ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸🌸
-part3
-
🌸பெரிய விறகு அடுப்பில் உணவு சமைக்கும்போது . ஈரமான விறகு கட்டைகள் முதலில் நன்றாக எரியும். அப்போது அந்த கட்டைகளுக்குள் நீர் இருப்பது நமக்கு தெரியாது.ஆனால் விறகு எரிந்து முடியும் தருவாயில் தண்ணீர் எல்லாம் கட்டையின் மறுபுறத்திற்கு புஸ்புஸ் என்று சத்தத்துடன் வருகிறது.பின்பு அது அடுப்பையே அணைத்துவிடுகிறது.அதேபோல் சிறுவயதில் சிலர் செய்யும் பாவச்செயல்கள் அவர்களை பாதிப்பதில்லை.ஆனால் வயது ஆகஆக அதன் பலன் வெளிப்பட தொடங்கும்.
-part3
-
-
பெரிய மரக்கட்டை தானும் மிதக்கும், அதன்மேல் ஏறிக்கொள்பவர்களையும் தாங்கிக்கொள்ளும் . குரு என்பவர் பெரிய மரக்கட்டை போன்றவர்கள் .உலகை வழிநடத்துவதற்காக ஒவ்வொரு யுகத்திலும் இறைவனே குருவாக அவதரிக்கிறார்..
எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி. இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.
-
உங்களுக்கு ஒரு மகாமந்திரம் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை,மற்ற அனைத்தும் நிலையற்றவை. அவரை அறியவில்லை என்றால் மற்ற அனைத்தும் இருந்தும் வீண். அவரை அறியாமல் வாழ்வதுவீண். இதுதான் மகாமந்திரம்.
கழுகுகள் மிக உயரத்தில் பறக்கின்றன. ஆனால் அதன் பார்வை கீழே உள்ள அழுகிய பிணங்களை தேடுவதிலேயே இருக்கும். அதேபோல் மத கருத்துக்களை பேசும் பண்டிதர்கள் பார்வை எல்லாம் காமத்தின்மீதும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.
விளக்கின் வெளிச்சத்தில் ஒருவன் பகவானைபற்றிய புத்தகத்தை படிக்கிறான்.மற்றொருவன் திருட்டுகையெழுத்து போடுகிறான்.சூரியன் நல்லவனுக்கும் ஒளி தருகிறது தீயவர்களுக்கும் ஒளி தருகிறது. அதேபோல் பிரம்மம்(உருவமற்ற இறைவன்) நல்லவர்களிடமும் தீயவர்களிடமும் அனைவரிடமும் உள்ளார்
பாம்பின் வாயில் விசம் இருக்கிறது. பாம்பு ஒருவனைக் கடித்தால் அவன் இறந்துவிடுவான் ஆனால் பாம்பை விசம் பாதிக்காது. அதேபோல் இந்த உலகத்தில் உள்ள துன்பம் பாவம் அமைதியின்மை போன்றவற்றால் பிரம்மம் பாதிக்கப்படுவதில்லை. உயிர்கள்தான் இவற்றால் பாதிக்கப்படுகின்றன.
-
ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள்

No comments:
Post a Comment