Tuesday, 13 February 2018

நமது குழுவில் இருப்பவர்கள் இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்


நமது குழுவில் இருப்பவர்கள் இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்
-
சுவாமி விவேகானந்தர் சப்த ரிஷி மண்டலத்தில் தவம்செய்துகொண்டிருந்த 7 ரிஷிகளில் ஒருவர் என்றும் இந்த உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக வந்திருப்பதாகவும் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார். அழிந்து கொண்டிருந்த சனாதன தர்மத்தை நிலைநாட்ட வந்தவர் சுவாமி விவேகானந்தர். ஒரு பக்கம் பழைய மூடநம்பிக்கைகளும்,இன்னொரு பக்கம் நவீன விஞ்ஞானமும் சேர்ந்து சனாதன தர்மத்தை மறைத்துக்கொண்டிருந்தது. ஐரோப்பியர்கள் மதத்தை கைவிட்டு விஞ்ஞானத்தின் பின் சென்றார்கள். இந்தியர்கள் பலர் மதத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடந்தார்கள்.
-
சுவாமி விவேகானந்தர் வேதமதத்தை புதுப்பிக்க விரும்பினார். அதன் ஞானகாண்டத்தை அதாவது உபநிடதங்களை மீண்டும் மக்களிடம் பரப்ப வேண்டும் என நினைத்தார். அதற்காக தன் வாழ்நாளை செலவிட்டார். ஆனால் அவரது பணி இன்னும் பூர்த்தியாகவில்லை. அவரது பணி நிறைவுற்றபின் மீண்டும் சப்தரிஷி மண்டலத்திற்கு சென்றுவிடுவார். அதுவரை இந்த உலகத்தில் உள்ள மக்களை ஆன்மீகத்தை நோக்கி இழுத்துக்கொண்டே இருப்பார்.
-
இந்த பணியில் ஈடுபடுபவர்கள் பாக்கியவான்கள்.அவர்களுக்கு மரணமற்ற பேரின்பநிலை கிடைக்கும். அவர்களை சார்ந்தவர்களுக்கு நல்ல கதி ஏற்படும். நமது இந்த பணிக்கு ஆண்கள்,பெண்கள்,திருமணமானவர்கள்,திருமணம் ஆகாதவர்கள் என்று எல்லோரும் தேவை. ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அளவு ஊக்கத்துடன் உதவ முன்வாருங்கள்
-
சுவாமி வித்யானந்தர் (12-2-2108)

No comments:

Post a Comment