ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸
-part4
-🌸
வேதம், புராணம்,தந்திரம்,ஆறுதரிசனங்கள் இவைகளை பற்றி வாயினால் விவரிக்கலாம்.அதனால் அவைகள் எச்சிலாகிவிட்டன. ஆனால் பிரம்மத்தை வாயினால் விவரிக்க முடியாது. அதனால் அது ஒன்றுமட்டும் எச்சிலாகவில்லை.பிரம்மத்தை நேரில் உணர்ந்தவர்கள் அதை குறித்து வாயால் விவரிக்க முடியவில்லை.
🌸
உலகியல் ஆசையின் சுவடு இருந்தால்கூட பிரம்மஞானம் கிடைக்காது.பார்ப்பது,கேட்பது,சுவைப்பது,தொடுவது போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருந்தால்தான் பிரம்மஞானம் கிடைக்கும்.ரிஷிகள் தனிமையில் அமர்ந்து நாள் முழுவதும் தியானம்செய்வார்கள்.அதானால் தான் அவர்களால் பிரம்மஞானம் பெற முடிந்தது.
🌸
கலியுகத்தில் மனிதன் உணவை நம்பி இருக்கிறான். உணவை சார்ந்து இருக்கும்வரை உடல் உணர்வு நீங்காது. உடல் உணர்வு உள்ளவர்கள் நானே பிரம்மம் என்று சொல்வது நல்லதல்ல. உடல் உணர்வு யாருக்கு இல்லையோ அவர்கள் தான் நானே அது என்று சொல்ல தகுதியானவர்கள்.
🌸
உடல் பிரம்மமல்ல, மனம் பிரம்மமல்ல,இந்த உலகம் பிரம்மல்ல இதுவல்ல,இதுவல்ல என்று ஆராய்ந்து பிரம்மத்தை அறிந்த பின். அந்த பிரம்மமே உடலாகவும்,மனமாகவும்,இந்த உலகமாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்.பிரம்மத்தை அறிந்தவன் ஞானி. அந்த பிரம்மமே அனைத்துமாக ஆகியிருப்பதை காண்பவன் விஞ்ஞானி.
-
🌸
கடவுள் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கிறார், எறும்புவரை உள்ள உயிரினங்களில் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது.யாரை பலர் மதிக்கிறார்களோ போற்றுகிறார்களோ அவர்களிடம் கடவுளின் சக்தி அதிகம் வெளிப்பட்டுள்ளது.
🌸
புத்தகம் படிப்பது கடவுளை அடைவதற்கான வழியை தெரிந்துகொள்வதற்காகத்தான். வெறுப் படிப்பினால் எந்த பயனும் இல்லை. படித்து முடித்தபிறகு இறைவனை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்
-🌸
அரசமரத்தை வெட்டினால் அது மறுபடியும் தளிர்விடும். அதேபோல் ஞானிகளுக்கு சமாதிநிலையில் நான்-உணர்வு போய்விடுகிறது. சமாதி கலைந்த பிறகு மறுபடியும் வந்துவிடுகிறது.அதனால் தான் விஞ்ஞானி பக்தி நெறியை பின்பற்றி வாழ்கிறான்.
🌸
மரணத்தைப்பற்றி எப்போதும் சிந்தித்துவர வேண்டும். மரணத்திற்கு பிறகு எதுவும் இருக்காது என்பதை மனத்தில் பதியவைக்க வேண்டும். வேலையின் காரணமாக மக்கள் நகரங்களுக்கு செல்வது போல் நாமும் சில கடமைகளை செய்வதற்காக பிறந்திருக்கிறோம்.
🌸
பணக்காரனின் ஒரு தோட்டத்தில் வேலைக்காரன் வேலை செய்கிறான். இது யாருடைய தோட்டம் என்று யாராவது கேட்டால். இது எங்களுடைய தோட்டம் என்று சொல்வான். ஆனால் வேலை போய்விட்டால் அங்கிருந்து ஒரு தகரட்டபாவை கூட வெளியே கொண்டு வரமுடியாது. அதேபோல் வாழும்போது சம்பாதித்தவை அனைத்தும் என்னுடையது என்கிறோம்.மரணத்திற்கு பின் எதுவும் எடுத்து செல்ல முடியாது
-
🌸ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள்🌸 9789 374 109
No comments:
Post a Comment