Sunday, 25 February 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-7

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-7
-
நாம் பார்த்தவை,கேட்டவை, பழகியவை இவற்றை நினைத்து பார்ப்பதிலேயே நம் வாழ்வின் பெரும் பகுதி கழிந்துவிடுகிறது
-
எல்லையற்ற பேரின்பம் நம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது என்பதை அறிந்த ஒருவன் அதை அடையாமல் சும்மா இருப்பானா?
-
நமது துன்பங்கள் அனைத்தும் நாமே ஆக்கிக்கொண்டது. இதுதான் இயற்கை
-
எத்தனைமுறை ஏமாற்றப்பட்டாலும் இன்பம் கிடைக்கும் என்றே நம்புகிறோம் அந்த நம்பிக்கையில் அதைத் தேடி அலைகிறோம்
-
அதிக பணம் உள்ளவனுக்கு அதை அனுபவிக்க குழந்தை இல்லை.ஏழைக்கு அதிக குழந்தை உள்ளது ஆனால் அனுபவிக்க பணம் இல்லை.
-
துன்பத்தை நாம் நாட விரும்புவதில்லை. அதேபோல் இன்பத்தையும் நாடி செல்லக்கூடாது. ஒன்றை நாடிசென்றால் இன்னொன்று தானே வரும்
-
மக்களில் பெரும்பாலானாவர்கள் வளர்ச்சி பெறாத மூளை உடையவர்களே. லட்சத்தில் ஒருவருக்குதான் மூளை வளர்ச்சியடைந்துள்ளது
-
இறைவன் எங்கே இருக்கிறார்? உங்கள் சொந்த மையத்தை நீங்கள் அணுக அணுக இறைவனை படிப்படியாக நெருங்குவீர்கள்
-
அறிவு வளர்ச்சிக்கு நாம் செலவிட்ட சக்தியை மக்களை தூயவர்களாக்குவதற்காகசெலவிட்டிருந்தால், உலகம் இப்படி இருந்திருக்காது
-
பணம் இல்லாவிட்டாலும், ஏழைகள் புதிய தேவைகளை நிறைவேற்ற ஓடுகிறார்கள்.முடிவில் அந்த போராட்டத்திலேயே மடிந்துபோகிறார்கள்
-
அறிவு வளர்ச்சியால் உலகில் நடந்துள்ள நன்மை என்ன? சிலர் பலரை அடிமையாக்கி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்கின்றனர்
-

No comments:

Post a Comment