மனிதனின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும்?
----
மிகவும் உயர்ந்த லட்சியத்தையே நாம் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலோர் எந்தவொரு லட்சியமும் இல்லாமல் இருட்டு வாழ்க்கையில்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
-----
லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகளைச் செய்வானானால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்பது நிச்சயம். எனவே ஒரு லட்சியம் இருப்பது சிறந்தது.
----
இந்த லட்சியம் நமது இதயத்தில் புகும்வரை, நமது மூளையில் புகும்வரை, நமது நாடி நரம்புகளில் புகும்வரை, நமது ரத்தத்தின் ஒவ்வொரு துளியுடனும் கலந்து துடிக்கும்வரை, நமது உடலின் அணுக்கள் தோறும் கலந்து ஊடுருவும்வரை நாம் அதைப்பற்றிக் கேட்க வேண்டும். அதையே சிந்திக்க வேண்டும். உள்ளம் நிறையும் போது வாய் பேசுகிறது. அது மட்டுமல்ல; உள்ளத்தின் நிறைவு தான் கைகளை வேலை செய்யத் தூண்டுகிறது.
----
எண்ணமே நம்மிலுள்ள தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள். நாட்கணக்காக அதைக் கேளுங்கள். மாதக்கணக்காகச் சிந்தியுங்கள்.
-----
தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள். தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை அவை. தோல்விகள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அப்படிப்பட்ட வாழ்க்கையில் என்ன இனிமை இருக்கிறது! போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். ஒரு பசு பொய் சொல்வதை நான் கேட்டதில்லை, ஆனால் அது வெறும் பசுதான்; மனிதன் அல்ல! ஆகவே தோல்விகளை, சறுக்கல்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
----
ஆயிரம் தடவை லட்சியத்திலிருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள்.
-----
எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பதுதான் மனிதனின் லட்சியம். எல்லாவற்றிலும் பார்க்க முடியா விட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்கவேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment