ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸
-
-🌸part7🌸
-
முட்டையை அடைகாக்கும் பறவையின் கண்கள் எங்கேயோ பார்த்தபடி இருக்கும்.மனம் முழுக்க முழுக்க முட்டையின் மீது இருக்கும். அதேபோல் யோகியின் கண்களில் ஒரு வறட்டுப்பார்வை இருக்கும்.மனம் எப்போதும் இறைவனிடம் இருக்கும். எப்போதும் ஆன்மாவிலேயே நிலைத்திருக்கும்.
-🌸
எல்லோரும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறோம். பகவானின் நாமத்தை உச்சரிப்பதும் செயல்தான். தியானிப்பதும் செயல்தான். மூச்சுவிடுவதும் செயல்தான். எனவே செயலை விட்டுவிடுவது சாத்தியமில்லை. வழி என்ன? கடமைகளைச்செய் பலனை இறைவனிடம் அர்ப்பணித்துவிடு.
-🌸
குடும்பம் நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவையோ அந்த அளவுக்கு பணம் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் லட்சியமல்ல. பணத்தால் இறைவனுக்கு சேவை நிகழுமானால் அந்த பணத்தில் குற்றமில்லை.
-🌸
குஞ்சுகள் தாங்களே இரையை கொத்தி தின்னும் நிலைக்கு வளர்ந்துவிட்டபின் தாய்ப்பறவை அவைகளை விரட்டிவிடுகிறது. அதேபோல் பிள்ளைகள் தங்கள் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளரும் வரை அவர்களின் பாரத்தை நீ சுமக்க வேண்டும். அதன்பிறகு அவர்களை அவர்களே கவனித்துக்கொள்வார்கள்.குடும்ப கடமையிலிருந்து விலகிவிடலாம்.
-🌸
காய் தோன்றிய பின் பூ உதிர்ந்துவிடுகிறது. அதேபோல் இறையனுபூதி கிடைத்தபின் ஒருவன் கடமைகளைச் செய்ய வேண்டியதில்லை. அதற்கான மனமும் இருக்காது.
-🌸
இந்த ஊனக்கண்களால் இறைவனைக் காண முடியாது. சாதனைகள் செய்துசெய்து ஒரு பிரேமை உடல் உண்டாகிறது. பிரேமைக் கண்கள்,பிரேமை காதுகள், எல்லாம் உண்டாகின்றன. பிரேமை கண்களால் இறைவனைக் காணலாம். பிரேமை காதுகளால் இறைவன் பேசுவதைக் கேட்கலாம்.பிரேமை மயமான ஆண்பெண் உறுப்புகளும் உண்டாகின்றன.இந்த பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது. இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் இது கிடைக்காது. அந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாக்க் காணலாம்.
-🌸
இறைவனின் அருள் இல்லாமல் சந்தேகங்கள் விலகுவதில்லை. ஆன்ம அனுபூதி கிடைத்த பிறகு தான் அனைத்து சந்தேகங்களும் நீங்கும்.
-🌸
குழந்தை தந்தையின் கையை பிடித்து நடந்தால் ஒருவேளை கீழே விழலாம். ஆனால் தந்தை குழந்தையின் கையை பிடித்திருந்தால் கீழே விழ வாய்ப்பே இல்லை. மன ஏக்கத்துடன் அழுதால் இறைவனே நமது கையை பிடித்து வழிநடத்தி செல்வார்.
-🌸
குழந்தை தாயைக்காணாமல் கதறிய படி அங்குமிங்கும் ஓடினால், ஒளிந்துகொண்டிருந்த அவள் வெளியே வருகிறாள். குழந்தையின் முன் வந்து நிற்கிறாள். இந்த உலகம் ஒரு விளையாட்டு.பாசக்கயிற்றினால் இறைவன் நம்மை கட்டியிருக்கிறாள். விளையாட்டில் விருப்பம் இல்லாதவர்கள் இறைவனைக்காண இங்குமங்கும் ஓடுகிறார்கள். அப்போது இறைவன் காட்சி தருகிறார்.
-🌸
ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள் 9789 374 109
-
No comments:
Post a Comment