சீடர்: சுவாமிஜி அமெரிக்காவில் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்கள் உங்களை எதிர்க்கவில்லையா?
--
சுவாமிஜி; எதிர்க்காமல் என்ன செய்வார்கள்? மக்கள் எனக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்ததும் பாதிரிகள் என்னை எதிர்த்தார்கள் என்னைப்பற்றிப் பல அவதூறுகளைப் பரப்பினார்கள் செய்தித்தாள்களில் அவற்றை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்தார்கள் அவற்றை மறுக்கும் படி அப்போது பலர் என்னிடம் கூறிய துண்டு நான் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை ஏமாற்று வேலைகளால் இந்த உலகில் மகத்தான எதையும் சாதிக்க முடியாது என்பது என் திட நம்பிக்கை. எனவே இத்தகையகேவலமான பிரச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் என் பணியைத் தொடர்ந்தேன் இதன் விளைவாக நான் கண்டது என்ன வென்றால் அப்படி என்மீது பழி சொல்லியவர்களே பிறகு என்னிடம் வந்து தங்கள் செயல்களுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டார்கள்; முன்பு என்னைப்பற்றி வெளியிட்ட அவதூறுகளை மறுத்துச் செய்தித்தாள்களில் வெளியிட்டு அப்படிச் செய்ததற்காக வருத்தமும் தெரிவித்தார்கள்.

சிலவேளைகளில் நான் ஏதாவது வீட்டிற்குவிருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பேன் அதை அறிந்துகொண்டு நான் போவதற்கு முன்பாக அங்கு போய் என்னைப் பற்றிய ஏதாவது அவதூறுகளைச் சொல்லிவிடுவார்கள் என்னை அழைத்தவர்கள் இதைக் கேட்டதும் கதவுகளைப் பூட்டிக்கொண்டு வீட்டைவிட்டே போய்விடுவார்கள் நான் அங்கே சென்றால் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும் யாரும் இருக்க மாட்டார்கள் ,சில நாட்கள் கழியும். அனைத்தும் பொய் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள் என் சீடர்களாகவும் ஆவார்கள்.
மகனே இந்த உலகம் முழுவதுமே உலகியல் மனிதர் களால் நிரம்பி இருக்கிறது. ஆனால் ஒழுக்கமும் தைரியமும் விவேகமும் உள்ளவர்களை இது ஏமாற்ற முடியுமா என்ன? இந்த உலகம் எதைச் சொல்கிறதோ சொல்லட்டும் நான் என் கடமையைச் செய்கிறேன் இதுதான் ஒரு வீரனின் செயல்முறையாக இருக்க வேண்டும் அப்படியில்லாமல் இவன் என்ன சொல்கிறான் அவன் என்ன எழுதுகிறான் என்பதிலேயே இரவும் பகலும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தால் இந்த உலகத்தில் பெரும் காரியங்கள் எதையும் சாதிக்க முடியாது
--
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 -

No comments:
Post a Comment