ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸
-part6
-🌸
உன்னுள் என்ன உள்ளது என்பதை நீ அறியவில்லை. இறைவன் உனக்குள்ளேதான் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தால் எல்லா பணிகளையும் விட்டுவிட்டு, உள்ளம் உருகி அவரை அழைக்க ஆசைப்படுவாய்
-🌸
மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காம்மும்-உலகியல் ஆசையும் தான் யோகத்திற்கு தடை. சிலர் யோகத்திலிருந்து நழுவி, வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். ஒருவேளை இன்ப நுகர்ச்சி நாட்டம் சிறிது இருந்திருக்கலாம். அதை அனுபவித்து முடித்தபிறகு மீண்டும் இறைவனை நாடுவார்கள், மீண்டும் யோக நிலையை அடைவார்கள்.
-🌸
தராசில் ஒரு தட்டில் எடைகூடினால் கீழ்முள்ளும் மேல் முள்ளும் ஒரே நேர்கோட்டில் நிற்காது. கீழ் முள்தான் மனம், மேல்முள் கடவுள். கீழ்முள் மேல் முள்ளுடன் ஒன்றுபட்டு நிற்பது தான் யோகம்
-🌸
மனம் அமைதியடையாவிட்டால் யோகம் கைக்கூடாது. யோகத்தை அசையாத சுடருக்கு ஒப்பிடலாம். காற்றின் வேகத்தால் தீபம் அசைகிறது. அதேபோல் உலகியல் ஆசைகளால் மனம் சலனமடைகிறது. மனம் சஞ்சலப்படாமல் அமைதியாக இருந்தால் யோகம் கைக்கூடிவிட்டது என்று பொருள்
-🌸
ஆணவம் என்னும் குன்றின்மீது மழைநீர் தேங்காது. வழிந்து கீழே வந்துவிடும். யாரிடம் ஆணவம் இல்லையோ அவரிடம் தான் இறைவனின் கருணைமழை பொழியும்.
-🌸
இறைவன் எல்லா உயிரிலும் இருக்கிறார். இதில் பக்தன் என்று யாரைச் சொல்வது? யாருடைய மனம் எப்போதும் இறைவனில் இருக்கிறதோ அவனே பக்தன்
🌸
மாடியை அடைவது தான் முக்கியம். சரியானபடிகள் வழியாக ஏறிவரலாம். மூக்கில் படிகள் வழியாகவும் வரலாம். கயிறு வழியாகவும் ஏறிவரலாம்.மூங்கிலை ஊன்றி தாவியும் வரலாம்.அதே போல் எல்லா நெறிகள் வழியாகவும் இறைவனை அடையலாம்.எல்லா மதங்களும் உண்மை.ஆனால் பாதைகள் வெறுவேறு
🌸
பிறமதங்களில் தவறுகளும் மூடநம்பிக்கையும் இருப்பதாக நீங்கள் சொல்லலாம்.இருந்தால் என்ன? இருக்கட்டுமே என்பேன் நான். எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. மன ஏக்கம் இருந்தால்போதும்.இறைவனிடம் அன்பு,ஒரு ஈர்ப்பு இருந்தால் போதும்.நமக்குள் இருந்துகொண்டு நம்மை வழிநடத்துபவர் அவரே அல்லாவா.அவருக்கு நமது மன ஏக்கம் புரியாதா?
-🌸
ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 9789 374 109 🌸
No comments:
Post a Comment