Sunday, 25 February 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-5

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-5
-
நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான்.ஆனால் அந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது-
-
நாம் ஏன் துன்பப்படுகிறோம்? ஏனெனில் நாம் கட்டுண்டிருக்கிறோம். நம்மை கட்டிவைத்திருப்பது யார்? நாமே-
-
பகுத்தறிவை பின்பற்றுபவர்கள் உண்மையை நோக்கி போக தயங்குகிறார்கள். உண்மை அவர்களை தேடி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்
-
ஆயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் பிறந்து இறந்துவிட்டாய்.இதோ இன்னொரு முறை பிறந்திருக்கிறாய்.இதற்கு முடிவே இல்லையா?
-
உலகில் நிகழும் சின்னஞ்சிறு அசைவுகூட என்மனத்தின் மீது ஒரு பதிவை உண்டாக்குகிறது.நமது அடிமைத்தனத்தை எண்ணிப்பாருங்கள்
-
உண்மையான நாகரீகம் என்பது புலன்களை அடக்குவது.கடவுளை நோக்கி செல்வது.பெரியபெரிய கட்டிடங்களை கட்டி வாழ்வதல்ல
-
மனைவிக்கு அடிமை,குழந்தைக்கு அடிமை,புகழுக்கு அடிமை,ஒரு வாய் சோற்றுக்கு அடிமை,இவை அனைத்திலிருந்தும் விடுபடுங்கள்
-
ஏதாவது ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மரணம்வரை உறுதியாக அதைப் பின்பற்றுங்கள்.அதுவே முக்திக்கு வழி
-
கோவிலை நம்பமாட்டேன்,எந்த மதத்தையும் நம்பமாட்டேன் என்பவன் பகுத்தறிவுவாதி அல்ல
-
எதையும் நம்பாதீர்கள். ஒவ்வொற்றையும் நம்புவதிலிருந்து விடுபடுங்கள்-இதுதான் ஞானம்பெற முதல்படி
-
உன்னை அறிந்துகொள்.
நீ உண்மையில் யார்? உனது இயல்பு எது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்
-
விதி என்று எதுவும் கிடையாது. நாமே நமது வாழ்க்கையை உருவாக்கி இருக்கிறோம்.நமது விதிக்கு நாமே காரணம்
-
குழந்தை அழுதுகொண்டே பிறக்கிறது. வாழ்க்கையின் முதல் அறிகுறியே அழுகையிலிருந்துதான் ஆரம்பமாகிறது
-
ஆசைகள் இருந்து,அவற்றை நிறைவேற்றும் வழி கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் உண்டாகிறது.எனது துன்பங்களுக்கு நானே காரணம்-
-
சடங்குகள்,சின்னங்கள் இவை போன்றவற்றிற்கு எங்கள் மதத்தில் இடம் இல்லை.தூய எளிய உபநிடதக் கோட்பாடுகளே எங்கள் மதம்-
-
காளி வழிபாடு என்பது என் தனிப்பித்து.அதை நான் பிரச்சாரம் செய்யவில்லை.எல்லோருக்கும் பொருந்துவதையே பிரச்சாரம் செய்கிறேன்
-
உபநிடதத்தில் உள்ள அத்வைதம்தான் அனைவருக்கும் ஏற்ற ஒரே மதம்.அதில் அனைவருக்கும் உரிய இடம் உள்ளது
-

No comments:

Post a Comment