அந்நியர் நம்மீது திணித்த இந்துமதம் என்ற பெயரை நாம் மாற்ற வேண்டுமா?
-
தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக அறிஞர்கள் பலர் இந்துமதம் என்ற பெயர் நாமாக ஏற்படுத்தியது அல்ல.பிறர்நம்மீது திணித்தது, ஆகவே,சைவ சமயம்,வைணவ சமயம் என்ற பெயரிலேயே அழைக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் சைவம்,வைணவம் என்ற இரண்டு சமயங்கள் மட்டும் இல்லை. பல முக்கிய மதங்களும், நூற்றுக்கணக்கான மதபிரிவுகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரையும் சைவம்,வைணவம் என்ற பெயரின் கீழ் கொண்டுவர முடியாது. உதாரணமாக வங்காளம்,ஒரிசா,அஸ்ஸாம் போன்ற கிழக்கு இந்தியாவின் முக்கிய மதமாக இருப்பது சாக்தம்.காளி வழிபாடு. காளி சிலையின் கீழ் சிவன் சவம் போல் படுத்துகிடப்பதாகவும், சிவன்மேல் காளி ஏறி நிற்பதாகவும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும். இது சாக்த தத்துவத்தை விளக்குவதற்காகஅமைக்கப்பட்டது. இந்த வழிபாட்டை தென்னிந்திய சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? வட இந்திய துறவிகள் சிவோகம்-நானே சிவன் என்று கூறிக்கொள்வார்கள். நானே சிவன் என்று கூறிக்கொள்வதை தென்இந்திய சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? புத்தரை ஒரு அவதாரமாக வடஇந்திய வைணவர்கள் வழிபடுகிறார்கள்.தென் இந்திய வைணவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?
-
சீக்கியர் தனிசமயமாக இயங்கிவருகிறார்கள். அவர்கள் சைவத்தையும்,வைணவத்தையும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? வள்ளலாரை பின்பற்றுபவர்கள் ஜோதியாண்டவர் என்கிறார்கள்,ரமணரை பின்பற்றுபவர்கள் அத்வைதிகளாக இருக்கிறார்கள். வைகுண்டரை பின்பற்றுபவர்கள் அய்யாவழி என்ற சமயத்தை பின்பற்றுகிறார்கள்.ஆகவே குறைந்தபட்டம் தமிழ்நாட்டில் உள்ளவர்களை கூட சைவம்,வைணவம் என்ற இரண்டு பிரிவுக்குள் கொண்டுவர முடியாது. சிவனை வழிபடுபவர்கள் எல்லோரும் சைவர்கள்,கிருஷ்ணரை வழிபடுபவர்கள் எல்லோரும் வைணவர்கள் என்று நினைத்தால் அது தவறு. சைவசமயத்தின் ஆச்சார்யர்கள் உருவாக்கிய கோட்பாடுகளை பின்பற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள்தான் சைவர்கள். அதேபோல் வைணவ சமய ஆச்சார்யர்களின் கோட்பாடுகளை பின்பற்றி நடப்பவன்தான் வைணவன். இஸ்கான் என்ற ஒரு பிரிவு இருக்கிறது.இவர்கள் வைணவ கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் அல்ல.அவர்களுக்கென்று தனி சித்தாந்தம் உள்ளது. பிரம்மகுமாரிசங்கம் போன்ற பல சமயங்கள் உள்ளன.இவர்களின் வழிபாடுகள் சடங்குகள் போன்றவை சைவ மற்றும் வைணவ சமயத்தை சார்ந்தவை அல்ல. தமிழ்நாட்டில் மிக குறைவாகவே சமணர்கள் இருந்தால்கூட அவர்களை சைவத்திற்குள்ளோ,வைணவத்திற்குள்ளோ சேர்க்க முடியாது.
-
இந்திய அரசியல் அமைப்பு சட்டதின்படி எது இந்துமதம்? இந்தியாவில் தோன்றிய அனைத்தும் இந்துமதம்.அது சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் சரி, பெரிய வழிபாடுகளாக இருந்தாலும் சரி,அத்வைதமாக இருந்தாலும் அனைத்தும் இந்துமதம்தான். சிலருக்கு இந்துமதம் என்று கூறுவது பிடிப்பதில்லை. இந்து சமயம் என்று கூறுங்கள் என்கிறார்கள். நல்லது. சமயம் என்ற வார்த்தையை இந்தியாமுழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்துவார்களா?
-
இந்துமதம் என்பதற்கு சிறு விளக்கம். இந்தியாவில் தோன்றிய மதம். இதுதான் இந்தியாவின் மதம். இந்தியாவில் பல மொழிகளை மக்கள் பேசினாலும், பல கலாச்சாரத்தை பின்பற்றினாலும் நமக்குள்ள ஒரே ஒற்றுமை நாம் பின்பற்றும் மதம் இந்தியாவில் தோன்றிய மதம்.இந்த அடிப்படையில் ஒன்றுபடலாம்.
-
இந்தியாவில் தோன்றிய மதங்களை பின்பற்றிய அனைவரும் ஒரேபோல் பிறநாட்டினரால்,பிறநாட்டு மதங்களை பின்பற்றுபவர்களால் கொடுமையை அனுபவித்தார்கள்.
-
முஸ்லீம் அரசர்கள் இந்துக்களை காபிர்கள்(அல்லாவின் எதிரிகள்) என்று கூறி கொன்று குவித்தார்கள். கோடிக்கணக்கில் உயிரிழந்த அவர்களின் உயிருக்கு யார் பதில் சொல்லப்போகிறார்கள்?
-
கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு சலுகைகளும், மற்றவர்களுக்கு கொடுமைகளும் இழைக்கப்பட்டன.அதை மூடிமறைக்க நினைக்கிறீர்களா?
-
இந்துக்கள் என்ற பெயரில்தான் நமது முன்னோர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அதே பெயரில்தான் நாம் எழுர்ச்சிபெற வேண்டும். இந்துக்கள் என்ற பெயரில் நாம் ஒன்றுபடாமல் போனால் அது நமது முன்னோர்களுக்கு செய்யும் அநீதி. நாம் வலிமைபெற்று உலகை வெற்றிகொள்ளும்வரை இந்தபெயரிலேயே தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால் வேறு பெயரை பரிசீலிக்கலாம்....
-
கட்டுரை... சுவாமி வித்யானந்தர் (8-2-2018)
-
No comments:
Post a Comment