேயே இருக்கின்றன.எல்லாம் ஏற்கனவே ஆன்மாவில் உள்ளன.ஆனால் அறியாமையால் மூடப்பட்டுள்ளது
-
ஒரு வாய் சோற்றும் , மூச்சுகாற்றுக்கும் ,உடைகளுக்கும்,பெயர் புகழுக்கும்,நாடு,மொழி என மனிதன் அடிமைப்பட்டு கிடக்கிறான்
-
சமுதாயத்தில் பிரபலமான ஒருவன் எதை செய்கிறானோ,அதையே பலர் செய்கிறார்கள்.சுயமாக சிந்திப்பதில்லை
-
மக்களில் அதிகம்பேர் ஆட்டுமந்தைகளே. முதலில் போகும் ஆடு குழியில் விழுந்தால் பின்னால் வரும் ஆடுகளும் குழியில் விழும்
-
எல்லா இன்பங்களும் பழையவை ஆகிவிட்டன.மனிதன் புதுப்புது இன்பங்கள் நாடி ஓடுகிறான் அதற்காக முட்டள்தனமானவற்றை படைக்கிறான்
-
இந்த உலகத்து செல்வந்தர்கள் பலபேர் பழைய இன்பங்களில் நிறைவின்றி புதுப்புது இன்பங்களை தேடி ஓடுகிறார்கள்
-
இன்பத்துடன் துன்பம் எப்போதும் சேர்ந்தே இருக்கும் என்பது ஒரு சிலருக்கே புரிகிறது
-
இரவிலும் பகலிலும் நம்மைச்சுற்றி பலர் மரணிப்பதை பார்க்கிறோம். இருந்தாலும் நாம் சாகமாட்டோம் என நினைக்கிறோம்
-
உங்கள் வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஆராய்ந்து பாருங்கள் நீங்கள் பெற்ற இன்பத்தின் அளவு மிகக்குறைந்தது
-
நாம் அன்பு செலுத்தப்போகிறோம், அன்பைப்பெற போகிறோம் துன்பமே இல்லாத இடத்திற்கு போகபோகிறோம் என்றெல்லாம் கனவு காண்கிறோம்
-
ஒவ்வொரு நாளும் இன்பத்தின் பின்னால் ஓடுகிறோம்.ஆனால் அதை அடையும்முன் நம்மைவிட்டு நழுவி ஓடிவிடுகிறது
-
உலகில் கோடி மனிதர்களில் ஒருவர்கூட கடவுளை நம்புவதில்லை.கடவுளை நம்புபவன் அவரை நேரில் பார்க்க விரும்புவான்-
-
தன் மதத்திலும், இறைவனிடமும் எல்லையற்ற நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாதவன் ஞானியாக முடியாது
-
ஏதாவது ஒரு சின்னம் இல்லாமல் சிந்திக்க முடியாது. பார்வையற்றவர்கூட ஓர் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் சிந்திக்க முடியும்
-

No comments:

Post a Comment