Tuesday, 13 February 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-10


ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்
-
🌸-part 10
-
🌸இறைநாமத்தை சொல்வதால் மனிதனுடைய மனம், உடல் எல்லாம் பரிசுத்தமடைகின்றன. நான் பாவி, பாவி என்று நினைத்துக்கொண்டிருப்பவன் பாவியாகவே மாறிவிடுகிறான். நான் இறைவனின் திருநாமத்தை சொல்கிறேன். அந்த நாம மகிமையால் என் பாவங்கள் எல்லாம் போய்விட்டன என்று உறுதியாக நினைப்பவன் முக்தனாகிறான்.
-
🌸வெறும் பாவம் நரகம் என்றெல்லாம் ஏன் பேசவேண்டும்? தீயவை செய்துவிட்டேன். இனிமேல் செய்யமாட்டேன் என்று ஒருமுறை சொல். இறை நாமத்தை நம்பு.
-
🌸இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு கடமைகள் உள்ளன.இதற்கிடையில் மனத்தை இறைவனிடம் நிறுத்துவது கடினம்.ஆரம்ப காலத்தில் பல தடைகள் ஏற்படும்.இல்லறத்தில் இருந்தாலும் அவ்வப்போது தனிமையில் வாழவேண்டும். மூன்று நாட்களாவது வீட்டைவிட்டு தனிமையில் சென்று இறைவனை நாடி அழுதால் அது நல்லது. அது முடியாவிட்டால் ஒரு நாளாவது தனிமையில் இருந்து இறைவனை சிந்தித்தால் அதுவும் நல்லது தான்.
-
🌸ஊறு காயை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும். இதில் ஊறுகாயை அருகில் வைத்தால் என்ன செய்வது? ஆண்பெண் உறவு தான் ஊறுகாய். இல்லறத்தில் இருப்பவர்கள் இதிலிருந்து விடுபடுவது கடினம். அதனால் தான் ஆரம்ப காலத்தில் தனிமையில் சென்று இறைவனை குறித்து சிந்திக்க வேண்டும்.
-
🌸முதலைகள் இருக்கும் ஆற்றில் இறங்கினால் அவைகள் பிடித்துவிடும்.ஆனால் உடம்பில் மஞ்சளை பூசிக்கொண்டால் பயப்படதேவையில்லை. காம்ம்,கோபம் முதலியவை முதலைகள். விவேகம்-வைராக்கியம் தான் மஞ்சள்.முதலில் விவேக வைராக்கியத்தை பெற்றுவிடு.
-
🌸மக்களுக்கு போதிப்பதற்கு இறைவனின் அதிகார முத்திரை வேண்டும். இல்லாவிட்டால் போதனை கேலிக்கூத்தாகிவிடும்.தனக்கே இறைக்காட்சி கிடைக்கவில்லை,இதில் இறைவனைப்பற்றி மற்றவர்களுக்கு எப்படி போதிக்க முடியும்? ஆணை பெறாவிட்டால், நான் உலகிற்கு போதிக்கிறேன் என்ற ஆணவம் வந்துவிடுகிறது. ”நான்” என்ற ஆணவம் அறியாமையிலிருந்து வருகிறது.
-
🌸இறைவனே கர்த்தா.அதாவது செய்பவர்.நான் எதையும் செய்யவில்லை என்ற உணர்வு ஏற்படுமானால் அவன் ஜீவன் முக்தன். நானே செய்கிறேன்,நான் செய்தேன் என்ற நினைப்பிலிருந்துதான் எல்லா துன்பங்களும் அமைதியின்மையும் வருகின்றன.
-
🌸உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.உலகிற்கு உதவ நீங்கள் யார்? இந்த உலகை படைத்தவருக்கு எது செய்ய வேண்டும் என்று தெரியாதா? சாதனைகள் செய்து இறைவனை அறியுங்கள். அவரை பெறுங்கள். அவர் ஆற்றலை தந்தால்,அவர் ஆணையிட்டால் எல்லோருக்கும் உதவி செய்யலாம்.இல்லாவிட்டால் முடியாது.
-
🌸குடும்பத்தை நடத்துவதற்கு எந்த அளவு பணம் தேவையோ அந்த அளவுக்கு,பணம் சம்பாதிக்கலாம்.ஆனால் அவற்றையும் பற்றின்றி செய்வதற்காக தனிமையில் இறைவனுடன் கண்ணீருடன் பிரார்த்திக்க வேண்டும்.”எம்பெருமானே,அதிகமாக செயல்களில் ஈடுபடும்போது உன்னை மறந்துவிடுகிறேன்,எனவே உலகக்கடமைகளை குறைத்துவிடு.பற்றின்றி வேலை செய்வதாகத்தான் நினைக்கிறேன்,ஆனால் பற்று எப்படியோ வந்துவிடுகிறது-இவ்வாறு பிரார்த்தனை செய்
-
🌸அன்னதானம் போன்ற தர்ம காரியங்களை அதிகமாக செய்யச்செய்ய பெயரும் புகழும் பெருமையும் பெறவேண்டும் என்ற ஆசை தோன்றிவிடுகிறது. உங்களிடம் வந்து சேர்பவற்றை,தவிர்க்க முடியாதவற்றை பற்றின்றி செய்ய வேண்டும்.ஆனால் வரிந்துகட்டிக்கொண்டு பல வேலைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. அது கடவுளை மறக்கச்செய்யும்.ஒருவன் காளிகோவிலுக்கு தானம் செய்ய வந்தான்.ஆனால் கடைசி வரை காளியை தரிசிக்க நேரம் கிடைக்கவில்லை.முதலில் காளியை தரிசித்துவிடு.நமது செயல்கள் யாவும் இறைவனை காண்பதற்காகவே இருக்க வேண்டும்.
-
🌸ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 9789 374 109 🌸

No comments:

Post a Comment