Sunday, 25 February 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-4

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-4
-
ஓர் அடி கிடைத்தால்,இரட்டிப்பு கோபத்துடன் பத்து அடி திருப்பி அடிக்கவேண்டும்.அப்படி செய்தால்மட்டுமே அவன் ஓர் ஆண்மகன்
-
எனது ஆனந்தத்திற்கு வேறுயாரும் தேவையில்லை.காலம்காலமாக நான் தனியாகவே உள்ளேன்.ஏனெனில் நான் முக்தனாகவே இருந்தேன்
-
யார் தன்னில் மட்டும் ஆனந்தம் காண்கிறானோ,தன்னுள்ளேயே ஆசைகளின் நிறைவைக் காண்கிறானோ அவன்தான் பாடங்களைக் கற்றவன்
-
இது ஒரு கனவுலகம்.இங்கே ஒருவன் இன்பத்தை அனுபவிக்கிறானா,துன்பத்தை அனுபவிக்கிறானா என்பது பொருட்டே அல்ல.இரண்டும் கனவுகள்
-
பற்று வைப்பது, பற்றை விடுவது இரண்டும் பூரணமாக வளர்க்கப்பட்டால் அவை மனிதனை உயர்ந்தவனாக மகிழ்ச்சி நிறைந்தவனாக ஆக்கும்
-
தன் முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பது எல்லா விஷயங்களிலும் உண்மையாக பொருந்தும்
-
எல்லா செயல்களிலும் ஆரம்பத்தில் பல தடைகள் இருக்கத்தான்செய்யும்.காலப்போக்கில் பாதை சீராகிவிடும்
-
உன்னிடம் எல்லையற்ற பொறுமையும்,விடாமுயற்சியும் இருக்குமானால் வெற்றி வந்தே தீரும்
-
இதயத்தின் நாடிகள் 108 அதில் கருணை மையம் என்று அழைக்கப்படும் இடம் உள்ளதே அங்குதான் ஆன்மாவின் கோட்டை உள்ளது
-
நாம் நூல்களை படிக்கலாம்,சொற்பொழிவுகளை கேட்கலாம்,ஆனாலும் அனுபவம் ஒன்றுதான் கண்களை திறந்துவிடுகின்ற ஒரே ஆசிரியர்
-
நான் அடுத்த நிலைக்குப் போகிறேன்.பேச்சினால் அல்ல,ஸ்ரீராமகிருஷ்ணரைப்போல் ஸ்பர்சத்தால் ஆன்மீகத்தை வழங்குகின்ற நிலை அது
-
தொடரும்..
-

No comments:

Post a Comment