Sunday, 25 February 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-10

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-பாகம்-10
-
அத்வைத வேதாந்தத்தின்படி உங்களுள்,என்னுள் என்று எல்லோருள்ளேயும் உள்ள ஆன்மா எங்கும் நிறைந்தது
-
உருவம் உள்ளது ஒரு இடத்திற்கு கட்டுப்பட்டுவிடும். ஆன்மா உருவமற்றது எனவே இடத்தை கடந்து எல்லையற்றதாக உள்ளது
-
ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவு இருந்தேயாக வேண்டும். ஆன்மாவிற்கு ஆரம்பம் இல்லை அதனால் முடிவும் இல்லை
-
மாயை அல்லது அறியாமையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் உண்மையில் நாம் யாரோ அதுவாக ஆவோம்
-
மனித உடலில் அனைத்தும் ஜடப்பொருட்களால் ஆனது.ஆன்மா மட்டுமே ஜடப்பொருள் அல்லாதது
-
ஆன்மாவின் புறப்போர்வை உடல்.ஆன்மாவின் அகப்போர்வை மனம். உண்மையில் ஆன்மாவே எல்லாவற்றையும் உணர்ந்து அனுபவிக்கிறது
-
ஒவ்வொரு மனிதனும் மூன்று பகுதிகளால் ஆனவன். உடல்,அந்தக்கரணம் அல்லது மனம்,அதன் பின்னால் ஆன்மா
-
உலகில் எங்கும் உள்ள போராட்டங்கள்,போர்கள் எல்லாமே இழந்த சமநிலையை திரும்பப் பெறுவதற்கான போராட்டத்தின் வெளிப்பாடுகளே
-
எதற்கும் ஆசைப்படாதீர்கள். ஆசையெல்லாம் துறந்துவிட்டு முழு திருப்தியோடு இருங்கள் கடவுளுக்கு ஆசை இல்லை
-
முட்டாளுக்கு ஆசைப்படும் அளவுக்கு அறிவு வளரவில்லை.அறிவில் முழுமைபெற்றவன் ஆசைப்படுவதில்லை, அவனுக்கு தேவை எதுவும் இல்லை
-
ஆகாசத்தின் அதிர்வுகள் குறைவாக இருந்தால் அது இருளாகிவிடும். அதேபோல் அதிர்வுகள் அதிகமாகிவிட்டால் அதுவும் இருளாகிவிடும்
-
குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது பல் இல்லாமல் ஊர்ந்துகொண்டு வருகிறது.உலகத்தைவிட்டு போகும் கிழவனும் அப்படியே போகிறான்
-
கடவுள் இவரை விரும்புகிறார்,இவரை வெறுக்கிறார் என்பதெல்லாம் பொருளற்ற பேச்சு.எதையும் வெறுப்பவர் கடவுளாக இருக்க முடியாது
-
கடவுள் எதையும் விரும்ப முடியாது.விரும்பினால் அவர் கடவுளாக இருக்க முடியாது.அவர் நிறைநிலையை அடையாதவராகத்தான் இருப்பார்
-
காரண காரிய விதிகளின் பலனை அறியும் திறன் உள்ளவர்களுக்கு, இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைப்பற்றி துல்லியமாக கூறமுடியும்
-
ஓர் ஆன்மா ஓர் உருவத்தை எடுக்கிறது.அதில் சில காலம் வசிக்கிறது.பின்னர் அதைவிட்டுவிட்டு வேறு உடலை எடுக்கிறது
-

No comments:

Post a Comment