ஸ்ரீராமகிருஷ்ணர்-பாகம்-2
--
கதாதரனுக்கு வயது ஏழு ஆகியது. அவனுடன் இனிய இயல்புகளும் வளர்ந்தன. கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அவனை நேசித்தனர். தங்கள் வீடுகளில் ஏதாவது தின்பண்டம் செய்தால், கதாதரனை சாப்பிட அழைப்பது வழக்கம். கதாதரன் அடக்கமான சிறுவனான வளரவில்லை , அவனது குறும்புகளும் சுட்டித்தனங்களும் அடக்க முடியாதவை.

அச்சம் என்பது சிறுவயதிலிருந்தே கதாதரனிடம் இல்லை. பேய், பிசாசு என்ற பயத்தால் பெரியவர்களும் போகத்தயங்குகின்ற இடங்களுக்கும் அவன் சிறிதும் பயமின்றி செல்வான்.
உடலுணர்வு இல்லாமல் இருத்தலே சிறந்த உடல்நலத்திற்கான அறிகுறி என்பது மருத்துவர்களின் கருத்து. கதாதரன் இயற்கையாகவே நல்ல உடலை பெற்றிருந்தான், எந்த நோயாலும் அவன் பாதிக்கப்படதில்லை. வானத்து பறவை போல உல்லாசமாக மகிழ்ந்து இருந்தான்.இயற்கையிலேயே கதாதரனுக்கு மன ஒருமைப்பாடு இருந்தது. ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்து செல்லும் போது உடல் உணர்வை இழந்துவிடுவான்.
சில்லென காற்றில் சிலிர்க்கும் பரந்த வயல்கள், சலனமின்றி ஓடும் சிற்றாறு, பறவைகளின் இனிய கீதம், நீலவானில் மாறிமாறி தெரியும் மேகக்கூட்டங்கள், இவைகளைக்காணும் போது தன்னை மறந்துவிடுவான்.

ஒரு நாள் கதாதரன் வயல்வெளி ஒன்றில் உல்லாசமாக சென்று கொண்டிருந்தான். அது மழைக்காலம். மழைமேகங்கள் திரண்டு வானம் கறுப்பாக காட்சி அளித்தது. அதன் கரிய வண்ணம் கதாதரனை வெகுவாக கவர்ந்தது. அவன் அதில் லயித்து நின்றபோது அந்த கருமையைக் கிழித்துவிடுவது போல எங்கிருந்தோ சில வெண்ணிற நாரைகள் சிறகுகளை விரித்து பறந்து சென்றன. கரியவானம் அதில் வெண்ணிற நாரைகளின் ஊர்வலம். இயற்கையின் இந்த எதிர்வண்ணக்கோலம் கதாதரனை தன்வயமிழக்கச் செய்துவிட்டது.
இயற்கையின் இனிய கோலத்தில் அவன் மனம் கரைந்தது. உடல்உணர்வு இழந்து, புறஉலக நினைவின்றி அவன் தரையில் சாய்ந்தான். பார்த்தவர்கள் பயந்துபோய் அவனது பெற்றோருக்கு சொல்லியனுப்பி, அவனை வீட்டிற்கு தூக்கிச்சென்றார்கள்.சிறிது நேரத்திற்கு பிறகு உணர்வு பெற்று பழைய நிலைக்கு திரும்பினான்
அவன்.

கதாதரனின் தாய்,தந்தையர் இதை வேறுவிதமாக புரிந்துகொண்டார்கள். இது வலிப்புநோயின் ஆரம்பமாக இருக்குமோ என அவர்கள் நினைத்தார்கள்.
தான் புத்துணர்வாக இருப்பதாகவும், தனக்கு நோய்எதுவும் இல்லை என்றும் காதரன் திரும்பதிரும்ப சொன்ன பிறகு அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தார்கள். ஆனாலும் அவனுக்கு ஏதாவது பேய்பிசாசு தொல்லை கொடுத்திருக்கலாம் என சந்திரா நினைத்தாள்.

கதாதரனின் தந்தை ஹுதிராம் அறுபத்தெட்டாவது வயதில் காலமானார். அப்போது கதாதரனுக்கு ஏழுவயது நடந்துகொண்டிருந்தது.
தந்தையின் மறைவு சிறுவனாக இருந்த கதாதரனை மிகவும் பாதித்தது. இன்பமாக சுற்றித்திரிந்த கதாதரன், வாழ்க்கையின் துன்பமான பக்கத்தை காணதுவங்கினான்.
குழந்தைப்பருவத்தில் தாயை பறிகொடுத்தல், சிறுவயதில் தந்தையை இழத்தல், திருமணமான சில வருடத்தில் மனைவியை இழத்தல் இவைகள் ஒரு மனிதனின் வாழ்க்கையை சூன்யமாக்கிவிடும் என்று சொல்வார்கள்.

ஒரு குழந்தை வளர்ந்து இளமையை அடையும் வரை தாயின் அன்பை புரிந்துகொள்ளும் வளர்ந்த பிறகு தான் தந்தையின் அன்பை புரிந்துகொள்ள தொடங்கும். அவ்வாறு அந்த அன்பை புரிந்துகொள்ளும் போது தந்தை இல்லையே என்ற ஏக்கம் ஒருவனை நிலைகுலையச்செய்துவிடும்.
வயதுக்கு மீதிய பக்குவத்தை கதாதரன் பெற்றிருந்ததால், இது அவனை வெகுவாக பாதித்தது.இருந்தாலும் தான் வருந்தினால் தான் வருந்துவாள் என்ற காரணத்தால் அதை அவன் வெளிக்காட்டமல் தனக்குள்ளே அடக்கிக்கொண்டான்.
ஆட்கள் இல்லாத கால்வாய்களிலும், சுடுகாடுகளிலும், மாந்தோப்புகளிலும் தனிமையில் உலவ ஆரம்பித்தான், இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஆனால் கதாதரன் சிந்தனையில் ஆழ்பவனாக தனிமையை விரும்புபவனாக மாறிக்கொண்டிருந்தான்.
--
தொடரும்....
-
ஸ்ரீாமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு 9789 374 109. ஸ்ரீராமகிருஷணரின் குழுவில் இணைக்கவும் என்று
மெசேஜ் அனுப்பவும்

No comments:
Post a Comment