ஸ்ரீகிருஷ்ணரின் ராசலீலை பற்றி பல தவறான கருத்துக்கள் இந்துமத விரோதிகளால் பரப்பிவிடப்படுகின்றன. கோபியர்களின் உடைகளை திருடிசென்று, பெண்களை நிர்வாணப்படுத்தியது கொடூரம் என்றெல்லாம் கூறுகிறார்கள்
-
1. நெஞ்சத்தில் காமம் இருப்பவர்களால் கோபியர்களின் அற்புத காதலை புரிந்துகொள்ள முடியாது.அவர்கள் பாகவதத்தில் வரும் ராசலீலை பகுதிகளை படிக்கக்கூடாது.யாரிடம் துளியளவுக்கூட காமம் இல்லையோ அவர்களால் மட்டுமே அதை புரிந்துகொள்ள முடியும் என்பது சுவாமி விவேகானந்தரின் கருத்தாகும்
-
2. கோபியர்கள் ஸ்ரீகிருஷ்ணரை கணவனாக நினைத்தார்கள். கணவனின் முன் மனைவி ஆடைகள் இல்லாமல் நிற்பது தவறு அல்ல என்பது உங்களுக்கு தெரியும்.
-
3.கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ணனிடம் தீவிர அன்பு செலுத்தினார்கள்.ஆனால் மானம்,அவமானம் என்ற அறியாமை அவர்களைவிட்டு அகலவில்லை, யாரிடம் நாம் தீவிர அன்புசெலுத்துகிறோமோ அவர்கள் முன் எதையும் மறைக்க முடியாது. கணவன் மனைவியிடம் அன்பு செலுத்தினாலும்,மனைவி கணவனிடம் அன்பு செலுத்தினாலும் மறைப்பதற்கு ஒன்றும் இருக்காது.அவ்வாறு எதையாவது மறைத்து வைத்திருந்தால் அது முழு அன்பாக இருக்காது. கோபிரிடம் இருந்த அறியாமையை அகற்ற கிருஷ்ணர் இவ்வாறு செய்தார்
-
4. அன்பின் உச்ச கட்டம் என்பது உடல் உணர்வை கடந்துசெல்வதே ஆகும். உடல் உணர்வை கடந்தால் பிரம்மஞானம் கிடைக்கும். கோபியர்கள் அன்பின் உச்சத்தை அடையவேண்டும். பிரம்மஞானத்தை பெற வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பியதால் இவ்வாறு செய்தார்.பல பிறவிகளில் கடினதவம் செய்தும்கிடைப்பதற்கு அரிதான அந்த பிரம்மஞானத்தை அந்த பெண்கள் அடைந்தார்கள் என்றுதான் பாகவதம் சொல்கிறது.
-
5.கோபியர்கள் மற்ற பெண்களைபோல சாதாரணமானவர்கள் அல்ல.முற்பிறவில் பல தவங்களை செய்தவர்கள் என புராணம் சொல்கிறது. கிருஷ்ணரை நேசித்து,ஆனந்தம் அடையவேண்டும் என்பதற்காகவே இந்த பிறவியில் கோபியர்களாக பிறந்திருந்தார்கள். பிரம்மஞானம் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள் மட்டுமே இவ்வாறு மான அவமானத்தை துறக்க முடியும்.
-
6. மானம்,அவமானம் என்பது இல்லறத்தார்களுக்கு அவசியமானது.ஒரு சமுதாயத்திற்கு இவைகள் கண்டிப்பாக தேவை. ஆனால் இறைவனை தவிர வேறு எதுவும் தேவையில்லை என்று நினைப்பவர்கள் இந்த மானஅவமானத்தை கடந்துசெல்ல வேண்டும். அதனால்தான் பல துறவிகள் நிர்வாணமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பிறக்கும் போது நிர்வாணமாகவே வந்தோம்,இறக்கும் போதும் நிர்வாணமாகவே போகப்போகிறோம்.
-
7. காதலின் உச்ச கட்டம் காதலிப்பவரைப்போலவே மாறிவிடுவதாகும். கிருஷ்ணரை நேசித்துநேசித்து கோபியர்கள் தங்களை கிருஷ்ணனாகவே கருதிக்கொண்டார்கள்.எங்கும் கிருஷ்ணனையே கண்டார்கள்.
-
8.ராசலீலையை எழுதியது சுகர் என்ற மாபெரும் ரிஷி. காமத்தை கடந்தவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
-
9. இதேபோன்ற ராசலீலை பகுதிகள் தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகிறது. திருவள்ளுவரின் காமத்துபால் என்ற அதிகாரத்தில் இதுபற்றிதான் விளக்கப்பட்டுள்ளது. அங்கே தலைவன் தலைவி என்று கூறப்பட்டுள்ளது.அறம்,பொருள்,இன்பம் என்ற வரிசையில் வரும் இன்பம்தான் இந்த ராசலீலை பகுதிகள். இந்த இன்பத்தில் நிலைபெற்றால் அது நான்காவது நிலையான வீடுபேற்றை கொடுக்கும்.நமது முன்னோர்கள் மூடர்கள் அல்ல,அவர்களின் கருத்தை சரியாக அறியாதவர்கள்தான் மூடர்கள்.
-
10.ராசலீலையின் இந்த பகுதிகள் காமத்தை கடந்த ஞானிகளால் மட்டுமே புரிந்துகொள்ளப்படக்கூடியவை. சாதாரணமனிதர்கள் இவற்றில் குறைகாண்பது இயல்புதான்,அவரகளின் அறியாமை அகலும்வரை இப்படி குறைகூறிக்கொண்டேதான் இருப்பார்கள். ஞானத்தின் உச்சநிலையும்,பக்தியின் உச்சநிலையும் ஒன்றுசேரும் இடம்தான் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது
-
சுவாமி வித்யானந்தர் (3-2-2018)
No comments:
Post a Comment